Author: Editor web3

அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பதில் தவறு கிடையாது. தமிழக அரசியலுக்கு அது பொருந்தாது என முதல்வர் தெரிவித்திருக்கிறார். எப்படி பொருந்தி வராது என்பதை விளக்குவார் என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரசும் உள்ளது. தி.மு.க. கூட்டணி மிகவும் கட்டுக்கோப்பாக உள்ளது. மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான கோரிக்கை அல்ல, ஒட்டு மொத்தமாக மக்களின் கோரிக்கை. இந்தியா முழுவதும் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. புள்ளி விவரங்கள் இந்த உண்மையை தெரிவிக்கிறது. தமிழகத்தில் மதுக்கடைகளை அடுத்தடுத்து படிப்படியாக குறைத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் கட்சி மாநாட்டில் வலியுறுத்தி வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக உள்ளோம். அது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை…

Read More

அமெரிக்காவின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக, ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 40.48% குறைந்துள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகம் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தகத்தில் அமெரிக்காவின் அழுத்தத்தின் தாக்கம் இப்போது தெளிவாகத் தெரிகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட வர்த்தகத் தரவுகளின்படி, ஜனவரி 2026 இல் ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 40.48 சதவீதம் குறைந்துள்ளதாகக் காட்டுகின்றன. ஒரு வருடத்திற்கு முன்பு இந்தியா ரஷ்யாவிலிருந்து $4.81 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்திருந்தாலும், இந்த எண்ணிக்கை இப்போது $2.86 பில்லியனாகக் குறைந்துள்ளது. ரஷ்ய இறக்குமதியில் ஏற்பட்ட இந்த சரிவு, அமெரிக்காவின் தொடர்ச்சியான அழுத்தம், அதிக வரிகள் மற்றும் இப்போது, ​​வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் ஆகியவற்றின் கலவையின் விளைவாகும். இந்தியா ரஷ்யாவிலிருந்து பெரிய அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது. இது ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் மொத்த இறக்குமதியில் தோராயமாக 80% ஆகும். 2023 முதல் 2025 வரை, அதாவது, கடந்த மூன்று ஆண்டுகளில்,…

Read More

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2026- 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசு அமைந்ததுடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று சட்டசபைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் அழைப்பிதழ் ஒன்று எடுத்து சென்றனர். அதில், “காது குத்தும் விழா” என குறிப்பிட்டிருந்தது. பட்ஜெட் என்ற பெயரில் தமிழக மக்களுக்கு காது குத்தும் விழா என அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. மேலும் அந்த அழைப்பிதழில் “கூவம் சுத்திகரிப்பு, மழைநீர் வடிகால், சிங்கார சென்னை போன்ற திட்டங்களுக்கு விதவிதமாக காது குத்தப்படும். “காது குத்து விழாவுக்கு தலைமை தாங்குபவர் தமிழக முதல்வர் ஸ்டாலின், காது குத்துபவர் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இடம் சட்டசபை வளாகம், நேரம் : காலை 10 மணி” என குறிப்பிடப்பட்டு விமர்சித்திருந்தனர். ஆனால், நேற்றைய பட்ஜெட் அறிவிப்பில் புதிய அறிவிப்புகள்…

Read More

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்  மார்ச் 16ம் தேதி என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதியோடு 6 உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் போல அல்லாமல் மாநிலங்களவைத் தேர்தலில் மக்களால் நேரடியாக வாக்களிக்க முடியாது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிப்பார்கள். 34 எம்எல்ஏக்களுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என்ற கணக்கீட்டில் எம்.பி. தேர்ந்தெடுக்கப்படுவார். காலியாகும் இடங்களுக்கு அதிகமாக வேட்பாளர் போட்டியிடும்பட்சத்தில் வாக்குப்பதிவு நடைபெறும். காலியாகும் இடங்களுக்கேற்ப அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். இந்தநிலையில், தமிழகத்தில் என்.ஆர். இளங்கோ (திமுக), பி.செல்வராசு(திமுக), எம்.தம்பிதுரை (அதிமுக), திருச்சி சிவா (திமுக),  கனிமொழி என்.வி.என் சோமு(திமுக), ஜி.கே.வாசன்(தமிழ் மாநில காங்கிரசு)  ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த ஆறு…

Read More

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து விலை சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்திருந்தது. அதன்படி,  ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 440-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் குறைந்து காணப்பட்டது.  கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 320-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 560-க்கும் விற்பனை ஆனது. சென்னையில் 3வது நாளான  இன்று(பிப்.18) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது தங்கம் விலை கிராமுக்கு ரூ.90  குறைந்து ரூ.14,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வார தொடக்கம் முதல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை…

Read More

2026 டி20 உலகக் கோப்பையில் முன்னாள் சாம்பியன்களான ஆஸி-ன் பயணம் இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. குரூப் பி-யில் தங்கள் இடத்தைப் பெற அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே இடையேயான போட்டியின் முடிவை ஆஸ்திரேலியா எதிர்பார்த்துக் கொண்டிருந்தது, ஆனால் மழை அவர்களின் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தது. பல்லேகலேவில் நடந்த அயர்லாந்து – ஜிம்பாப்வே இடையேயான போட்டி கைவிடப்பட்டது, இதனால் ஆஸ்திரேலியா உலகக்கோப்பைதொடரில் இருந்து வெளியேறியது. இந்த முடிவு கேப்டன் மிட்செல் மார்ஷ் தலைமையிலான அணியின் கைகளில் நேரடியாக இல்லை என்றாலும், தொடக்க ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்விகள் அவர்களை இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆழ்த்தின. ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கியது, ஆனால் ஜிம்பாப்வே மற்றும் இலங்கைக்கு எதிரான அடுத்தடுத்த தோல்விகள் அவர்களின் பாதையை கடினமாக்கியது. ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்தின் ஒரு முடிவு தற்போது பரவலான கவனத்தை ஈர்த்து வருகிறது. இலங்கைக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியில் இருந்து மூத்த பேட்ஸ்மேன் ஸ்டீவ்…

Read More

தமிழக அரசியலில் தேர்தல்கள் நெருங்கும் வேளையில் கட்சித் தாவல்களும், அரசியல் மாற்றங்களும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டன. அந்தவகையில், அனைத்து அரசியல் கட்சிகளிலும், மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவிலேயே இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நிலவுகின்றனர். அந்தவகையில் ஜெயலலிதாவின் நம்பிக்கை முகமாக திகழ்ந்த செங்கோட்டையன் விஜய்யின் தவெகவிற்கு சென்று விட்டார். இதுவே மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இருப்பினும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு டிடிவி தினகரன் வந்துவிட்டார். இதனால் வாக்கு சிதறாமல் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் ஓ.பி.எஸையும் கூட்டணியில் இழுக்க பல கட்ட பேச்சுவார்த்தைகளும் நடக்கிறது. ஆனால் அதிமுகவில் இடமில்லை என எடப்பாடி கூறிவிட்டார். இதனால் அமைதி காத்து வந்த ஓ.பி.எஸுக்கு பேரிடியாக அமைந்தது அவரது ஆதரவாளரான வைத்திலிங்கம், திமுகவில் இணைந்தது. இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலும் திமுகவில் இணைந்துவிட்டார். போகிறவர்கள் போகட்டும் என்ற மன நிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளில்…

Read More

தவெகவில் வேட்பாளர் பட்டியல் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சீட் விவகாரத்தில் முரண்பாடு காரணமாக 30க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2026க்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் திமுக ,அதிமுக ,நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகளிடையே நான்கு முனை போட்டி நிலவு உள்ளது. இதில் விஜயின் தமிழக வெற்றி கழகம் முதல் முறையாக அரசியல் களத்தில் தேர்தலை சந்திக்க உள்ளது. இது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மக்களிடையே நடிகராகவே பார்க்கப்பட்டு வந்த விஜய், முதன் முறையாக அரசியல் களத்தில் வேட்பாளராக களம் இறங்க உள்ளார். தொடர்ந்து தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் முதன்மை சக்தியாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் முன்னெடுப்பு நடவடிக்கையாக விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பரப்புரையை…

Read More

பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் பிரதமருமான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கபில் தேவ், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட 14 முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டனும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து பதினான்கு முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், சிறையில் இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இம்ரான் 800 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது, இது சிறையில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேள்விகளையும் கவலைகளையும் எழுப்புகிறது. இம்ரான் கானுக்கு சிறையில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் அவரது உடல்நலக் குறைவு குறித்து இம்ரான் கானின் சகோதரி அலீமா கானும் குரல் எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், இந்திய ஜாம்பவான்கள் கபில் தேவ்,…

Read More

வங்கதேசம் இன்று ஒரு வரலாற்று மாற்றத்தைக் கண்டது, நாட்டின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுக்கொண்டார். வங்காளதேச தேசியக் கட்சியின் தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மான் இப்போது அதிகாரத்தை ஏற்றுக்கொண்டார். அவர் நாட்டின் 11வது பிரதமராகியுள்ளார். பொதுத் தேர்தலில் அவரது மகத்தான வெற்றியுடன், இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. டாக்காவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தின் தெற்கு பிளாசாவில் மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். திய அரசாங்கத்தின் அமைச்சரவையுடன் தாரிக்கும் பதவியேற்றார். இவர்களில் டாக்டர் கலிலுர் ரஹ்மான் (வெளியுறவு அமைச்சர்), சலாவுதீன் அகமது (உள்துறை அமைச்சர்), டாக்டர் அமீர் கஸ்ரு மஹ்மூத் (நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர்) மற்றும் ஷாமா ஒபைத் (வெளியுறவுத் துறை அமைச்சர்) ஆகியோர் அடங்குவர். இந்தப் பதவியேற்பு விழாவிற்கு உலகம் முழுவதும்…

Read More