Author: Editor web3

சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு தொடர்பாக விசாரணைக்கு நேரரில் ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் – சங்கீதா திருமணம் 1999 ஆகஸ்ட் 25 அன்று சங்கீதாவை திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜேசன் சஞ்ஜை என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். நடிகராக விஜய் இருந்த போதும் சங்கீதா அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தொடுத்துள்ளார். இது அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 24-ந்தேதி சங்கீதாவின் தாக்கல் செய்த இந்த மனு, வருகின்ற ஏப்ரல் 20-ந்தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வர உள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்றும்…

Read More

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் ‘ஆபரேஷன் கசாப் லில் ஹக்’ (Operation Ghazab lil-Haq) என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் நிலைகள் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. காபூல், கந்தகார், பக்தியா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தாலிபான் ராணுவ முகாம்கள் மற்றும் வெடிபொருட்கள் சேமிப்பு கிடங்குகள் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்துள்ளன. சுமார் 133 தாலிபான் வீரர்கள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. முன்னதாக ஆப்கான் படைகள் நடத்திய தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தாலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தானின் சில எல்லைச் சாவடிகளைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், “எங்கள் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு, இது ஒரு திறந்த போர்” என்று அறிவித்துள்ளார். இந்த மோதலுக்குப் பின்னால் நீண்ட கால வரலாறும், முக்கியப்…

Read More

தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து சங்கீதா கூறியுள்ள தகவல்கள் என்ன என்பதை பார்க்கலாம். விஜய்க்கும் சங்கீதாவிற்கும் கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இது நாம் அறிந்ததே. அப்படியிருக்கையில் கடந்த சில வருடங்களாகவே விஜய்யும் சங்கீதாவும் ஒன்றாக இல்லை. அவர்களுக்கு நடுவே பிரச்சனை உள்ளது என பொதுவெளியில் பேசப்பட்டு வந்தது. ஆனால், இது தொடர்பாக இருவரும் பொதுவெளியில் ஏதும் பேசாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் திருமணமாகி 27 வருடங்களுக்கு பிறகு விஜய்யின் மனைவி சங்கீதா தற்போது விவாகரத்து கோரியுள்ளார். விவாகரத்து கோரியது தொடர்பான காரணங்களாக சங்கீதா தனது மனுவில், “நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்தது எனக்கு 2021 ஏப்ரல் மாதம் தெரிய வந்தது. அதை நான் கண்டுபிடித்த பிறகும் நடிகையுடன் திருமணத்தை…

Read More

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியான யுபிஐ ( UPI ) கட்டண முறை, இப்போது இஸ்ரேல் நாட்டிற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த அறிவிப்பின் மூலம் இஸ்ரேலுக்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இனி அந்நாட்டு நாணயத்திற்கு அலைந்து திரியத் தேவையில்லை. இந்தியாவில் பயன்படுத்துவதைப் போலவே, அங்குள்ள கடைகளிலும் போன்பே (PhonePe), கூகுள் பே (Google Pay) அல்லது பீம் (BHIM) செயலிகள் மூலம் நேரடியாகப் பணம் செலுத்த முடியும். இந்தியாவின் யுபிஐ முறையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதன் மூலம், இந்தச் சேவையை வழங்கும் நாடுகளின் பட்டியல் மேலும் நீண்டுள்ளது. UPI ஏற்கனவே பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் UPI ஐ ஏற்றுக்கொண்ட முதல் நாடு பூட்டான் ஆகும், இதன் மூலம் சில்லறை விற்பனை நிலையங்களில் எளிதாக பணம்…

Read More

திமுகவில் இணைந்த ஒ.பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி சட்டமன்றச் செயலாளர் சீனிவாசனுக்கு அதிமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து  சட்டமன்றத்திற்கு சென்ற ஓ. பன்னீர்செல்வம், சட்டமன்றச் செயலாளரை நேரில் சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக ஆட்சியில் 3 முறை முதலமைச்சராக இருந்துள்ள ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இது ”உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் செயல்” என்று அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த சூழலில் திமுகவில் இணைந்த ஒ.பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சட்டமன்றச் செயலாளர் சீனிவாசனிடம், அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொரடா…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோருக்கு இடையே விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி மீண்டும் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்”. மேலும், இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகவும், ஒரு நடிகையுடனான தொடர்புதான் இந்தப் பிரிவுக்குக் காரணம் என்றும் சில இணையதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. விஜய்-சங்கீதா விவாகரத்து குறித்த வதந்திகள் கடந்த 2023-ம் ஆண்டிலிருந்தே அவ்வப்போது கிளம்பி வருகின்றன. குறிப்பாக, முக்கியக் குடும்ப விழாக்கள் மற்றும் கட்சி மாநாடுகளில் சங்கீதா பங்கேற்காதது இத்தகைய ஊகங்களுக்கு வழிவகுத்தது. தற்போதைய தகவலும் பெரும்பாலும் அதிகாரப்பூர்வமற்ற சில இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களிலேயே அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.…

Read More

காசி மற்றும் கயாவுக்குப் புனித யாத்திரை சென்ற தமிழர்கள் 22 பேர் பயணித்த பேருந்து, பீகாரின் ரோத்தாஸ் மாவட்டம், ஜமுஹார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்துப் பேருந்து ஓட்டுநர் சோனு குமார் அளித்துள்ள வாக்குமூலம் அதிர வைக்கிறது. “நாங்கள் வாரணாசியிலிருந்து கயா நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். அப்போது பின்னால் வந்த ஒரு லாரி, வேண்டுமென்றே எங்களது பேருந்தின் பக்கவாட்டில் பலமாக மோதியது. மோதியதுடன் நிற்காமல், பேருந்தை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை அந்த லாரி இழுத்துச் சென்றது” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் பேருந்தின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராமு (72) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். பேருந்தில் இருந்த பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேரின் நிலைமை…

Read More

இந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். நேற்று பிப்ரவரி 26-ம் தேதி உதய்பூரில் மிக எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, இன்று புது டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்திற்குச் சென்றனர். அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த அவர்கள், தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான முதல் பத்திரிகையை வழங்கி ஆசி பெற்றனர். பிரதமரைச் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அந்தப் புகைப்படங்களில், விஜய் வெள்ளை நிற பாரம்பரிய உடையிலும், ராஷ்மிகா அழகான இளஞ்சிவப்பு நிறப் புடவையிலும் காட்சியளிக்கின்றனர். இந்தப் பதிவில், “நமது மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் அன்பான…

Read More

வங்கதேசத்தின் சத்குரா (Satkhira) மாவட்டம், ஆசாசுனி பகுதியில் இன்று மதியம் 1:52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியில் இருந்து சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலைக்கொண்டிருந்த நிலநடுக்கம், இந்திய எல்லையையொட்டிய நயாபஜார் பகுதிக்கு மிக அருகாமையில் நிகழ்ந்துள்ளது என வங்கதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிக வலுவாக உணரப்பட்டன. கொல்கத்தாவின் பல பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு  வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். சுமார் 10 வினாடிகள் வரை இந்த அதிர்வுகள் நீடித்ததாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்க சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த போது அதிர்வுகள் உணரப்பட்டதால், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக அவையிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா மற்றும் பிற பகுதிகளில் நிலநடுக்கத்தால் பீதி ஏற்பட்டாலும், இதுவரை உயிர்ச் சேதமோ அல்லது பெரிய அளவிலான கட்டிட பாதிப்புகளோ…

Read More

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் 1ஆம் தேதி (01.03.2026) ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணி முதல், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகச் செயல் வீரர்கள் கூட்டம் முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தக் கூட்டத்தில், தேர்தல் பரப்புரைப் பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட கழகத்தின் அடுத்த கட்டச் செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, கழகத் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தது போல, கலந்தாலோசிக்கப்பட உள்ளது. தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்பில், அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இக்கூட்டங்களில் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணியினர் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Read More