Author: Editor web3

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ஆம் தேதி ‘சர்வதேச மகிழ்ச்சி தினம்’ உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. “மகிழ்ச்சி என்பது ஏதோ ஒரு தேடலில் கிடைப்பதல்ல, அது நாம் வாழும் வாழ்க்கையில் நாம் உருவாக்கி கொள்வது” என்பதை உலகுக்கு உணர்த்துவதே இந்த தினத்தின் நோக்கம். மகிழ்ச்சி என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் அடிப்படைத் தேவை என்பதை அங்கீகரித்து 2012ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை (UN) இந்த தினத்தை உருவாக்கியது. பூடான் நாட்டின் முன்முயற்சியால் தொடங்கப்பட்ட இந்தத் தினம், இன்று உலக நாடுகள் அனைத்தும் ஒருவருக்கொருவர் அன்புடனும், அமைதியுடனும் வாழ தூண்டுகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில், பின்லாந்து தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பின்லாந்து இந்த ஆண்டு 10க்கு 7.764 என்ற மிகச்சிறந்த மதிப்பீட்டைப் பெற்றுள்ளது, இது கடந்த ஆண்டை விட ஒரு முன்னேற்றமாகும். மக்களின் திருப்திக்கு அதன் சிறந்த…

Read More

கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (IPL), தற்போது தனது 19-வது சீசனை எட்டியுள்ளது. இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ வீரர்கள் வந்து சென்றாலும், தொடக்கத்திலிருந்து இன்று வரை அனைத்து 19 சீசன்களிலும் விளையாடிய பெருமை வெறும் நான்கு வீரர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் மனிஷ் பாண்டேவும் இணைந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். இதில் தோனி சென்னை மற்றும் புனே அணிகளுக்காகவும், ரோஹித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளனர். மனிஷ் பாண்டே அதிகபட்சமாக ஆர்சிபி, சன்ரைசர்ஸ், டெல்லி, புனே, மும்பை, லக்னோ மற்றும் கேகேஆர் என பல அணிகளுக்காகத் தனது பங்களிப்பை அளித்துள்ளார். இந்தச் சாதனையில் மற்ற வீரர்களிடமிருந்து விராட் கோலி மட்டும் தனித்து நிற்கிறார். ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008-ம் ஆண்டு முதல் இன்று வரை ஒரே ஒரு…

Read More

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு சஞ்சு சாம்சன் முக்கியப் பங்காற்றினார். வெறும் ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடிய போதிலும், அவர் தொடரின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது வெற்றியைக் கண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிடிஐ-க்கு அவர் அளித்த பேட்டியில், 2009-ல் சஞ்சுவை முதன்முறையாக சந்திக்கும் போது அவருக்கு 14 வயது. சிறந்த விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமையுடன் காணப்பட்ட அந்தச் சிறுவனைப் பார்த்து, நீ தான் அடுத்த தோனி என்று நான் கூறினேன். அவர் இன்று அடைந்துள்ள உச்சத்தைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் கம்பீர் தனது இந்த கருத்தைத் திருத்தியதாக சசி தரூர் குறிப்பிட்டார். என் நண்பர் கௌதம் காம்பீர் என்னிடம், ‘இல்லை, இல்லை, அவர் அடுத்த தோனியாக ஆக வேண்டிய அவசியமில்லை, அவர் ஒரே சஞ்சுவாகவே இருப்பார்’ என்று கூறினார். அவர்…

Read More

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தி வரும் போர், பலரும் கணிப்பதை விட மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நெதன்யாகு, இந்தப் போர் குறித்த பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.  முதலில் தான் கொல்லப்பட்டு விட்டதாக வெளியான செய்திகளை மறுத்த அவர் நான் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தியதை நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக தான் என தெரிவித்தார். ஈரானால் இனி தலை தூக்கவே முடியாது என கூறியிருக்கிறார். ஈரான் தற்போது மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது என்றும் அந்த நாடு யுரேனியம் செறிவூட்டும் மற்றும் அணு ஆயுதங்கள் , ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரித்ததை இனி நினைத்து கூட பார்க்க முடியாத நிலைமை வந்து விட்டதாக கூறியிருக்கிறார். மிக மோசமான நிலைக்கு ஈரான் சென்று விட்டது என கூறியிருக்கும் அவர் தேவை இருக்கும்…

Read More

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் களத்தை சந்திப்பதற்கே டெல்லியின் அனுமதி அவர்களுக்கு (அதிமுக) வேண்டும் என்று ஸ்டாலின் சாடியுள்ளார். தமிழக மக்கள் ஒருபோதும் டெல்லியின் ஆதிக்கத்தையும் அதன் அடிமை கூட்டத்தையும் அனுமதிக்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான உ.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நம் உயிருடன் கலந்திருக்கும் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். திராவிட மாடல் 2.0 ஆட்சியை உறுதி செய்திடும் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் நம்மை அழைக்கிறது. ஜனநாயக அறப்போர்க் களத்திற்குக் கொள்கை வீரர்களாகக் கழகத்தினர் அணிவகுக்கும் நேரம் இது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை உங்களில் ஒருவனான நான், உங்களின் குரலாக எடுத்துச் சொன்னேன். வெற்றி நிச்சயம்.…

Read More

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து, ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதேவேளையில், வெள்ளி விலை கணிசமாகக் குறைந்து பொதுமக்களுக்குச் சிறு ஆறுதலை அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களின் காரணமாக, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,11,600 என்ற வரலாறு காணாத விலையை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஏறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை, நகை வாங்குவோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்தாலும், வெள்ளியின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More

பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் நேற்று முன்தினம் இரவு முதல் இடி, மின்னல் மற்றும் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. அப்போது, மழைக்காக ஒதுங்கி தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென கட்டிடத்தின் சுவரும் கூரையும் இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் 12 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் மழையினால் பலர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சூறாவளிக் காற்றினால் மரங்கள் மற்றும் ராட்சத விளம்பரப் பலகைகள் வேரோடு சாய்ந்துள்ளது. மழையினால் நூற்றுக்கணக்கான மின்மாற்றிகள் பழுதடைந்ததால், கராச்சி மாநகரின் பெரும் பகுதி இருளில் மூழ்கியது. இது குறித்து கராச்சி மேயர் முர்தாசா வஹாப் விடுத்துள்ள அவசர குறிப்பில், “பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். சிந்து மாகாணத்தின் பிற பகுதிகளில்…

Read More

ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது புதிய தலைமைத்துவக் குழுவை அறிவித்துள்ளது. அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம்   காரணமாகத் தொடரின் ஆரம்பகட்டப் போட்டிகளில் விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் இடைக்கால கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மாவுக்குப் புதிய பொறுப்பு: சமீபகாலமாக டி20 கிரிக்கெட்டில் முத்திரை பதித்து வரும் இளம் வீரர் அபிஷேக் சர்மா, அணியின் துணை கேப்டனாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். “பேட் கம்மின்ஸ் காயத்திலிருந்து மீண்டு வரும் வரை, இஷான் கிஷன் கேப்டனாகவும், அபிஷேக் சர்மா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள்” என்று எஸ்ஆர்ஹெச் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல இஷான்…

Read More

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தனது ‘தனிப்பட்ட உரிமைகளை’ பாதுகாக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கம்பீர் பேசாத விஷயங்களை அவர் பேசியது போல சித்தரிக்கும் போலி வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாகக் கூறி பரப்பப்பட்ட போலி வீடியோ 29 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனது முகம், பெயர் மற்றும் குரலை அனுமதியின்றி வணிக ரீதியாகவும், தவறான தகவல்களைப் பரப்பவும் பயன்படுத்திய 16 தரப்பினருக்கு எதிராக இந்த வழக்கை கம்பீர் தொடர்ந்துள்ளார். இதில் மெட்டா (Meta), எக்ஸ் (X), கூகுள் (Google) போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களும் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். தனது அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக 2.5 கோடி…

Read More

கோடை காலத்தில் அலட்சியமாக இருப்பது பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அதிக வெப்பநிலை மற்றும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையால் தீ விபத்துகள், வெப்பஅலை பாதிப்புகள் மூலம் உயிர்கள் மற்றும் பிற சேதங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்கம்பிகள், மின்சாதனங்கள் பாதுகாப்பான நிலையிலுள்ளனவா என பரிசோதனை செய்ய வேண்டும். ஓவர்லோடு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் தீப்பெட்டி, பட்டாசு போன்ற பொருட்களுடன் விளையாடுவதை கண்காணிக்க வேண்டும். காடு மற்றும் வெளிப்புற பகுதிகளில் சிகரெட் துண்டுகள் போன்றவற்றை அலட்சியமாக எறிவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் சிறிய தீயணைப்பு கருவி வைத்திருப்பது பாதுகாப்பான நடைமுறையாகும். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்…

Read More