Author: Editor web3

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரானியத் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை  மூடியது. உலகின் 20% கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து இந்த வழியாகவே நடைபெறுவதால், தற்போது இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு 48 மணி நேரக் கெடு விதித்து அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஈரான் 48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின்சக்தி நிலையங்கள் (Power Plants) மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவை தரைமட்டமாக்கப்படும்; குறிப்பாக மிகப்பெரிய மின்நிலையத்திலிருந்து இந்தத் தாக்குதல் தொடங்கும்” என டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டிரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்கு ஈரான் ராணுவம் உடனடியாகப் பதிலடி…

Read More

மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு நாளை (மார்ச் 23) முதல் அதிகாரப்பூர்வமாக நீக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 6ம் தேதி இண்டிகோ (IndiGo) விமான நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் ரத்துகள் மற்றும் அதன் விளைவாக டிக்கெட் விலைகள் விண்ணைத் தொட்டதைத் தொடர்ந்து, பயணிகளைக் காக்க தற்காலிகமாக இந்த விலைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை சீரடைந்துவிட்டதாகக் கூறி, இந்த உச்ச வரம்பை அரசு விலக்கிக்கொண்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்திற்கு மிக முக்கியக் காரணமாக, சர்வதேச அளவில் நிலவும் ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் பார்க்கப்படுகிறது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், விமான எரிபொருள் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே பல முன்னணி விமான நிறுவனங்கள் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை  அமல்படுத்தியுள்ள நிலையில், தற்போது அரசின் கட்டுப்பாடும் நீங்கியுள்ளதால், முக்கிய நகரங்களுக்கு இடையேயான பயணக் கட்டணம் பல மடங்கு…

Read More

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களால் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து வருவது நகைப்பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் மத்திய கிழக்கில் நீடித்தபோதிலும், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தை விடுத்து மற்ற துறைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்த மார்ச் மாத தொடக்கத்தில் 22 கேரட் ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ.1.36 லட்சத்திலிருந்து ரூ.1.40 லட்சம் வரை விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை கணிசமாகச் சரிந்து வருகிறது. தங்கத்தின் இந்த விலை வீழ்ச்சிக்கு உலக நாடுகளின் மத்திய வங்கிகள் எடுத்துள்ள நிதிநிலை முடிவுகளே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகின்றன. அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் உள்ளிட்ட முக்கிய மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன அல்லது நிலையாக வைத்துள்ளன. வட்டி விகிதங்கள் உயரும்போது, வட்டி வருமானம் தராத தங்கத்தின் மீதான ஈர்ப்பு முதலீட்டாளர்களிடையே குறைகிறது. இது சர்வதேச…

Read More

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் களம் காண்பது மற்ற கட்சிகளிடையே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவல்கள், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (CPM) திமுகவுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீட்டில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. திமுக – CPM இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தற்போது வரை இழுபறி நீடித்து வருகிறது. கடந்த காலங்களில் 2001, 2006 மற்றும் 2011 ஆகிய தேர்தல்களில் பெரம்பூர் தொகுதியில் CPM வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, அப்பகுதியின் தொழிலாளர் வர்க்க வாக்குகள் மற்றும் கட்சியின் பாரம்பரிய செல்வாக்கைச் சுட்டிக்காட்டி, பெரம்பூர் தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று CPM தரப்பில் திமுகவிடம் பிடிவாதமாக வலியுறுத்தப்பட்டு வருகிறதாம். “பெரம்பூர் எங்களின் கோட்டை” என்ற தர்க்கத்தை முன்வைத்து, சென்னையின் முக்கிய அடையாளமாக…

Read More

தென்னிந்தியத் திரையுலகின் ‘கனவுக்கன்னி’யாக இரு தசாப்தங்களுக்கும் மேலாக வலம் வரும் நடிகை த்ரிஷா, தற்போது சினிமாவை விட்டு விலகப் போவதாகத் தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 75 படங்களுக்கு மேல் நடித்து மைல்கல் சாதனை படைத்துள்ள த்ரிஷா, கடந்த மூன்று மாதங்களாக எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர் சினிமாவில் இருந்து ஒரு நீண்ட இடைவெளியை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது த்ரிஷாவின் கைவசம் ‘கருப்பு’ உள்ளிட்ட மூன்று திரைப்படங்கள் உள்ளன. இவற்றின் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, ரிலீஸுக்கான இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளன. இந்தத் திரைப்படங்களுக்குப் பிறகு அவர் புதிய கதைகளைக் கேட்க ஆர்வம் காட்டவில்லை என்றும், படப்பிடிப்புகளில் இருந்து ஒதுங்கியே இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு முன்னணி நடிகை தனது உச்சக்கட்டத்தில் இருக்கும்போதே இத்தகைய முடிவை எடுப்பது கோலிவுட் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. த்ரிஷாவின் இந்தத் திடீர்…

Read More

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் களம் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், போலிச் செய்திகள் மற்றும் முறையற்ற விளம்பரங்களைத் தடுக்க தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தாங்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளக் கணக்குகளின் விவரங்களை வேட்புமனுத் தாக்கலின் போதே தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வேட்பாளர்களின் டிஜிட்டல் பிரச்சாரங்கள் மற்றும் அதற்காகச் செய்யப்படும் செலவினங்களைக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிறதா என்பதைக் கண்காணிக்கத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதிச் சான்று இல்லாமல் எந்தவிதமான அரசியல் விளம்பரங்களையும் பதிவிடக் கூடாது என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடும் முன், சம்பந்தப்பட்ட வேட்பாளர்…

Read More

2026-ஆம் ஆண்டின் உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு (GTI) அறிக்கை, உலகிற்கு நிம்மதியையும் அதே சமயம் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம், பயங்கரவாதம் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன; மறுபுறம், மிக மோசமான சூழல் இனிமேல்தான் ஏற்படக்கூடும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, பயங்கரவாதத்தால் உலகிலேயே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது தற்காலிகமான மாற்றம் அல்ல, மாறாக ஒரு நீண்டகால நெருக்கடியின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது. 2024-2025-ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாத இறப்புகள் 7,714-லிருந்து 5,582 ஆக, அதாவது 28% குறைந்துள்ளன. தாக்குதல்களின் எண்ணிக்கையும் 22% குறைந்து 2,944-ஆக உள்ளது. புர்க்கினா பாசோவில் JNIM பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 120 வீரர்கள் கொல்லப்பட்டதே இந்த ஆண்டின் மிகக் கொடூரமான சம்பவமாகப் பதிவாகியுள்ளது. உலகளாவிய மொத்த உயிரிழப்புகளில் 70 சதவீதத்திற்கு IS (ஐஎஸ்), JNIM, TTP மற்றும் அல்-ஷபாப் ஆகிய நான்கு…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக) அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. கடந்த மார்ச் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கட்சியின் அவசர அரசியல் குழு கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், திமுகவிடம் வைத்த 10 கோரிக்கைகள் குறித்தும் அது பற்றிய செய்திகளை விரைவில் எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியிருந்த நிலையில் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்க திமுக மறுத்துவிட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று அறிவித்திருந்தார். கடந்த 2021 தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேல்முருகன், இந்த முறை  2 தொகுதிகள் மற்றும் தனிச் சின்னம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். ஆனால், திமுக தலைமை அவரது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காததே இந்த விரிசலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தவெக, அதிமுக கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், 2026…

Read More

ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி 30 பயணிகளுடன் வந்துக்கொண்டிருந்த அரசு பேருந்து இன்று 12 மணி அளவில் உத்தமசோழபுரம் பகுதியில் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த சரக்கு வாகனத்தின் மீதும், அதைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் வந்த குழந்தை மற்றும் இருசக்கர வாகத்தில் பயணித்தவர்கள் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது. விபத்தில் உயிரிழந்த அமுதா, செல்வராஜ், மணிகண்டன், நிதிஷ்கா(5), 11 மாத குழந்தை ஜீவிகா, இருசாயி, முருகன், சத்யா என 8 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளது. மேலும், பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து…

Read More

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகியிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ், கடந்த வாரம் ஒரு உள்ளூர் போட்டியில் விளையாடியபோது  தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த முழு தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இவரை சிஎஸ்கே நிர்வாகம் ரூ.2 கோடிக்கு வாங்கியிருந்தது. குறிப்பாக டெத் ஓவர்களில்  துல்லியமாக பந்து வீசுவதில் வல்லவரான இவருடைய விலகல், அணியின் பந்துவீச்சு திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊதியம் தொடர்பான ஐபிஎல் விதிகள் : காயம் ஏற்பட்டால் வீரருக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான ஐபிஎல் விதிகள் மிகவும் தெளிவாக உள்ளன. காயம் எப்போது ஏற்பட்டது மற்றும் வீரர் அணிக்குத் திரும்பினாரா என்பதே மிக முக்கியமான பரிசீலனைகளாகும். ஒரு வீரர்…

Read More