Close Menu
    What's Hot

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    அரசு அதிகாரிகளுக்கு ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு கட்டாயம்!. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழக முதலமைச்சரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் இவ்வளவா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தேர்தல் ரிசல்ட்!. அண்ணா அறிவாலயத்தில் டிஜிட்டல் ‘கவுண்ட்டவுன்’!. திமுக புது முயற்சி!.
    தமிழ்நாடு

    தேர்தல் ரிசல்ட்!. அண்ணா அறிவாலயத்தில் டிஜிட்டல் ‘கவுண்ட்டவுன்’!. திமுக புது முயற்சி!.

    Editor web3By Editor web3March 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Election Results Digital Countdown
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அனைத்துக் கட்சிகளும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன.

    ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் பணிகளில் மற்ற கட்சிகளை விட ஒரு படி மேலே சென்று புதுமையான முயற்சியைக் கையாண்டு வருகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளை குறிக்கும் பிரம்மாண்ட டிஜிட்டல் கவுண்ட்டவுன் திரை அமைக்கப்பட்டுள்ளது.

    அண்ணா அறிவாலயத்தின் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் ஸ்டாலின் படத்துடன் “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்”, “திராவிட மாடல் 2.0” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

    அறிவாலயத்திற்கு வரும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தேர்தல் வெற்றிக்கான உத்வேகத்தை ஏற்படுத்தவும், இன்னும் எவ்வளவு காலம் களப்பணியாற்ற வேண்டும் என்பதை நினைவூட்டவும் இந்தத் திரை அமைக்கப்பட்டுள்ளதாகக் கட்சித் தரப்பில் கூறப்படுகிறது.

    “மீண்டும் திமுக – இலக்கு 200” என்ற முழக்கத்துடன் தேர்தலைச் சந்திக்கும் திமுக, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 4, 2026-ஐ நோக்கி இன்னும் எத்தனை நாட்கள், மணிநேரம் மற்றும் நிமிடங்கள் உள்ளன என்பதை இந்தத் திரை நேரலையாகக் காட்டுகிறது.

    anna arivalayam Digital Countdown DMK Dravidian Model election Results stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதொகுதிப்பங்கீட்டில் சிக்கலா?. எடப்பாடி பழனிச்சாமி திடீர் டெல்லி பயணம்!
    Next Article நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிரடி குறைவு!
    Editor web3
    • Website

    Related Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    அரசு அதிகாரிகளுக்கு ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு கட்டாயம்!. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    May 19, 2026

    தமிழக முதலமைச்சரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் இவ்வளவா?

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    அரசு அதிகாரிகளுக்கு ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு கட்டாயம்!. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழக முதலமைச்சரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் இவ்வளவா?

    மோசடிப் பேர்வழியை கட்சியில் சேர்த்த செங்கோட்டையன்… கொதிக்கும் பொதுமக்கள்!

    நள்ளிரவில் வீடு புகுந்து செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்!. திருவாரூரில் பயங்கரம்!

    Trending Posts

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    May 19, 2026

    காப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.