Author: Editor web3
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில், கட்டணமில்லா தங்கும் விடுதிகள் முதன்மை அரசு மருத்துவமனைப் பகுதிகளிலேயே, தங்கும் வசதிகளைக் கொண்ட புதிய தூய்மையான இலவசத் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும். இதனால் உள் நோயாளிகளாகச் சேர்க்கப்பட்டவர்களை கவனித்துக் கொள்ளும் உறவினர்கள் போதிய தங்கும் வசதி இன்றி தவிப்பதும், தேவையற்ற செலவுகளும் குறைக்கப்படும். மருத்துவமனையிலும் நெரிசல் குறையும். மருத்துவச் சுற்றுலா பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் தொடர்பாக 5 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் வந்து குவிகின்றனர். இந்தியாவைத் தவிர்த்து ஏனைய பிற நாடுகளுக்கும் மேல்நாட்டவர் மருத்துவச் சுற்றுலாவுக்கென பயணிக்கின்றனர். அவர்களைக் கவரும் வண்ணம், தமிழகத்தின் மையப்பகுதியில் மருத்துவச் சுற்றுலா நகரம் உருவாக்கப்படும். இங்கு ஒரே இடத்தில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்து மருத்துவங்களும் உலகத் தரத்தில் அளிக்கும் தலைசிறந்த மருத்துவ வளாகங்கள் உருவாக்கப்படும். இதில் ஆங்கில…
கால்நடைப் பண்ணை: ஆடு மாடுகளை வளர்த்தல் அவமானமில்லை, வருமானம், வெகுமானம் அரசுப் பணி. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏறத்தாழ ஆயிரம் குறுக்கம் பரப்பளவில் தருந்த இடம் அரசால் தேர்வு செய்யப்பட்டு, அங்கே புதிதாகக் கால்நடை மேம்பாட்டுப் பண்ணைகள் அமைக்கப்படும். அதில் காங்கேயம், தார்பார்க்கர், சிவப்புப்பசகி, சாகிர்வால், உம்பளச்சேரி, புளியங்குளம் பட்டிமாடு, தேனி மலைமாடு, பர்கூர் மலைமாடு, சிந்தி, கிர் உள்ளிட்ட நமது பரம்பரை மாடுகள், ஆடுகள் மட்டும் வளர்க்கப்படும். வெளிநாட்டு Jersey வகை மாடுகள் அனைத்தும் தடை செய்யப்படும். நமது பரம்பரை மாடுகளைக் கொண்டு உருவாக்கப்படும் பண்ணையில் இருந்து பால் (A2), பால்கோவா, தயிர், வெண்ணெய், மோர், பால்பொருள் இனிப்பு வகைகள் ஆகியவை உருவாக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும். அவற்றில் நம் தேவைக்குப் போக மீதமுள்ளவை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். நாட்டு மாடு – பால் சந்தைப் பெருக்கம் தமிழ்நாட்டில் பாலின் சந்தை மதிப்பு சற்றொப்ப 3.5 இலக்கம் கோடி.…
சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார். அதில், தமிழர்களுக்கு முன்னுரிமை தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடப்பங்கீட்டு முறையைப் புரட்சியாளர் அண்ணல் அம்பேதகர் வழியில் நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும், தற்போதுள்ள இடப்பங்கீடு முறை என்பது, வகுப்புவாரி முன்னுரிமை (Communal G.O.) வகையில் ஏற்படுத்தப்பட்ட முறையாகும். அம்முறையில் சமூகநீதி உரிமையான இடப்பங்கீட்டு முறையை முன்நிறுத்தித் தன் வருவாய் நோக்கத்திற்காக பூர்வீகத் தமிழ்க்குடிகளுக்கிடையே சாதி வேறுபாட்டினை வளர்த்து முரண்களை உருவாக்கித் திராவிடக் கட்சிகள் இதுவரை அரசியல் ஆதாயம் அடைந்து வருகின்றன. நாம் தமிழர் அரசானது இம்முறையை அறவே ஒழித்துத் தமிழ்க் குடிகளுக்கு இடப்பங்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிற மொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்கப்படுகிறதோ, அதே முன்னுரிமை பிறமொழி வழித்தேசிய இன மக்களுக்குத் தமிழ்நாட்டில் வழங்கப்படும். வரி விதிப்பில் உரிய மாற்றங்கள் ஊராட்சி வரிகள், விற்பனை வரி,…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக வெளியிட்டுள்ள தொலைநோக்குத் திட்டங்கள் அடங்கிய தேர்தல் வாக்குறுதிகள் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழகத்தின் வளர்ச்சியைப் பரவலாக்கும் வகையில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, குமரி என 5 புதிய தலைநகரங்களை அவர் அறிவித்துள்ளார். திருச்சி: நிர்வாகத் தலைநகரம் (The Administrative Capital) தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி, மாநிலத்தின் முதன்மை நிர்வாக மையமாக மாற்றப்படும். வட மற்றும் தென் மாவட்ட மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் இந்த மாற்றம் திட்டமிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம்: முதலமைச்சர் அலுவலகம் மற்றும் அனைத்துத் துறை அமைச்சகங்கள் இங்கிருந்து செயல்படும். சட்டமன்றம்: மாநிலத்தின் சட்டமியற்றும் பணிகள் திருச்சியில் நடைபெறும். மத்திய கண்காணிப்பு: 38 மாவட்டங்களையும் கண்காணிக்கும் பொது நிர்வாக மையம் மற்றும் மாநிலத் திட்டக் குழு இங்கு அமையப்பெறும். சென்னை: தொழில்நுட்பத் தலைநகரம் (Tech Capital) நிர்வாகப் பளுவைக் குறைத்து, சென்னையை…
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் லாப நோக்கம் காரணமாக, கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை இன்று யாரும் எதிர்பாராத விதமாக பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று (மார்ச் 18) ஒரு சவரன் ரூ.1,16,560க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ. 2,160 குறைந்து ரூ.1,14,400க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் நேற்று ரூ. 14,570க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.265க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 10,000 குறைந்து ரூ.2,65,000க்கும் விற்பனையாகிறது. உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்ததால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வந்த…
தமிழ்நாடு சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அனைத்துக் கட்சிகளும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் பணிகளில் மற்ற கட்சிகளை விட ஒரு படி மேலே சென்று புதுமையான முயற்சியைக் கையாண்டு வருகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளை குறிக்கும் பிரம்மாண்ட டிஜிட்டல் கவுண்ட்டவுன் திரை அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தின் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் ஸ்டாலின் படத்துடன் “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்”, “திராவிட மாடல் 2.0” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அறிவாலயத்திற்கு வரும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தேர்தல் வெற்றிக்கான உத்வேகத்தை ஏற்படுத்தவும், இன்னும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லி பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் டெல்லிக்கு புறப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்து கடந்த சில நாட்களாகப் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும், அதிமுகவின் பலமான கோட்டைகளாகக் கருதப்படும் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில், குறிப்பிட்ட சில தொகுதிகளை பாஜக கேட்டு பிடிவாதம் காட்டி வருகிறது. பாஜக மேலிடப் பார்வையாளர் பியூஷ் கோயல் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யத் தமிழகம் வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே தேசிய தலைமையைச் சந்தித்து ஒரு முடிவுக்கு வர இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் இன்று மாலை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு ரயில் முன் பாய்ந்த சகோதரர் சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது. மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்! இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். சகோதரர் சிவா திலீபனை இழந்து வாடும் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் – தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது…
ராஜ்யசபாவில் இருந்து ஓய்வுபெறும் 37 உறுப்பினர்களுக்கு இன்று வழிஅனுப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றுகையில், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா குறித்து மிகவும் நகைச்சுவையாகப் பேசினார். “எனக்கு தேவகவுடாவை கடந்த 54 ஆண்டுகளாகத் தெரியும். அவர் ஆரம்பத்தில் எங்களை (காங்கிரஸ்) மிகவும் நேசித்தார்; ஆனால் இறுதியில் பிரதமர் மோடியை மணந்து (கூட்டணி) கொண்டார்” என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார். கார்கேவின் இந்த கலகல பேச்சால், அவையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அனைத்துக் கட்சி எம்.பி-க்களும் சிரிப்பால் அதிர்ந்தனர். அரசியல் ரீதியாகக் கடும் விமர்சனங்களை முன்வைக்கும் கார்கே, ஒரு மூத்த தலைவரின் அரசியல் பயணத்தை இவ்வளவு கலகலப்பாக விவரித்தது அவையில் சிரிப்பலையை உருவாக்கியது. “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை” என்பதற்கு இந்தத் தருணம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது. முன்னதாக, 2018-ம் ஆண்டு…
அதிகரித்து வரும் வெப்பநிலை உடல் உழைப்பின்மையை அதிகரிக்கும். இது 2050-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 470,000 முதல் 700,000 இறப்புகளுக்கு வழிவகுத்து, இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று லான்செட் ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக மனித குலத்திற்கு ஏற்படப்போகும் பேராபத்து குறித்து ஒரு புதிய ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை 2050-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான கூடுதல் மரணங்களுக்கு வழிவகுக்கும் என்று அர்ஜென்டினாவின் கத்தோலிக்கப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கணக்கிட்டுள்ளனர். வெப்பம் மக்களின் உடல் செயல்பாட்டுத் திறனை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, ஆராய்ச்சியாளர்கள் 2000 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 156 நாடுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்தனர். அவர்களின் முடிவுகள் ‘ தி லான்செட் குளோபல் ஹெல்த்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன . அதிக வெப்பநிலை உடற்பயிற்சியை மிகவும் கடினமாக்குவதாகவும்,…