Author: Editor web3

சட்டமன்றத் தேர்தலையொட்டி, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிலுவையில் உள்ள விவரங்களை தயார் செய்யும்படி அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் அவசர பண தேவைகளுக்கு தங்க நகைகளை அடகு வைப்பது மக்களின் முக்கிய நிதி ஆதாரமாக விளங்குகிறது. அதாவது அடகு கடை மற்றும் வங்கிகளில் அதிக வட்டி என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் அதுவும் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் கூட்டுறவு வங்கியை நாடுகின்றனர். மற்றொரு காரணம் மாநில அரசுகள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்படும் நகைகடன் தள்ளுபடி செய்துவிடும் என்ற நம்பிக்கையிலும் வைக்கின்றனர். இந்நிலையில் திமுக 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால், ஐந்து சவரன் வரையிலான தங்க நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். இந்த வாக்குறுதியானது குறிப்பாக ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு உதவும் வகையில்…

Read More

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பமனு பெற்றவர்களுக்கான நேர்காணல் அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை தொடங்குகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 7,988 விண்ணப்பங்களும் , பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட விருப்பம் தெரிவித்து 2,187 விண்ணப்பங்களும் என 10,175 விண்ணப்பங்கள் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வரப்பெற்றது . இதில் நாளை சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்துகிறார் . நாளை முதல் 10 , 12 , 13 ஆகிய தேதிகளிலும் அதனைத் தொடர்ந்து 24ஆகிய தேதியும் என மொத்தம் 5 நாட்கள் நேர்காணல் நடைபெறுகிறது . காலை மாலை என இரு வேளையிலும் நடைபெறும் இந்த நேர்காணலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு பெற்று தருமாறு யாரையும் அணுகி ஏமாற…

Read More

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் நாளை (ஜனவரி 9 ம் தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறி, படத்துக்கு தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, கே. வி. என் புரொடக்சன்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணையானது நீதிபதி பி.டீ ஆஷா முன் நடைப்பெற்ற வந்தது. ஜனநாயகன் படத்தில் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் புகார் அளித்திருப்பதால் படத்திற்கு சென்சார் சான்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், புகார் இருந்தால் திரைப்படத்தை மறு தணிக்கை செய்வதற்கு தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், சென்சார் சான்று வழங்கும் முன் இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் சென்சார் போர்டு…

Read More

விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.சர்பராஸ் கான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சிவம் தூபே போன்ற பெரிய நட்சத்திர வீரர்களைக் கொண்ட மும்பை அணி, 217 ரன்கள் என்ற இலக்கை எட்டத் தவறியது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற அபிஷேக் சர்மா தலைமையிலான பஞ்சாப் அணி 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  மும்பை அணியின் இன்னிங்ஸை அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் முஷீர் கான் ஆகியோர் தொடங்கினர். முஷீர் 21 ரன்களும், ரகுவன்ஷி 23 ரன்களும் எடுத்தனர். இதற்கிடையில், சர்பராஸ் கான் பஞ்சாப் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து, வெறும் 15 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார். இதன் மூலம், விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர்…

Read More

அமெரிக்க உள்துறை (DHS) ஜனவரி 5 அன்று வெளியிட்ட அறிவிப்பில், இந்தியானா( Indiana ) மாகாணத்தில் ஒரு சரக்கு லாரிக்குள் 300 பவுண்டுகளுக்கும் அதிகமான கொகைனை கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட அந்த இருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், லாரியில் நடத்தப்பட்ட சோதனையில் 309 பவுண்டுகள் கோகைன் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் DHS கூறியுள்ளது. குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறையின்படி, இந்தியானாவின் புட்னம் கவுண்டியில் உள்ள உள்ளூர் அதிகாரிகள், 25 வயதான குர்பிரீத் சிங் மற்றும் 30 வயதான ஜஸ்வீர் சிங் ஆகிய இருவரையும் ஜனவரி 4 அன்று கைது செய்தனர். வெறும் 1.2 கிராம் கொகைன் மூலம் 1,13,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களைக் கொல்லக்கூடும் என்று DHS வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இரண்டு நபர்களுக்கும் கலிபோர்னியாவில் ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை…

Read More

நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை கவலை அளிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள பதிவில், அரசியல் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசியல் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை என்றாலும், ஒரு கலைஞரின் படைப்புகளை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் கூறியுள்ளார். அரசியல் லாபத்திற்காக சினிமாக்களை தணிக்கை செய்வதை தமிழக மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் எச்சரித்துள்ளார். https://x.com/girishgoainc/status/2009147218163593246?s=46 அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அழுத்தம் காரணமாக விஜய்யின் படம் தாமதம் அடைந்துள்ளதாகவும், இது தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அநீதியாகும் என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கு எதிராக அல்ல, அரசியல்வாதி விஜய்க்கு எதிராக உங்கள் சக்தியை காட்டுங்கள் என்றும் கூறிய அவர், மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் வேலை செய்யாது எனத் தெரிவித்துள்ளார்.

Read More

சம ஊதியம் வழங்க மனமில்லாமல் தெருவிலிறங்கிப் போராடவிட்டு, இருக்கும் ஊதியத்தையும் திமுக அரசு பறிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது, ஏற்கனவே பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கொடுத்த வாக்குறுதி எண் 181-ஐ வீசி எறிந்ததோடு, தற்போது இருக்கும் ஊதியத்தையும் பிடித்தம் செய்து, ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அராஜகமானது. பல கோடி செலவழித்து “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று விழா நடத்தத் தெரிந்த திமுக அரசுக்கு, சம ஊதியம் வழங்கப் பணமில்லையா? பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் என்று முழங்கும் முதல்வர், அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதியும், இடைநிலை ஆசிரியர்களின் குடும்பங்களின் நலன் கருதியும், கொடுத்த வாக்குறுதிப்படி சம ஊதியம் வழங்க மனமில்லையா? போராடும் ஆசிரியர்களை முடக்கும் சர்வாதிகாரப் போக்கைக் கைவிட்டு, உடனடியாக ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, சம ஊதியம் வழங்கி, மாணவர்கள் நலன் காக்க…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ ஆகியோருக்கு இடையேயான உறவில் ஒரு முக்கியத் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. சமீப காலம் வரை பெட்ரோவை கடுமையாக விமர்சித்து வந்த டிரம்ப், தற்போது அவருடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மேலும், வெள்ளை மாளிகையில் ஒரு சந்திப்பிற்கும் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த உரையாடலில் போதைப்பொருள் கடத்தல், வெனிசுலா மற்றும் பிராந்திய நிலவரம் போன்ற முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, புதன்கிழமை பொகோட்டாவில் நடந்த ஒரு பேரணியில் பேசும்போது, ​​தானும் டிரம்பும் சுமார் ஒரு மணி நேரம் தொலைபேசியில் பேசியதாகக் கூறினார். இந்த உரையாடலின்போது டிரம்பின் பேச்சு வழக்கம் போல இல்லாமல் மிகவும் மென்மையாக இருந்ததாகவும் பெட்ரோ தெரிவித்தார். மேலும், டிரம்ப்பை ஒரு தனிப்பட்ட சந்திப்பிற்கு அழைத்திருந்ததாக பெட்ரோ கூறினார், ஆனால் இரு தலைவர்களும் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர். இந்தச்…

Read More

கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்ய திமுக அரசு மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அங்கன்வாடி பணிகளோடு கிராமப்புறங்களில் உள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்பணிகளில் கிராமப்புற செவிலியர்களுடன் அங்கன்வாடி ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் காரணத்தினால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அங்கன்வாடி ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 2 ஆண்டுகள் கிராம சுகாதாரச் செவிலியருக்கான சிறப்புப் பயிற்சியையும் தமிழ்நாடு அரசு அளித்து வந்தது. அவ்வாறு சிறப்புப் பயிற்சிபெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு கிராம சுகாதார செவிலியர் பணி நியமனத்தில் முன்னுரிமையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, செவிலியர் பயிற்சி முடித்த அங்கன்வாடி ஊழியர்களைக் கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்வதை…

Read More

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வியடைந்தார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து, தவறான தகவலை தெரிவித்ததாக வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், வீரமணியின் வருமானம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, வருமான வரித்துறைக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. வீரமணி தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்த சொத்துக்களையும், அவரது வருமான வரிக் கணக்குகளையும் ஆய்வு செய்த வருமான வரித்துறை, 14 கோடி ரூபாய் அளவுக்கு வித்தியாசம் உள்ளதாக இடைக்கால அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக வீரமணிக்கு எதிராக தேர்தல் அதிகாரி, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்…

Read More