Author: Editor web3

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக) அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. கடந்த மார்ச் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கட்சியின் அவசர அரசியல் குழு கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், திமுகவிடம் வைத்த 10 கோரிக்கைகள் குறித்தும் அது பற்றிய செய்திகளை விரைவில் எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியிருந்த நிலையில் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்க திமுக மறுத்துவிட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று அறிவித்திருந்தார். கடந்த 2021 தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேல்முருகன், இந்த முறை  2 தொகுதிகள் மற்றும் தனிச் சின்னம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். ஆனால், திமுக தலைமை அவரது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காததே இந்த விரிசலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தவெக, அதிமுக கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், 2026…

Read More

ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி 30 பயணிகளுடன் வந்துக்கொண்டிருந்த அரசு பேருந்து இன்று 12 மணி அளவில் உத்தமசோழபுரம் பகுதியில் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த சரக்கு வாகனத்தின் மீதும், அதைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் வந்த குழந்தை மற்றும் இருசக்கர வாகத்தில் பயணித்தவர்கள் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது. விபத்தில் உயிரிழந்த அமுதா, செல்வராஜ், மணிகண்டன், நிதிஷ்கா(5), 11 மாத குழந்தை ஜீவிகா, இருசாயி, முருகன், சத்யா என 8 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளது. மேலும், பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து…

Read More

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகியிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ், கடந்த வாரம் ஒரு உள்ளூர் போட்டியில் விளையாடியபோது  தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த முழு தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இவரை சிஎஸ்கே நிர்வாகம் ரூ.2 கோடிக்கு வாங்கியிருந்தது. குறிப்பாக டெத் ஓவர்களில்  துல்லியமாக பந்து வீசுவதில் வல்லவரான இவருடைய விலகல், அணியின் பந்துவீச்சு திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊதியம் தொடர்பான ஐபிஎல் விதிகள் : காயம் ஏற்பட்டால் வீரருக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான ஐபிஎல் விதிகள் மிகவும் தெளிவாக உள்ளன. காயம் எப்போது ஏற்பட்டது மற்றும் வீரர் அணிக்குத் திரும்பினாரா என்பதே மிக முக்கியமான பரிசீலனைகளாகும். ஒரு வீரர்…

Read More

ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள்: முதல்வர் ஸ்டாலின்: “நோன்பை முடித்து, புத்தாடை அணிந்து, அன்பை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் இஸ்லாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய ரமலான் நல்வாழ்த்துகள். வரலாற்றில் நாம் கண்ட பெரும் புரட்சியாளர்களில் ஒருவரும், சமத்துவத்தின் திருவிளக்குமான நபிகள் நாயகத்தின் நெறியில் வாழ்ந்து வரும் இசுலாமியச் சகோதரர்களுக்கு என்றும் அரணாக நமது திராவிட முன்னேற்றக் கழகமும், கழக அரசும் திகழ்ந்து வருகின்றது. கல்வி, வேலைவாய்ப்புகள், பொருளாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம், மதச் சுதந்திரம் என அனைத்து நிலைகளிலும் சிறுபான்மைச் சகோதரர்களுக்கான சமூகநீதியை நிலைநாட்டி இருக்கிறது. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சட்டங்களை பாஜக அரசு கொண்டு வரும்போதெல்லாம் மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அவற்றை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வருவதுடன், சட்டமன்றத் தீர்மானங்கள் வாயிலாகவும்…

Read More

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை ஏற்று ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இப்போது களமிறங்கியுள்ளன. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுடன் இணைந்து ஜப்பான் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யத் தாங்கள் தயார் என அறிவித்துள்ளன. ஈரான் அண்மையில் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திய தாக்குதல்களை இந்தக் கூட்டணி நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. கடலில் கண்ணிவெடிகளை வைப்பது, ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்துவது போன்ற நடவடிக்கைகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என அவை வலியுறுத்தியுள்ளன. சர்வதேசச் சட்டங்களின்படி கடல்சார்…

Read More

டெல்லிக்கு பழனிசாமி ஓடுவதற்குப் பெயர்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குவதா? என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் கே.என்.நேரு, இனி இது அதிமுக கூட்டணி இல்லை; பாஜக கூட்டணி என்று விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றிருப்பதைப் பார்க்கும் போது, ஐயா திரைப்படத்தில் வரும் காமெடி காட்சிதான் நினைவுக்கு வருகிறது. நடிகர் வடிவேலுவை வீட்டில் வைத்து அடித்துத் துவைத்து வெளியே அனுப்பும் போது , ‘’அண்ணே… பிரமாதம். இந்த டீலிங் நமக்குள்ளேயே இருக்கட்டும்’’ என வடிவேலு பேசும் டயலாக் அப்படியே பழனிசாமிக்கு கச்சிதமாகப் பொருந்தும். இரவு 8.30 மணிக்கே சந்திப்பு நடைபெறும் எனச் சொல்லப்பட்ட நிலையில், 2 மணி நேரமாக அமித்ஷாவின் அழைப்புக்காக காத்திருந்து சந்தித்திருக்கிறார் அடிமை பழனிசாமி. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழ்நாட்டில் தலைமை அதிமுக என்று சொன்னால் அந்த அதிமுகவின் தலைமை அலுவலகமான…

Read More

திமுக கூட்டணியில் கடந்த முறையை விட இரண்டு இடங்கள் குறைக்கப்பட்டு, இந்த முறை மதிமுகவிற்கு 4 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்திலும், ஒரு தொகுதியில் மதிமுகவின் ‘தீப்பெட்டி’ சின்னத்திலும் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில், வைகோ மற்றும் துரை வைகோ தலைமையிலான மதிமுக, தாங்கள் போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் அடங்கிய உத்தேசப் பட்டியலை திமுகவிடம் வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் மதுரை தெற்கு, திருச்சி கிழக்கு, வேளச்சேரி, மணப்பாறை, சாத்தூர், கோவில்பட்டி, கிணத்துக்கடவு, நெல்லை, பாளையங்கோட்டை, கடலூர் அல்லது புவனகிரி ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் மதிமுகவிற்கு எந்தத் தொகுதிகள் கிடைக்கும் என்பதைப் பார்த்தால், கடந்த முறை மதிமுக வென்ற மதுரை தெற்கு  மற்றும் சாத்தூர் ஆகிய தொகுதிகள் மீண்டும் அவர்களுக்கே ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் துரை வைகோ எம்.பி-யாக இருப்பதால், அங்குள்ள திருச்சி கிழக்கு அல்லது மணப்பாறை…

Read More

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் 30 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான வேட்பாளர் நேர்காணல் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், புதுச்சேரிக்கான முழு வேட்பாளர் பட்டியல் நாளை (மார்ச் 21) அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி, புதுச்சேரியில் ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 23-ஆம் தேதி ஆகும். எனவே, நாளை பட்டியல் வெளியான கையோடு, தவெக சார்பில் போட்டியிடும் 30 வேட்பாளர்களும் வரும் 23-ஆம் தேதி (திங்கட்கிழமை) அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர். விஜய்யின் இந்தத் தனித்து போட்டியிடும் முடிவு புதுச்சேரியின் பாரம்பரிய அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பையும், அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில், ஆளும் திமுக மற்றும் அதன் முக்கிய கூட்டாளியான காங்கிரஸ் இடையே சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4-ஆம் தேதி அறிவாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, கடந்த 2021 தேர்தலை விட கூடுதலாக 3 இடங்கள் பெற்று, மொத்தம் 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது. அத்துடன் ஒரு ராஜ்யசபா இடமும் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 28 தொகுதிகளை இறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சி தங்களின் விருப்பமான மற்றும் வெற்றி வாய்ப்புள்ள 39 தொகுதிகள் அடங்கிய உத்தேசப் பட்டியலை திமுகவிடம் வழங்கத் தயாராக உள்ளது. அந்தவகையில், தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க கிள்ளியூர், குளச்சல், விளவங்கோடு, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுடன், சென்னை மற்றும் வட மாவட்டங்களில் வேளச்சேரி, அம்பத்தூர், சோளிங்கர் போன்ற முக்கிய இடங்களும் இந்தப் பட்டியலில்…

Read More

சேலம் மாவட்டம் அரியானூர் அருகே இன்று காலை அரசுப் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடும் வேகத்தில் எதிர் திசையில் பாய்ந்தது. சாலையில் தாறுமாறாகச் சென்ற அந்தப் பேருந்து, எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் மற்றும் மினி ஆட்டோ மீது  மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் வாகனங்களில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த விதம் குறித்து வெளியான சிசிடிவி காட்சிகள், பார்ப்போரை பதைபதைக்க வைக்கும் வகையில் உள்ளது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக சேலம் – இளம்பிள்ளை சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பேருந்தில் பிரேக் செயலிழந்ததா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்பது குறித்து…

Read More