Author: Editor web3
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர விமான நிறுவனங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்தவகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருந்து புறப்பட்ட எதிஹாட் (Etihad) விமானம் திங்கட்கிழமை இரவு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இந்த விமானத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இந்தியப் பயணிகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி விமான நிலையத்தின் முனையம் 3-ல் காத்திருந்த உறவினர்கள், பயணிகள் வெளியே வந்ததும் கண்ணீர் மல்க அவர்களை வரவேற்றனர். சவுதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து சிக்கித் தவிக்கும் பயணிகளை அழைத்து வர மார்ச் 3-ம் தேதி (இன்று) 10 சிறப்பு நிவாரண விமானங்களை இயக்க இண்டிகோ திட்டமிட்டுள்ளது. வளைகுடா நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளதாலும், போர் பதற்றத்தாலும் மார்ச் 3-ம் தேதி மட்டும் சுமார் 158 சர்வதேச விமானங்களை இண்டிகோ ரத்து செய்துள்ளது.…
ஈரான் முழுவதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் சரமாரியாக நடத்திய தாக்குதல்களில் பள்ளி மாணவிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்தும் நீண்டதூர ஏவுகணைகள், டிரோன்களை வீசி ஈரான் கலங்கடித்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 6 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஈரான், அமெரிக்க போர் இன்று 4-வது நாளாக எந்தவித பின்னடைவும் இன்றி தொடர்ந்து வருகிறது. அந்தவகையில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறி வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் அமெரிக்க தூதுரகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரு டிரோன்கள் மூலம் நடந்த தாக்குதலில் கட்டடம் தீப்பிடித்ததுடன், கடுமையாக சேதமடைந்துள்ளதாக சவுதி அரேபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள தங்களது ராணுவத் தளங்களுக்கு தேவையின்றி யாரும் செல்ல வேண்டாம் என அமெரிக்கா…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையிலான சந்திப்பு டெல்லியில் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. மித் ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையானது சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த முறை எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் வேறு எந்தத் தலைவர்களும் செல்லவில்லை. அவர் மட்டும் தனியாகச் சென்று ஆலோசனையில் ஈடுபட்டார். ஞாயிற்றுக்கிழமை மதுரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் நடந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்த டெல்லி சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அதிமுக தரப்பில் பாஜகவுக்கு 35 இடங்கள் ஒதுக்க முன்மொழியப்பட்டது. பாஜக தரப்பில் குறைந்தது 35 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் கோரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாஜக தரப்பில் கூடுதல் இடங்கள் (குறிப்பாக 35-க்கும் மேல்) மற்றும் சில குறிப்பிட்ட தொகுதிகள் கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பாமக, தமாகா,…
ரயில்வே தண்டவாளங்கள், மின்சாரப் பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் தரப்பில் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில்,” உயர் அழுத்த மின்சாரப் பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவது என்பது விளையாட்டல்ல.. அது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் செயல். 25000 வோல்ட் மின்சாரம் பாயும் கம்பி மீது பட்டம்விடும் நூல் சிக்கினால் பட்டம் விடுபவர் மீது மின்சாரம் பாயும். தண்டவாளம் அருகே பட்டம் விடுபவர்களுக்கு 6 மாதம் சிறை அல்லது ரூ.1000 விதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வீரர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, லீக் சுற்றுடன் வெளியேறியது. இது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பொறுப்பேற்று, அணியில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு வீரருக்கும் தலா லட்சக்கணக்கில் அபராதம் விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்குத் தகுதி பெறத் தவறியதால், தேசிய அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் தலா 5 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் (இந்திய மதிப்பில் தோராயமாக 16 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்திய அணியிடம் தோற்றதுதான் இந்த அபராதத்துக்கு முக்கிய காரணம்…
மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் இடையே வெடித்துள்ள போர் பதற்றம் உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் ஒரே நாளில் 2,743 புள்ளிகள் சரிந்து 70,000 புள்ளிகளுக்கும் கீழ் சென்றது. இது முதலீட்டாளர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 50 நாள் கிட்டத்தட்ட 519 புள்ளிகள் சரிந்து தொடங்கியது. பங்குச்சந்தையின் இந்தத் திடீர் சரிவால், பிஎஸ்இ (BSE) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு குறைந்து, முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட கூர்மையான சரிவு முதலீட்டாளர்களின் செல்வத்தை நேரடியாகப் பாதித்துள்ளது. தரவுகளின்படி, வெள்ளிக்கிழமை பிஎஸ்இயின் சந்தை மூலதனம் ரூ.46,350,671.27 கோடியாக இருந்தது. இருப்பினும், திங்கட்கிழமை சந்தை திறக்கும் நேரத்தில், அது ரூ.44,591,660.60…
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மறைவிற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, இஸ்ரேலின் முக்கிய அரசியல் மையங்களைக் குறிவைத்து ஈரான் இந்தத் தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதில் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகமும் ஒரு முக்கிய இலக்காக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து இன்னும் விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பல ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாகத் தெரிகிறது. நெதன்யாகு பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பிரதமர் அலுவலகமே குறிவைக்கப்பட்டிருப்பது, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான நேரடிப் போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இதற்கு இஸ்ரேல் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ்க்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து சர்வதேச சட்டங்களை மீறி ஈரானின் உயரிய தலைவரைப் படுகொலை செய்துள்ளதாக அரக்ச்சி தனது கடிதத்தில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது ஒரு “பயங்கரவாதச் செயல்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராகப் சர்வதேச சமூகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தனது நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க ஈரானுக்கு முழு உரிமை உண்டு என்றும், இந்தத் தாக்குதலுக்குப் பொருத்தமான நேரத்தில் மற்றும் சரியான முறையில் ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் இத்தகைய…
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவூதி அரேபிய அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவூதி அராம்கோ (Saudi Aramco) மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ‘ராஸ் தனூரா’ (Ras Tanura) பகுதியைக் குறிவைத்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘ராஸ் தனூரா’ சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சவூதி அராம்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. ட்ரோன் விழுந்த இடத்தில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க ஈரான் தனது ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4’ (Operation True Promise 4) மூலம் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க…
மத்திய கிழக்கில் ஈரான் நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டித்து, ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து ஒரு முக்கிய கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்தி வரும் “பொறுப்பற்ற” ஏவுகணைத் தாக்குதல்களை இந்த மூன்று நாடுகளும் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளன. ஈரானின் இந்தத் தாக்குதல்களை எதிர்கொள்ளவும், பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக இந்நாடுகள் அறிவித்துள்ளன. தங்கள் நாட்டு குடிமக்களின் நலன்களையும், நட்பு நாடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய ஈரான் மீது தற்காப்புத் தாக்குதல்களை நடத்தவும் தயங்க மாட்டோம் என அவை எச்சரித்துள்ளன. குறிப்பாக, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவப் பயன்படும் ஈரானின் தளங்களை அழிக்கத் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண…