Author: Editor web3

இன்று, வளர்ந்து வரும் பொருளாதாரமாக அறியப்படும் இந்தியா, 2047-ஆம் ஆண்டிற்குள் பொருளாதார வல்லமைக்கு ஒரு புதிய உதாரணமாகத் திகழத் தயாராகி வருகிறது. உண்மையில், இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. சந்தைகளைத் திறந்துவிட்ட, வர்த்தகத்தை ஊக்குவித்த மற்றும் தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்திய பொருளாதார முடிவுகளால் இந்த வெற்றி சாத்தியமானது. இருப்பினும், வரும் ஆண்டுகளில் நாட்டின் வருமானம், மக்களின் வருமானம் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும். 2047-ஆம் ஆண்டில் இந்தியாவின் தலா வருமானம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி ஆராய்வோம். 2047-ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம் எவ்வளவு இருக்கும்? அடுத்த இரண்டு தசாப்தங்களில் இந்தியப் பொருளாதாரம் சராசரியாக 6 சதவீத விகிதத்தில் வளர்ந்தால், 2047-48 நிதியாண்டில் நாட்டின் தனிநபர் வருமானம் தோராயமாக 15,000 டாலர்களை எட்டக்கூடும். இந்திய ரூபாயில், இந்தத் தொகை ஆண்டுக்கு சுமார் 1.3 முதல் 1.5 மில்லியன் ரூபாய்க்குச் சமமாகும். தற்போது, ​​தனிநபர் வருமானம் சுமார் 2.5…

Read More

பழைய ஓய்வூதியம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை புதிய அறிவிப்பை வெளியியிடுகிறார் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளனர். தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பழைய ஓய்​வூ​தியத் திட்​டத்தை அமல்​படுத்​து​வது, அரசு துறை​களில் காலி​யாக உள்ள பணி​இடங்களை நிரப்​புவது, ஊதி​யக்​குழு முரண்​பாடு​களை களைவது உள்​ளிட்ட 10 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக ஜனவரி 6 ஆம் தேதி முதல் கால​வரையற்ற வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​படப்​போவ​தாக அறிவித்து இருந்தனர். இதனிடையே, கடந்த 22 ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து…

Read More

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள பராசக்தி படத்தை வெளியிட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்து, சுதா கொங்கரா இயக்கி, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10 ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து, செம்மொழி என்ற பெயரில் கதையாக எழுதி, 2010 ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அந்த கதையை பயன்படுத்தி பராசக்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின்…

Read More

திருச்சியில் நடைபெறும் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். திருச்சி தென்னூா் அண்ணா நகா் உழவா் சந்தை திடலில் நடைபயணத்தை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து இந்த விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், “2026 தேர்தல் சனாதனத்திற்கும் சமத்துவத்திற்கும் இடையேயானது. சனாதனவாதிகள் ஒரு புறம் இருக்க திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் பேசுவது போல் முகமூடி அணிந்து சிலர் உள்ளனர். சனாதன சக்திகள் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கவிடாமல் இருக்கவே இந்த கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. திராவிடம் தமிழுக்கோ, தமிழர்களுக்கோ, தமிழ் தேசியத்திற்கோ எதிரானது அல்ல. திராவிடத்தால்தான் தமிழ் உயிர்ப்போடு இருக்கிறது. வைகோவின் சமத்துவ நடைபயணத்தை, திராவிட நடைபயணம் என்றும் சொல்லலாம். திராவிடம் என்பது தமிழ் தேசியம், சமூக நீதி, சமத்துவம்தான். பெரியார், அண்ணா, கலைஞர் போராடாமல் இருந்திருந்தால் நாம் இன்று இந்திவாலாக்களாகி இருப்போம் என்று…

Read More

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை வரும் 8ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இருப்பினும், ரொக்க பணம் வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசின் தரப்பில் தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை இருப்பினும் இன்று அல்லது நாளை ரொக்க பணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக தனி அரசாணையும் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது இந்த நிலையில் தான் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வரும் எட்டாம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசு தொகப்பு விநியோகத்தை சென்னையில் முதலமைச்சராக தொடங்கி வைக்க உள்ளார்

Read More

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மு.க.ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி – சீமான் ஆகியோருடன் முதலமைச்சர் நாற்காலிக்கு தவெக தலைவர் விஜய்யும் களமிறங்கியுள்ளார். கரூர் சம்பவத்திற்கு பிறகு முடங்கிய தவெக-விற்கும், விஜய்க்கும் அதிமுக-வின் முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கட்சியில் இணைந்தது அவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்தது. செங்கோட்டையன் வருகைக்கு பிறகு பல்வேறு முக்கிய ஆலோசனைகளும் அவருடன் கலந்தாலோசித்தே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செங்கோட்டையன் மூலமாக பல்வேறு கட்சியின் முக்கிய புள்ளிகளை தவெக பக்கம் இழுக்க விஜய் முடிவு செய்துள்ளார். அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளை தவெக பக்கம் இழுக்க காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்தநிலையில், எடப்பாடி மீது அதிமுகவில் முக்கிய புள்ளிகளும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. அதிமுகவில் எதிர்பார்த்த சில முக்கிய புள்ளிகள் விருப்பமனு அளிக்கவில்லை என்ற தகவல் எடப்பாடி…

Read More

பொங்கல் பரிசு தொகுப்புகளுக்கான டோக்கன்கள் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட  பரிசு தொகுப்பும், சில நேரங்களில் ரொக்க பணமும் வழங்கப்படும். கடந்த 2022-ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ரொக்க பணம் கொடுக்கப்படவில்லை. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்க பணம் வழங்கப்படலாம் என பொதுமக்கள் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்துள்ளனர். இதற்கிடையில் தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு -2026 என்ற தலைப்பில் டோக்கன் அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ரேஷன் கார்டு தாரர்களுக்கு இந்த மாதம் வழங்க வேண்டிய சர்க்கரை, அரிசி போன்றவை வந்துவிட்டன.பொங்கல் பரிசு தொகுப்புடன்…

Read More

600 கிலோ எடையுடன் கின்னஸ் சாதனை படைத்தவரும் உலகின் மிக அதிக எடை கொண்டவருமான மெக்சிகோவை சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ காலமானார். மெக்சிகோவின் அகுவாஸ்காலி யன்ஸ் நகரைச் சேர்ந்தவர் ஜுவான் பெட்ரோ பிராங்கோ (40). கடந்த 2018ம் ஆண்டில் இவரது உடல் எடை 595 கிலோவை எட்டியதால் மிகவும் அவதிப்பட்டார். உலகின் குண்டு மனிதராக (ஆண்) கருதப்படும் இவர், தனது உடல் எடையை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்தார். இதற்காக அந்நாட் டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு முதல்கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. உலகின் அதிக எடை கொண்ட நபர் என்ற கின்னஸ் சாதனை படைத்த இவர், ஒரு கட்டத்தில் இவரால் படுக்கையை விட்டு நகரக்கூட முடியாத நிலை இருந்தது; இவரை இடமாற்றம் செய்யவே எட்டுப் பேர் கொண்ட குழு தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு…

Read More

ஆஸ்திரேலியாவின் அனுபவமிக்க தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது, அதன் இறுதிப் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிதான் உஸ்மான் கவாஜாவின் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும். உஸ்மான் கவாஜா தனது டெஸ்ட் அறிமுகத்தையும் இதே மைதானத்தில்தான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2025-26 ஆஷஸ் தொடரின் இந்த இறுதிப் போட்டி ஜனவரி 4, 2026 அன்று தொடங்கும். உஸ்மான் கவாஜா 2010-11 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகமானார். ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. பாகிஸ்தானில் பிறந்த கவாஜா, ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய முதல் பாகிஸ்தானிய வம்சாவளி வீரர் ஆவார். அவர் தனது நான்காவது வயதில் தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவின் நியூ…

Read More

பல வாழ்க்கை முறை தவறுகள் உங்களை முன்கூட்டியே வயதாக்கிவிடும். தூங்கும் போது நீங்கள் தவிர்க்க வேண்டியவைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள் முதுமையின் விளைவுகளைக் குறைக்க நாம் பெரும்பாலும் சருமப் பராமரிப்புப் பொருட்கள், சிகிச்சைகள் மற்றும் உணவுமுறை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம், ஆனால் அதிகம் விவாதிக்கப்படாத ஒரு முக்கியமான அம்சம் நீங்கள் தூங்கும் நிலைதான். உண்மையில், நீங்கள் தூங்கும் நிலை உங்கள் சருமத்தை முன்கூட்டியே முதுமையடையச் செய்வதில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கக்கூடும். காலையில் எழுந்திருக்கும்போது உங்கள் கன்னங்களில் ஆழமான கோடுகளையோ அல்லது கண்களைச் சுற்றி வீக்கத்தையோ நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இந்த அறிகுறிகள் ஆரம்பத்தில் சிறிது நேரத்திற்குப் பிறகு தானாகவே மறைந்துவிடும், ஆனால் அவை தினமும் நீடித்தால், அவை படிப்படியாக சருமத்தின் மீள்தன்மை மற்றும் முக அமைப்பை பாதிக்கக்கூடும். கேள்வி என்னவென்றால், சில தூங்கும் நிலைகள் நீண்ட காலப்போக்கில் சுருக்கங்கள் அல்லது தளர்வான சருமத்தை ஏற்படுத்துமா?  என்பதுதான். பிஎஸ்ஆர்ஐ மருத்துவமனையின் பிசியோதெரபிஸ்ட்டான டாக்டர்…

Read More