Author: Editor web3
விளாத்திகுளம் மாணவி கொலை!. குற்றவாளி பிடிபட்ட பிறகும் ஓயாத சர்ச்சை!. அண்ணாமலை எழுப்பும் சந்தேகங்கள்!
விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் தர்ம முனீஸ்வரன் என்ற நபரை காவல்துறையினர கைது செய்துள்ள நிலையில், இந்த விவாகரத்தில் பல்வேறு சந்தேகங்களை அண்ணாமலை எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை. குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு,…
தமிழகத்தில் கோடை வெயில் முன்கூட்டியே தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (Heat Stroke) எனப்படும் வெப்பப் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2°C முதல் 4°C வரை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசியமின்றி வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு உடல் வெப்பம் அதிகரித்து மயக்கம், தலைவலி மற்றும் தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்ப அலையினால் உடல்நல பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ள குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மதிய நேரங்களில் வெளியே செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல், கட்டடத் தொழிலாளர்கள், சாலைப்…
விளாத்திகுளத்தில் ப்ளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்மந்தந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்துள்ளது காவல்துறை. இதில் குற்றவாளி பிடிபட்டது எப்படி? தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளத்தில் சில தினங்களுக்கு முன் ப்ளஸ் 2 மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். காலை இயற்கை உபாதைக்காக சென்ற அவருக்கு இக்கொடுமை நடந்தது. முதலில் வெகு நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததை அடுத்து பெற்றோர் தேடிப்பார்த்துள்ளனர். இருந்தும் மாணவி கிடைக்காததையடுத்து காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர். அப்போது காவல்துறை அலட்சியமாக செயல்பட்டதால் மாணவியை தேடும் பணி விரைவாக தொடங்கப்படவில்லை. அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை பெண் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் தாமதமாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் மாணவி சடலமாக மீட்கப்பட்டார். பிரேதப்பரிசோதனை முடிந்த பின்னரும் மாணவியின் உடலை வாங்காமல், குற்றவாளியை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என பெற்றோரும் உறவினரும் சுமார் 9 நாட்களாக போராட்டத்தில்…
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது நீண்டகாலப் போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்குப் பிறகு, சர்வதேச மற்றும் கிளப் போட்டிகளில் சேர்த்து 900 கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். மார்ச் 18, 2026 அன்று நடைபெற்ற ‘கான்காகேஃப் சாம்பியன்ஸ் கோப்பை’ (CONCACAF Champions Cup) தொடரில், நேஷ்வில் எஸ்சி (Nashville SC) அணிக்கு எதிரான ஆட்டத்தில் இன்டர் மியாமி அணிக்காக விளையாடியபோது மெஸ்ஸி இந்த இமாலய இலக்கை எட்டினார். போட்டியின் 7-வது நிமிடத்திலேயே தனது டிரேட்மார்க் இடது கால் ஷாட் மூலம் கோல் அடித்து அவர் இந்த மைல்கல்லைத் தொட்டார். மெஸ்ஸியின் இந்தச் சாதனை ஒரு சிறப்பான புள்ளிவிவரத்தையும் உள்ளடக்கியுள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோ 900 கோல்களை அடிக்க 1,236 போட்டிகளை எடுத்துக்கொண்ட நிலையில், லியோனல் மெஸ்ஸி வெறும் 1,142 போட்டிகளிலேயே இந்த இலக்கை எட்டி அசத்தியுள்ளார். அதாவது, ரொனால்டோவை விட 94 போட்டிகள் குறைவாக விளையாடியே…
நவீன கிரிக்கெட்டில் பந்துவீச்சு என்பது பேட்டிங்கிற்கு இணையாக கவர்ச்சிகரமான ஒரு துறையாகப் பார்க்கப்படுவதில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவலை தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அஸ்வின், ரசிகர்கள் சிக்ஸர்களையும், பேட்டர்களின் அதிரடிகளையும் பார்ப்பதையே அதிகம் விரும்புவதால், வளரும் இளம் தலைமுறையினர் பந்துவீச்சை ஒரு விருப்பமான துறையாகத் தேர்ந்தெடுக்கத் தயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது எதிர்காலத்தில் இந்திய அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளர்களின் தட்டுப்பாட்டை உருவாக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஜஸ்பிரித் பும்ராவை “இந்தியாவின் தேசியப் பொக்கிஷம்” என்று வர்ணித்துள்ள அஸ்வின், அவர் ஒரு அபூர்வமான பந்துவீச்சாளர் என்றும், அவருக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பப்போவது யார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். ஒரு காலத்தில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ் என வலுவான பந்துவீச்சுப் படை இருந்தது. ஆனால், தற்போது பும்ராவைத் தவிர்த்துப் பார்த்தால், சர்வதேசத் தரத்தில் போட்டிகளை வென்று தரும்…
தெற்காசியா தொடர்பாக ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவுகள் இன்னும் மிகவும் பதட்டமான நிலையில் இருப்பதால், நிலைமை எந்த நேரத்திலும் மோசமடையக்கூடும். இரு நாடுகளும் அணுசக்தி நாடுகள் என்பதே மிகப்பெரிய கவலையாக உள்ளது; எனவே, ஒரு சிறிய பதற்றம் கூட ஒரு பெரிய போராக வெடிக்கக்கூடும். இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடிப் போரை விரும்பவில்லை என்றும், ஆனால் பிரச்சினை வேறு இடத்தில் உள்ளது என்றும் அந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது. எந்த நேரத்திலும் நிலைமையை மோசமாக்கக்கூடிய பயங்கரவாத அமைப்புகளிடமிருந்துதான் உண்மையான அச்சுறுத்தல் வருகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் போன்ற பதட்டமான பகுதிகளில் நடந்த தாக்குதல்கள் ஏற்கனவே பதற்றத்தை அதிகரித்துள்ளன. குறிப்பாக, 2025 ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலும், அதற்குப் பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) வான்வழித் தாக்குதல்களும் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளன.…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு வார கால தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு முக்கிய குற்றவாளியான முனீஸ்வரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடந்த 10ம் தேதி 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். மேலும் அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும் தெரியவந்ததையடுத்து குற்றவாளியை கைது செய்யக்கோரி மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில், 10 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், முக்கிய குற்றவாளியான முனீஸ்வரனை போலீஸார் இன்று கைது செய்தனர். மாணவியைக் கொலை செய்ததற்கான காரணம் மற்றும் கொலை செய்த விதம் குறித்து அவரிடமிருந்து ரகசிய வாக்குமூலத்தையும் போலீஸார் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் முனீஸ்வரனை பிடிக்க போலீஸாருக்கு உதவியது மாணவியின் நகங்களுக்குள் இருந்த சதைத் துணுக்குகள்தான். உயிருக்குப் போராடிய தருணத்தில் மாணவி தன்னைத்…
சட்டம் – ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் நேற்று முன்தினம் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், கண்ணியக்குறைவாகவும் இவர்களது பேச்சு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும், மகளிர் அமைப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர். விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், அப்துல் கலாம் அவர்கள் ‘கனவு காணுங்கள்’ என்று சொன்னார். ஆனால் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே போய், ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள், நான் நிறைவேற்றுகிறேன்’ என்கிறார். எனக்கு ‘பிரபலமான நடிகை(நயன் தாரா) ஒருவர் வேண்டும்’ என்று கேட்டால் இவரால் அந்தக் கனவை நிறைவேற்ற முடியுமா? என்று பேசினார். இந்த சர்ச்சை ஓய்வதற்குள், திண்டுக்கல்லில் நடந்த…
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள போர், தற்போது உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நேற்று (மார்ச் 18) ஈரானின் மிகப்பெரிய எரிவாயு வயலான தெற்கு பார்ஸ் (South Pars) மற்றும் அசலுயே (Asaluyeh) சுத்திகரிப்பு மையத்தின் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடியாக, கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் எரிசக்தி மையங்களை தாக்கப்போவதாக ஈரான் பகிரங்கமாக எச்சரித்தது. அதன்படி, கத்தாரின் முக்கியமான ராஸ் லஃப்பான் (Ras Laffan) தொழில்துறை பகுதி மற்றும் சவுதி அரேபியாவின் எரிவாயு மையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியாளரான கத்தார் எனர்ஜி (QatarEnergy) நிறுவனம் தனது உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதுடன், ‘ஃபோர்ஸ் மஜூர்’ (Force Majeure) எனப்படும் தவிர்க்க முடியாத சூழலை அறிவித்துள்ளது. இந்தியாவின்…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், சிவகங்கை மாவட்டம் அஜித்குமார் மற்றும் ஆகாஷ் ஆகியோரின் கஸ்டடி மரணங்கள் ஆளும் அரசுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் 2020-ல் சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் அதிமுக அரசுக்கு எத்தகைய பின்னடைவை ஏற்படுத்தியதோ, அதேபோன்றதொரு சூழல் தற்போதும் நிலவுகிறது. குறிப்பாக, அஜித்குமார் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதும், ஆகாஷ் மரண வழக்கில் காவல்துறை சித்திரவதை குறித்த ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் தென் மாவட்டங்களில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் தங்களின் தேர்தல் பரப்புரையைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டம்-ஒழுங்கு சீர்குலைவைச் சுட்டிக்காட்டி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் அரசியல் போராட்டத்தையே அஜித்குமார் மரணத்திற்காகச் சென்னையில் “சாரி மா” (Sorry Ma) என்ற பதாகையுடன் முன்னெடுத்தார். நாம் தமிழர் கட்சியின் சீமான்,…