Author: Editor web3

அமெரிக்க கிழக்கு கடற்கரையில் திங்கட்கிழமை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது, மேரிலாந்து முதல் மைனே வரையிலான பல மாநிலங்களில் பலத்த காற்று மற்றும் பனிப்புயல் எச்சரிக்கைகள் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர். கடந்த பத்தாண்டுகளில் இதுவே மிகவும் வலிமையான புயல் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பனிப்புயல் காரணமாக சுமார் 5,600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் பனி மலைபோலக் குவிந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நியூயார்க் மற்றும் பாஸ்டன் நகரங்களில் உள்ள பொதுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல வணிக நிறுவனங்களும், அருங்காட்சியகங்களும் மூடப்பட்டுள்ளன. நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க்கில் 19 இன்ச் அளவிற்கும், ரோட் தீவின் வார்விக் பகுதியில் 3 அடி அளவிற்கும் பனி கொட்டியுள்ளது. மணிக்கு 133 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.…

Read More

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்தக் கூட்டணியில் பாஜக தரப்பில் சுமார் 40 தொகுதிகள் வரை கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும், கடந்த காலத் தேர்தல் முடிவுகள் மற்றும் அதிமுகவின் பலத்தைக் கணக்கில் கொண்டு, அக்கட்சித் தலைமை பாஜகவுக்கு 25 முதல் 30 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கத் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கையில் உடன்பாடு எட்டப்படாததால், இரு தரப்பிலும் இழுபறி நீடித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதிகளின் எண்ணிக்கை ஒருபுறம் இருக்க, ‘சின்னம்’ தொடர்பான விவகாரம் மற்றொரு சிக்கலாக உருவெடுத்துள்ளது.  NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சி மற்றும் தமமுக (தமிழ் மாநில முஸ்லிம் லீக்) உள்ளிட்ட சிறிய கட்சிகளைத் தங்களது ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிடச் செய்ய பாஜக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதன் மூலம் சட்டமன்றத்தில்…

Read More

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில், “இதயதெய்வம் “அம்மா” அவர்களின் 78வது பிறந்த நாளில், அம்மாவின் நெடும் புகழை போற்றுகிறோம், “அம்மா” எங்களின் அடையாளம் … ஏழைகளின் நம்பிக்கை, பெண்களின் தைரியம், தாய்மையின் உருவம். அதிகாரம் அவரை உயர்த்தவில்லை; மக்கள் மீது கொண்ட அன்பே அவரை உயர்த்தியது. புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தீர்மானமும், வறுமை ஒழிப்புக்கான உலகளாவிய தரநிலைகளை நிறுவி ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது. சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர். We Take a leaf out of your book in all of our actions for the people Amma ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று அம்மா சொன்னதைப் போல, அதிமுக என்றென்றும்…

Read More

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சர்வதேச நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நாடாளுமன்ற நட்புறவுக் குழுக்களை (Parliamentary Friendship Groups) அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளார். உலக நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படவுள்ள இக்குழுவில், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்களான ப.சிதம்பரம், கனிமொழி, டி.ஆர். பாலு மற்றும் தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்தந்த நாடுகளுக்கான பிரத்யேகக் குழுக்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவின் முதன்மை நோக்கம், இந்தியாவுடன் நல்லுறவைக் கொண்டுள்ள மலேசியா, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதாகும். இக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு, ஜனநாயக பண்புகள் மற்றும் நாடாளுமன்ற செயல்பாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இதன் மூலம் சர்வதேச அளவில் கொள்கை ரீதியான புரிதலையும், நாடுகளுக்கு இடையிலான நட்புறவையும்…

Read More

தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக தலைமையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தொண்டர்கள் அதிமுகவில் இணையத் தொடங்கியுள்ளனர். தேமுதிகவினர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் அதிமுகவில் இணைவார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே, தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக இந்த இடமாற்றம் நிகழ்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேமுதிக மற்றும் இதர கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அக்கட்சியிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். நன்னிலத்தில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான ஆர். காமராஜ் முன்னிலையில் அனைவரும் கட்சி வேட்டியை அணிந்து கொண்டு தங்களை முறைப்படி இணைத்துக் கொண்டனர். ராஜேந்திர பாலாஜி ஆரூடம் சொன்ன மூன்றே நாட்களில் இவ்வளவு…

Read More

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளான இன்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. சென்னையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் இருக்கும் ஜெயலலிதா சிலைக்கு ஆண்டுதோறும் மாலை அணிவித்து மரியாதை செய்வதை ஓபிஎஸ் வழக்கமாக வைத்திருந்தார். இந்த ஆண்டும் அங்கு மாலை அணிவிப்பதாக முதலில் அறிவித்திருந்த நிலையில், திடீரென அந்த முடிவை மாற்றி, தனது சொந்த தொகுதியான போடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதாக அறிவித்துள்ளார். ஓபிஎஸ்-ஸின் இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின்னால் பெரிய அரசியல் பின்னணி இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ், திமுக வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகப் புகழ்ந்து பேசியிருந்தார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து அவர் விரைவில் திமுகவில் இணையக்கூடும் அல்லது அந்த அணியில்…

Read More

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் இணையவுள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் புதிய படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. கடந்த பிப்ரவரி 21 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் புரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைவதால், இந்தத் திரைப்படம் கோலிவுட்டின் மிகப்பெரிய ‘மெகா பட்ஜெட்’ படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணிக்கு வழங்கப்படவுள்ள சம்பளம் குறித்துப் பல்வேறு தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, இந்தப் படத்திற்காக ரஜினிகாந்துக்கு சுமார் ரூ.225 கோடி சம்பளமாகப் பேசப்பட்டதாக கூறப்பட்டது. அதாவது சமீபத்தில் வெளியான ‘ஜனநாயகன்’ படத்திற்காக நடிகர் விஜய் ரூ.210 – ரூ.220 கோடி வரை சம்பளம் பெற்றதால் இதற்கு இணையாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் சம்பளம் பேசப்பட்டதாக…

Read More

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று பசும்பொன்னில் சசிகலா பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார். இதில் தனிக்கட்சி அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 24, 2026), வி.கே. சசிகலா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடத்தும் இந்த எழுச்சி மாநாடு போன்ற கூட்டத்தில், தனது புதிய அரசியல் கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சசிகலாவின் இந்த அதிரடி அரசியல் நகர்வு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்திற்காக தென்மாவட்டங்களில் இருந்து சுமார் 25,000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களைத் திரட்டி, தனது பலத்தை நிரூபிக்க சசிகலா திட்டமிட்டுள்ளார். இதற்காகக் கடந்த சில வாரங்களாகவே அவர் தென்மாவட்டங்களில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது…

Read More

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை யொட்டி (பிப்ரவரி 24), பிரதமர் நரேந்திர மோடி அவருக்குத் தனது இதயப்பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் என்றும், கருணைமிக்க தலைவராகவும், மிகச்சிறந்த நிர்வாகியாகவும் அவர் அனைவராலும் மதிக்கப்படுபவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். குறிப்பாக, ‘அம்மா’ என்று அன்புடன் அழைக்கப்படும் ஜெயலலிதாவின் பெயரைக் கேட்டாலே தமிழக மக்களின் முகத்தில் ஒரு பொலிவு உண்டாவதை இன்றும் தன்னால் உணர முடிகிறது என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி…

Read More

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு மேல் சிகிச்சைக்காக ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம், நேற்று (பிப்ரவரி 23) இரவு சத்ரா மாவட்டத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது. ரெட் பேர்ட் ஏர்வேஸ் (Redbird Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த பீச்கிராஃப்ட் C90 (Beechcraft C90) ரக விமானம், ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்திலிருந்து இரவு 7:11 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களில், அதாவது இரவு 7:34 மணியளவில் கொல்கத்தா வான்வழி கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்னர் சிமாரியா பகுதியில் உள்ள கசாரியா காடுகளில் விமானம் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த நோயாளி சஞ்சய் குமார், மருத்துவர் விகாஸ் குமார் குப்தா, உதவியாளர் சச்சின் குமார் மிஸ்ரா, நோயாளியின் உறவினர்களான அர்ச்சனா தேவி மற்றும் துரு குமார், மற்றும் விமானிகள் விவேக் விகாஸ் பகத், சவ்ராஜ்தீப்…

Read More