Author: Editor web3

நமீபியாவில் முத்தத்தின் மூலம் பரவியதாக நம்பப்படும் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் தாக்கம் காரணமாக 2 வயது குழந்தைக்கு கண் பார்வை இழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நமீபியாவைச் சேர்ந்த பெண் மிஷேல் சாய்மான். இவரது 2 வயது குழந்தை ஜுவன். இந்த குழந்தைக்கு அரிய வகை வைரஸ் தொற்றால் கண் பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது, இது தொடர்பாக குழந்தையின் தாய் மிஷேல் கூறியதாவது, சாதாரண கண் தொற்று என தொடங்கியது, பின்னர் பெரிய பாதிப்பாக மாறியது. முதலில் ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்பட்டாலும், குழந்தையின் கண்ணில் கொப்புளம் உருவானது. அதன் விளைவாக கார்னியாவில் 4 மிமீ துளை ஏற்பட்டது. பல வாரங்கள் சிகிச்சை அளித்தும் பாதிக்கப்பட்ட கண்ணின் பார்வையை காப்பாற்ற முடியவில்லை. “என் குழந்தையின் கண்ணில் 4 மிமீ திறந்த காயத்தைப் பார்ப்பது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது” என்று தாய் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் பரிசோதனையில், ஹெர்பெஸ் வைரஸ் தாக்கமே காரணம்…

Read More

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான ஜோடி விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் வரும் 26ஆம் தேதி உதய்பூர் நகரில் நடைபெற உள்ளது. காதல் குறித்து இதுவரை வெளிப்படையாக அறிவிக்காத இந்த ஜோடி, மிகவும் தனிப்பட்ட முறையில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் மிகச்சில பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வில் செல்போன்களுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த ஊடகத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. புகைப்படங்கள் கசியாமல் இருக்க இந்த கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. திருமணத்தை முழுமையாக தனிப்பட்டதாக வைத்திருக்கவே இந்த நடவடிக்கை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமணத்திற்கு பிறகு மார்ச் 4ம் தேதி ஐதராபாத் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் இந்திய திரையுலகின் பல நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Read More

அமெரிக்க எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் இடம்பெற்றதை அடுத்து பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்  கைது செய்யப்பட்டுள்ளார். பிபிசி அறிக்கையின்படி, பிரிட்டிஷ் போலீசார் அவரது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்தனர். அவர் தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாடும் போது கைது செய்யப்பட்டார். பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, பிரிட்டனின் வர்த்தகத் தூதராகப் பணியாற்றியபோது, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசு ஆவணங்களைப் பகிர்ந்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது வசித்து வரும் நார்ஃபோக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் வைத்து ‘தேம்ஸ் வேலி’  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே எப்ஸ்டீன் உடனான தொடர்புகளால் சர்ச்சையில் சிக்கியிருந்த ஆண்ட்ரூவின் ‘இளவரசர்’ மற்றும் ‘டியூக் ஆஃப் யார்க்’ போன்ற அரசப் பட்டங்களை மன்னர் சார்லஸ் கடந்த 2025-ஆம் ஆண்டே பறித்துவிட்டார். இது தொடர்பாக தேம்ஸ்…

Read More

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பில் 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர். சோல்ஜர் பஜார் பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில், குடியிருப்பு ஒன்றின் முதல் மாடியில் வெடிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் மீட்புக் குழு வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எரிவாயு கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கிழக்கு டிஐஜி டாக்டர் ஃபரூக் லஞ்சார் தெரிவித்தார். இடிபாடுகளுக்கு அடியில் இன்னும்  உடல்கள் புதைந்திருக்கலாம் என்ற அச்சம் இருப்பதாகவும் அவர் கூறினார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வெடிப்புக்கான சரியான காரணம் ரசாயன சோதனைக்குப் பிறகுதான் தெரியவரும் என்று டிஐஜி கூறினார். விசாரணை நடத்தப்படும். கட்டிடம் சட்டப்பூர்வமானதா அல்லது சட்டவிரோதமானதா என்பதை சம்பந்தப்பட்ட துறை தீர்மானிக்கும் என்றும், இது தீர்மானிக்கப்பட்டதும், பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.…

Read More

ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு தொகை வழங்கப்படும் என்று  அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். 2026-27 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டிற்கான தமிழ் நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்படி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மூன்று மாத மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டதும் கோடைக்கால சிறப்பு தொகையாக 2000 வழங்கப்பட்டதும் தேர்தலுக்காகவே என்று விமர்சித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், இனி ஆண்டுதோறும் கோடைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு தொகையாக ரூ 2000 வழங்கப்படும் என்று அறிவித்தார். 2021 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு திமுக அரசு மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. தேர்தலில் வெற்றிப் பெற்றும் 2024 மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் இருந்து தான் இத்தொகை  வழங்கப்பட்டது. இது எதிர்கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இந்த சூழலில்…

Read More

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” 20-02-2026 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்னும் தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பரப்புரைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்திட, மாவட்டக் கழகச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிப் பார்வையாளர்கள் தொகுதி அளவில் பயிற்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கோயம்பேடு சந்திப்பில் மேம்பாலம் கட்ட மத்திய அரசு சுமார் 160 பேரிடம் இருந்து நிலம் எடுக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டது. அந்த பட்டியலில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா பெயரும் இருந்தது. அந்த இடம் தான் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அமைந்திருந்த இடம். இந்த அறிவிப்பால் மண்டபத்திற்கு அபாயம் ஏற்படும் நிலை உருவானது. விஜயகாந்துக்கு இது மிகுந்த மனஅழுத்தம் கொடுத்தது, ஏனெனில் அந்த மண்டபம் அவருக்கு மிக முக்கியமானது. 2005-ல், விஜயகாந்த் திமுக அரசை எதிர்த்து பேசிக்கொண்டிருந்த நேரத்தில், மேம்பாலம் திட்டத்துக்கான நிலம் பெற்றுக்கொள்ள மண்டபம் இடிக்கப்படுவதில் அரசியல் நோக்கம் இருக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்தது. ஏன்னென்றால் அப்போது மத்திய அமைச்சராக இருந்தவர் திமுகவை சேர்ந்தவர் டி.ஆர். பாலு. மண்டபத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில், விஜயகாந்த் 2005 மே 5-ஆம் தேதி நேரடியாக திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இயக்குநர் ராம நாராயணனும் அவருடன் இருந்தார். சந்திப்புக்குப் பிறகு,…

Read More

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”என்னுடைய அரசியல் அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்த வேண்டும் என நச்சரித்து இந்த அரசியல் இயக்கத்தைத் தொடங்க வைத்துள்ளார்கள். எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். பிறப்பைக் கொண்டு புறக்கணிக்கக் கூடாது என்கிற நோக்கத்தோடு திறமை பெற்றிருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவது இந்த அரசியல் இயக்கத்தின் குறிக்கோளாகும். பிறப்பின் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற இந்த சூழ்நிலையை அறவே மறந்து, பிறந்திருக்கும்…

Read More

ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக ரஜினி-கமல் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் மீண்டும் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார். படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று இரவு 7.12 மணிக்கு புதிய படத்தின் அப்டேட் வெளியாகும் என்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் “உலகங்கள் ஒன்றிணையும் போது,ஒரு பக்கம் சாய்வதேது?” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்காக தான் கமலின் பிறந்தநாளான 7 மற்றும் ரஜினியின் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 7.12 மணிக்கு…

Read More

மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் அவரது ஆன்மா மன்னிக்காது என்று தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளது. 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல்களை விட முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் அதிமுக, திமுக-வை எதிர்த்து முதல்முறையாக களம் இறங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் தான். அரசியல் எதிரி, கொள்கை எதிரி என தி.மு.க., பா.ஜ.க. வை எதிர்த்து விஜய் களமிறங்கியுள்ளார். இதனால் விஜய் அரசியலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. இதனிடையே, மறைந்த விஜயகாந்தின் தே.மு.தி.க. திமுக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டது. இதன் மூலம் தமிழக அரசியலில் புதிய திருப்பமாக முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. இதற்கு தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளது. தமிழக பாஜக எக்ஸ் தள…

Read More