Author: Editor web3
முட்டைகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, அதனால்தான் அதிக எண்ணிக்கையிலான மக்கள் அவற்றை சாப்பிடுகிறார்கள். ஆனால் முட்டைகளை சரியாக வேகவைப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? முட்டையை வேகவைப்பது எளிமையாகத் தோன்றலாம், ஆனால் சரியான பதத்தைப் பெறுவது எப்போதும் எளிதல்ல. பெரும்பாலும், முட்டையின் மஞ்சள் கரு காய்ந்து, உதிரியாகிவிடுகிறது, அதே சமயம் முட்டையின் வெள்ளைக்கரு பிசுபிசுப்பாகவே இருக்கிறது. இதற்குக் காரணம், மஞ்சள் கருவும் வெள்ளைக்கருவும் வெவ்வேறு வெப்பநிலைகளில் வேகின்றன, இது சரியான சமநிலையை அடைவதை கடினமாக்குகிறது. ஆனால், இந்த நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காணக்கூடிய ஒரு முட்டை வேகவைக்கும் முறையை புதிய ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. ஒரு முட்டையில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன: மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக் கரு. மஞ்சள் கரு சுமார் 65°C வெப்பநிலையில் வேகும், அதே சமயம் வெள்ளைக் கருவுக்கு சுமார் 85°C வெப்பநிலை தேவைப்படுகிறது. பொதுவாக, ஒரு முட்டையை 100°C வெப்பநிலையில் வேகவைக்கும்போது,…
திருச்சியில் வைகோவின் நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதை காங்கிரஸ் புறக்கணிப்பதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உரிமைகளை மீட்கவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ “சமத்துவ நடைபயணம்” என்கிற பெயரில் தனது 11-வது நடைபயணத்தை திருச்சியில் இன்று (ஜன.2) தொடங்கி, மதுரையில் வரும் 12-ம் தேதி நிறைவு செய்கிறார். நிகழ்ச்சிக்கு, அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகிக்கிறார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகிக்கிறார். மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை வைகோ வரவேற்றுப் பேசுகிறார். விழாவில், திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்தநிலையில், இதனை புறக்கணிப்பதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
தொப்பை அதிகரிப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள், ஆனால் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கவில்லை என்றால், வெறும் வயிற்றில் வீட்டில் தயாரிக்கப்பட்ட சில பானங்களை குடிப்பது எடை மற்றும் தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும். நாம் அனைவரும் ஒரு பிரச்சனையைப் பற்றி கவலைப்படுகிறோம். தொப்பை கொழுப்பு, இது ஒரு பொதுவான பிரச்சினையாகிவிட்டது. அதை நீக்க அல்லது குறைக்க, மக்கள் தினசரி உடற்பயிற்சிகள் மற்றும் யோகாவை நாடுகிறார்கள், அவை உடல் கொழுப்பைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். இருப்பினும், வயதானவர்கள் மற்றும் நமது அதிகரித்து வரும் பிஸியான வாழ்க்கை முறை காரணமாக, உடற்பயிற்சிகள் மற்றும் யோகாவிற்கு நாம் பெரும்பாலும் நேரம் ஒதுக்குவதில்லை. இது எடை மற்றும் தொப்பை கொழுப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது, இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதை நிரூபிக்கக்கூடும். அதிகப்படியான கொழுப்பை நீக்க அல்லது குறைக்க, நீங்கள் வீட்டிலேயே பலவிதமான பானங்களை தயாரிக்கலாம். வெறும் வயிற்றில், அதாவது அதிகாலையில் அவற்றைக் குடிப்பது, தொப்பை கொழுப்பைக்…
கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உச்சத்தை எட்டி ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்களும், பிற நாடுகளும், அதிக அளவில் முதலீடு செய்வதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை, தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று (ஜன.1)ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.99,520 விற்பனை ஆனது. ஒரு கிராம் 12 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் 256 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ 2 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜன.2) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120 ரூபாய்ந்து உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு…
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். உலக பணக்கார கடவுள் என அழைக்கப்படும் ஏழுமலையான் உலக பிரசித்தி பெற்றது. வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஏழுமலையானை கால் கடுக்க நின்று தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம் உள்ளிட்டவற்றின் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, வைகுண்ட ஏகாதசி நாளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக சொர்க்க வாசல் திறப்பு நடைபெறக் கூடும். சொர்க்க வாசல் நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். வைகுண்ட ஏகாதசி நாளில் உத்தார துவாரம் எனும் சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஏழுமலையானை தரிசிப்பதால் புண்ணியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதனால், அந்த நாளில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருகின்றனர்.…
2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, சில மாதங்களாகவே தமிழக காங்கிரஸுக்குள் இரு தரப்பு குரல்கள் ஒலித்துவருவதை அறிவோம். பத்தாண்டுகளாக வெற்றி கூட்டாளியாக திகழும் திமுகவுடனேயே கூட்டணியைத் தொடரலாம் என்று ஒரு தரப்பு பேச, விஜய் தொடங்கியிருக்கும் தவெகவுடன் செல்லலாம் என்று இன்னோர் தரப்பு பேசிவருவகிறது. இதுதொடர்பாக பொதுவெளியில் சமீப காலமாக தங்கள் குரலை உயர்த்த ஆரம்பித்திருக்கின்றனர் காங்கிரஸ் வட்டாரங்கள். அதோடு, ‘ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும்’ என விஜய் காட்டிய ஆசை, தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளையும், அக்கட்சி மேலிடத்தையும் ஆட்டி படைக்கிறது. அதனால், த.வெ.க., தலைவர் விஜயை ரகசியமாக சந்தித்து பேசுவதும், தி.மு.க., அரசை விமர்சிப்பதுமாக காங்கிரசில் இருப்போர் சிலரின் போக்கு மாறி உள்ளது. காங்கிரஸ் உருவாக்கிவரும் இத்தகைய புகைச்சல்களால் அதிருப்தியடைந்த திமுக தலைமை, கூட்டணி தொடர்பாக ஒரு முடிவெடுக்கப்படும்படி காங்கிரஸ் தலைமைக்கு செய்தி அனுப்பியதாகத் தெரிகிறது. இந்தநிலையில், முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விஜய் கட்சியுடன் கூட்டணியை…
வரும் ஜனவரி 6 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஜாக்டோ-ஜியோ, போட்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஊரக வளர்ச்சித் துறையின்செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு, ஜாக்டோ-ஜியோ, தலைமைச் செயலக சங்கம், ஆசிரியர்கள் சங்கம் உள்பட அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கடந்த அக்டோபரில் இடைக்கால அறிக்கையையும் கடந்த 30ம் தேதி முழு அறிக்கையையும் அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜன. 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ, போட்டோ ஜியோ உள்பட அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை டிசம்பர் 22-ம்…
‘2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியானது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில்தான்’. ஆரம்பத்தில் அவ்வளவு உரக்கச் சொல்லாத இந்த வார்த்தைகளை தற்போது சத்தமாகவே சொல்லத் தொடங்கியிருக்கிறார், தவெக தலைவர் விஜய். ஒருபுறம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து எந்த எதிர்மறை விமர்சனங்களையும் வைப்பதில்லை, மறுபுறம் அதே இருவரால் வலுவான ஓட்டு வங்கியுடைய கட்சியாக வளர்த்தெடுக்கப்பட்ட, இன்றும் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அந்தக் கட்சியைப் பொருட்படுத்தாதது போல் காட்டிக்கொள்கிறார். இருப்பினும் திமுகவை தொடர்ந்து விமர்சித்து பேசுவதன் மூலம், “திமுகவின் எதிரி மற்றும் அதிமுகவுக்கு மாற்று ‘தவெக’ தான்” என நிறுவ விஜய் முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்தநிலையில் விஜய்க்கு மறைமுகமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த உதயநிதி, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் திமுகவுக்கு எதிரான பலம் வாய்ந்த போட்டியாளர்கள் யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நீண்டகாலமாக பிரதான போட்டியாளராக இருந்த அதிமுக பலவீனமாக இருந்தாலும் தற்போது…
இந்தியாவில் வலி, காய்ச்சல் மற்றும் வீக்கத்திற்காக பரவலாக பயன்படுத்தப்படும் Nimesulide மருந்தின்100 mg க்கும் அதிக வீரியம் கொண்ட மாத்திரைகளுக்கும் மத்திய அரசு உடனடி தடைவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 100 மி.கி.க்கு மேற்பட்ட அளவில் உடனடி விளைவளிக்கும் (immediate release) வகையிலான நைமிசுலைடு (nimesulide) வாய்வழி மருந்துகளை தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், அந்த மருந்துக்கு பாதுகாப்பான மாற்றுகள் கிடைக்கின்றன என்றும் மத்திய அரசு அறிந்துள்ளது. மனித பயன்பாட்டுக்காக நாட்டில் இந்த மருந்தை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் வினியோகிப்பதை தடை செய்வது பொது நலனுக்காக அவசியம் மற்றும் பொருத்தமானது என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே, மருந்து பொருட்கள் சட்டப்பிரிவுகளின்படி 100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் தடை செய்யப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது.
மகேந்திர சிங் தோனி தனது குடும்பத்தினருடன் தாய்லாந்தில் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மகேந்திர சிங் தோனி மீண்டும் ஒருமுறை செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, இந்தியாவிற்கு வெளியே தாய்லாந்தில் 2026-ஆம் ஆண்டை வரவேற்றார். அவரது மனைவி சாக்ஷி தோனி, சமூக வலைதளங்களில் ஒரு சிறப்புப் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டார், அது உடனடியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் புகைப்படத்தில் தோனி தனது முழு குடும்பத்துடன் காணப்படுகிறார். மகேந்திர சிங் தோனியின் மகள் ஜிவா, நீண்ட நாட்களுக்குப் பிறகு பொதுவெளியில் தோன்றியுள்ளார். ஜிவா இப்போது நன்றாக வளர்ந்துவிட்டதால், இந்தப் புகைப்படத்தைக் கண்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜிவாவின் சிறு வயது வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாவது வழக்கம். ஆனால், இப்போது அவரது புதிய தோற்றத்தைக் கண்டது மக்களை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. சாக்ஷி தோனியால் பகிரப்பட்ட புகைப்படம்,…