Author: Editor web3
நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்க இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,545 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர். இந்தநிலையில், நாளை பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில், நாளை பொதுத்தேர்வை எழுதவுள்ள பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், எதிர்வரும் 11-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் வாழ்த்துகள்! பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள். உங்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உறுதியுடன் படித்திடும் உங்களுக்கு ஊக்கமளித்து உயர்த்திட நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது. #AllTheBest என்று கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசு விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, மத்திய – மாநில அமைச்சர்கள், அரசுத்துறை அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த விழாவில் ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் படி அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட காரைக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூா், சோழவந்தான், மணப்பாறை, திருவாரூா், மொரப்பூா், பொள்ளாச்சி, பொம்மிடி ஆகிய 8 ரயில் நிலையங்களையும், சென்னை கடற்கரை – எழும்பூா் நான்காவது ரயில் தடத்திலான சேவையையும் மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தார். மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மரக்காணம் – புதுச்சேரி, பரமக்குடி – ராமநாதபுரம் நான்குவழிச் சாலை அமைக்கும் பணிக்கு பிரதமா் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கும்பகோணம், ஏற்காடு, வேலூர் ஆகிய மூன்று புதிய ஆகாசவாணி பண்பலை வானொலி…
மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் மற்றும் உக்ரைன் – ரஷ்யா போர் என உலக நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சம் உலகளவில் எழுந்துள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வைரலாகி வரும் ஒரு ஆய்வறிக்கை வீடியோவில், போர் மூண்டால் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடாக சுவிட்சர்லாந்து இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் மலைப்பாங்கான புவியியல் அமைப்பு, பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றி வரும் நடுநிலை கொள்கை மற்றும் அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் போதுமான பாதாள பாதுகாப்பு பதுங்கு குழிகள் இருப்பது இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அதே வேளையில், போர் முனைகளாக மாற வாய்ப்புள்ள ஜப்பான், தைவான், இஸ்ரேல், உக்ரைன் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் மிக மோசமான பாதிப்புகளைச் சந்திக்கும் என அந்த வீடியோ எச்சரிக்கிறது. ஒருவேளை மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால், இந்தியா தனது பாரம்பரியமான ‘அணிசேராக் கொள்கையை’ மீண்டும்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பமாக, அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், மூன்று முறை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27, 2026) அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தனது மகன் ரவீந்திரநாத் குமாருடன் அவர் இணைந்தது, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தாய் கழகத்திற்கே திரும்பிவிட்டேன்” என ஓபிஎஸ் உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்த நிலையில், அவருக்கு வழங்கப்படப்போகும் முக்கியப் பொறுப்பு குறித்து அறிவாலய வட்டாரத்தில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் போன்ற உயரிய பதவிகளை வகித்த அனுபவம் கொண்ட ஓபிஎஸ்-க்கு, திமுகவில் அவரது தகுதிக்கு இணையான கௌரவமான பொறுப்பை வழங்க ஸ்டாலின் திட்டமிட்டு வருகிறார். முதற்கட்டமாக, அவருக்கு திமுகவின் ‘துணை பொதுச்செயலாளர்’ பதவி வழங்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. தெற்கு மாவட்டங்களில், குறிப்பாக முக்குலத்தோர் சமூக…
புதுச்சேரி மாநிலம் தென்னிந்தியாவின் மிக முக்கியமான ‘மருத்துவச் சுற்றுலா மையமாக’ மாறி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டமைப்புகள் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். அங்கிருந்து லாஸ்பேட்டை ஹெலி பேடு மைதானத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி ரூ.1,571.73 கோடி மதிப்பிலான 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது தவிர பிரதமர் மோடி ரூ.1,142.23 கோடி மதிப்பில் 19 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது விழாவில் பேசிய பிரதமர் மோடி, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் (JIPMER) போன்ற உயர்தர மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அதிநவீன தனியார் மருத்துவமனைகள், அண்டை மாநில மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளையும் ஈர்த்து வருகின்றன.…
தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினம் இன்று. தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு செயலாற்றி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நேர்மறையான சில பக்கங்களை, அதிலுள்ள முக்கிய நகர்வுகளை, அதிமுக்கிய நடவடிக்கைகளை இந்த கட்டுரையில் காண்போம். மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கும் தயாளு அம்மாள் அவர்களுக்கும் 1953 ஆம் ஆண்டு மார்ச் 1ம் தேதி அவர்களது 3-வது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். சென்னை சேத்துப்பட்டு கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றவர், விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்தார். 1973-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்றார். பின்னாட்களில் ஆகஸ்ட் 1, 2009 அன்று அண்ணா பல்கலைக்கழகம் மு.க. ஸ்டாலினுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது. கலைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின் சில நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.…
ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு மத்தியில் துபாய் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட, இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து, தான் கண்ட அதிர்ச்சி சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக துபாய் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பி.வி. சிந்து கடந்த 8 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு சிக்கியுள்ளார். தான் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக பி.வி. சிந்து தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் புகையும் இடிபாடுகளும் தன் பயிற்சியாளருக்கு மிக அருகிலேயே இருந்ததால், அவர் உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓட வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். “நிலைமை ஒவ்வொரு மணிநேரமும் மோசமாகி வருகிறது. தலைக்கு மேல் ஏவுகணைகள் இடைமறிக்கப்படுவதைக் கேட்பதும், போர் இவ்வளவு வேகமாகத் தீவிரமடைவதைப் பார்ப்பதும் மிகவும் அச்சமாக இருக்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார். தற்போது துபாய்…
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மரணத்திற்குப் பிறகும் பதற்றம் தணியவில்லை. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்கின்றன, ஈரான் பதிலடித் தாக்குதல்களால் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று இரவு முதல் தெஹ்ரான் மீது பெய்த ஏவுகணைகள் மற்றும் குண்டுளை முன்னெப்போதும் இல்லாத வகையில் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. . இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், “ஈரான் இன்று மிகப் பெரிய தாக்குதலை நடத்தப்போவதாகக் கூறியுள்ளது. ஆனால் அவர்கள் அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது. மீறிச் செய்தால், அவர்கள் இதுவரை பார்த்திராத அளவுக்கு ஒரு பயங்கரமான பலத்துடன் நாங்கள் பதிலடி கொடுப்போம்” என்று எச்சரித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் “சிங்கத்தின் கர்ஜனை” என்று குறியீட்டுப் பெயரிட்டுள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா அதன் நடவடிக்கைக்கு “எபிக் ஃப்யூரி”(Epic Fury) என்று பெயரிட்டுள்ளது. இதற்கிடையில், ஈரானிய இராணுவம் பதிலடித் தாக்குதல்களுக்கு…
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மரணத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், காமேனியின் மரணச் செய்தி வெளியானதை அடுத்து, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஷியா முஸ்லிம்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். சில போராட்டக்காரர்கள் அமெரிக்க துணைத் தூதரக வளாகத்திற்குள் நுழைந்து அதை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் போது, 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காமேனியின் மரணத்திற்குப் பிறகும் ஈரான் பின்வாங்கவில்லை என்றும், ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின்…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டால், இரு நாடுகளுடனும் நல்லுறவை பேணி வரும் இந்தியா பெரும் பொருளாதார மற்றும் வெளியுறவுத்துறை சவால்களை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, மத்திய கிழக்கு பகுதியில் ஏற்படும் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு அதன் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக அதிகரித்து போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வதோடு, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை நோக்கி நகர்வதால் தங்கத்தின் விலையும் கிடுகிடுவென உயரும் அபாயம் உள்ளது. பொருளாதார பாதிப்புகள் மட்டுமின்றி, ஈரானில் இந்தியா மேற்கொண்டுள்ள நீண்டகால வியூக முதலீடுகளும் இப்போரால் கேள்விக்குறியாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு பாகிஸ்தானை தவிர்த்து மாற்று வழியில் வர்த்தகம் செய்வதற்காக, ஈரானில் இந்தியா பெரும் பொருட்செலவில் முதலீடு செய்து மேம்படுத்தியுள்ள ‘சபாஹர் துறைமுகத் திட்டம்’ (Chabahar Port) பெரும்…