Author: Editor web3
திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான எல்.கணேசன் வயது மூப்பு காரணமாக தஞ்சாவூரில் காலமானார். அவருக்கு வயது 92. மொழிப்போர் தளபதி என அழைக்கப்படும் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எல்.கணேசன், 2 முறை ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ., எம்.எல்.சி., மாநிலங்களவை எம்.பி. பதவிகளை வகித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் 24-04-1934ல் பிறந்தார். 1971, 1989 ஆகிய இருமுறை ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, 1989ல் முதல்வரின் பேரவை செயலாளராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க.வின் சார்பில் 1980 சூன் 30ஆம் நாள் முதல் 1986 ஏப்ரல் 10ஆம் நாள் வரை பணியாற்றினார்., ஒருமுறை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளகர்த்தர்களில் முதன்மையானவர்.1971ல் திமுகவின் மாநில மாணவரணி செயலாளராக பணியாற்றியுள்ளார். 1993ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்உருவானபோது இவர்…
விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் பரோடா அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியா, விதர்பா அணிக்கு எதிராக ஒரு சிறப்பான சதத்தை அடித்தார். இது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஹர்திக்கின் முதல் சதமாகும். அவர் 62 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 39வது ஓவரில் அதிரடியாக விளையாடி தனது சதத்தை எட்டினார். அந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்களை அடித்த அவர், கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரி அடித்து தனது சதத்தை நிறைவு செய்தார். https://x.com/BCCIdomestic/status/2007361735918006739? தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியின் ஐந்தாவது சுற்று இன்று நடைபெற்றது. விதர்பா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. பரோடா அணிக்குச் சிறப்பான தொடக்கம் அமையவில்லை. 71 ரன்களுக்குள் பாதி அணி ஆட்டமிழந்தது. ஏழாவது வீரராகக் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, ஆரம்பத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப நிதானமாக விளையாடினார். அவர் தனது சகோதரரும் அணியின் கேப்டனுமான…
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( BCCI), IPL அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ( KKR) அணிக்கு, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது . வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை 2026 ஐபிஎல் ஏலத்தில் ₹9.20 கோடிக்கு கேகேஆர் அணி வாங்கியது.வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான சமீபத்திய வன்முறையைத் தொடர்ந்து, கேகேஆர் மற்றும் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன . பிசிசிஐயும் விமர்சிக்கப்பட்டது. பல முக்கிய அரசியல்வாதிகள் ஐபிஎல்லில் வங்கதேச வீரர் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பினர். சர்ச்சை அதிகரித்ததைக் கண்ட பிசிசிஐ தலையிட்டு, முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவிக்க உத்தரவிட்டது. பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா இந்த தகவலை உறுதிப்படுத்தினார். தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் வாரியம் தனது முடிவை கேகேஆர் அணிக்குத் தெரிவித்ததாக அவர் கூறினார். “முஸ்தாபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. தேவைப்பட்டால் அவர்கள் மாற்று வீரரைக் கோரலாம், கோரிக்கையின் பேரில், பிசிசிஐ…
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் 14 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். பிஜாப்பூர் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்த உளவுத் தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அதன்படி இன்று அதிகாலை 5 மணி முதல் மாவட்ட ரிசர்வ் குழுவினருக்கும் (டிஆர்ஜி) மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடநது வருகிறது . இந்த மோதல் நடந்த இடத்திலிருந்து இரண்டு மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் கோண்டா பகுதி குழுச் செயலாளர் சச்சின் மங்காடும் ஒருவர் ஆவார். மோதல் நடந்த இடத்திலிருந்து ஏகே-47 மற்றும் இன்சாஸ் துப்பாக்கிகள் உட்பட தானியங்கி ஆயுதங்கள் மீட்கப்பட்டன. கொல்லப்பட்ட மற்ற நக்சலைட்டுகளின் அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. பஸ்தர் சரக ஐ.ஜி. பி. சுந்தர்ராஜ் அளித்த தகவலின்படி, தேடுதல் நடவடிக்கையின் போது இதுவரை மோதல் நடந்த இடத்திலிருந்து 2 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பஸ்தர் சரகத்தில் நக்சல் எதிர்ப்பு…
தென் அமெரிக்க நாடான வெனிசுலா – அமெரிக்கா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், வெனிசுலாவில் திடீரென ஏற்பட்ட பலத்த வெடிச்சத்தங்கள், அந்தப் பகுதி முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. தலைநகர் கராகஸ் உட்பட பல பகுதிகளில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. https://x.com/petrogustavo/status/2007347473073999942? குண்டுவெடிப்புகள் தலைநகர் கராகஸில் மட்டும் நிகழவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்கேடியா ( Maiquetia)நகருக்கு அருகிலுள்ள லா குய்ரா (La Guaira port )துறைமுகப் பகுதியிலும் வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்தப் பகுதி முக்கிய துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்தைக் கொண்டிருப்பதால், இது மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வெடிப்புகள் ஏற்பட்ட உடனேயே, நிலைமை மிகவும் மோசமடைந்ததால், வெனிசுலாவின் வான்வெளி கிட்டத்தட்ட முழுமையாக காலி செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக பல விமானங்கள் தங்கள் வழித்தடங்களை மாற்றியமைத்தன, இது சர்வதேச விமானப் போக்குவரத்தைப் பாதித்தது. இந்த வெடிப்பைத் தொடர்ந்து,…
TAPS பென்ஷன் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அரசு ஊழியர்கள் சங்கங்கள், வரும் 6ம் தேதி நடக்க இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், அரசு துறைகளில் காலியாகவுள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவது, 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகை வழங்குவது, ஊதிய முரண்பாடுகளை களைவது என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் – ஆசிரியர் சங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து போராடி வந்தனர் ஆர்ப்பாட்டம், அடையாள உண்ணாவிரதம், கோரிக்கை முழுக்கம் என பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி 6 முதல் காலரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு அண்மையில் அறிவித்தது. இந்தநிலையில், இதுதொடர்பாக, அமைச்சர்கள் குழு, அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அப்போது, ஓய்வூதிய…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையின் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரிய முறையில் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதாவது தமிழர்களின் பாரம்பரியமான, வாடி வாசலில் சீறிப்பாய்ந்து அனல் பறக்க வரும் ஜல்லிக்கட்டு காளைகளை ஜல்லிக்கட்டு வீரர்கள் அடக்கி விளையாடும் விளையாட்டு என்பது மதுரை மண்ணிற்கான அடையாளமாக கருதப்படுகின்றது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி 17-ஆம் தேதி அலங்காநல்லூர் பகுதியிலும், 15ஆம் தேதி அவனியாபுரம் பகுதியிலும், 16ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற பாலமேடு பகுதியிலும் கோலாகலமாக நடைபெற இருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார். இதற்காக, அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு வாடிவாசல் தூய்மைப்படுத்துதல், மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme) செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி வருகின்றன. வருகிற 6-ந்தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்த கூட்டமைப்புகளை அழைத்து கடந்த டிசம்பர் 22-ந் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அந்த கூட்டமைப்புகள் தெரிவித்தன. இதனிடையே ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு, தமிழக அரசிடம் இறுதி அறிக்கையை அளித்தது. இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள…
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி நடிகர் விஜய்யின் தவெக-வுடன் இணையக்கூடும் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. தற்போதைய நிலையில் காங்கிரஸால் திமுகவை விட்டு வெளியேற முடியாது என்றாலும், தொகுதிகளை பேரம் பேசுவதற்கு ‘விஜய் கார்டை’ ஒரு ஆயுதமாக பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதிக இடங்களைப் பெறவும், கூட்டணியில் தங்களின் முக்கியத்துவத்தை நிலைநாட்டவும் இத்தகைய சலசலப்புகளை கூட்டணிக் கட்சிகள் உருவாக்கி வருகின்றன. இது 2026 தேர்தலில் திமுகவிற்கு தொகுதி பங்கீட்டில் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், எம்.பி. ஜோதிமணியின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற கருத்துகள் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தலாம். உட்கட்சி விவகாரங்களை நிர்வாகிகள் பொதுவெளியில் பேசக்கூடாது. கட்சியின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டே நிர்வாகிகள் நடக்க வேண்டும்.…
வங்கதேசத்தில் நடந்த இந்துக்களுக்கு எதிரான சம்பவங்களைத் தொடர்ந்து, முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் கேகேஆர் அணியைச் சுற்றியுள்ள சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், கேகேஆர் அணிக்கு மாற்று வீரரைக் கண்டுபிடிக்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் நடந்த இந்துக்களுக்கு எதிரான சம்பவங்கள் மற்றும் பரவலான கொந்தளிப்பைத் தொடர்ந்து, வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானின் பெயர் செய்திகளில் அடிபட்டு வருகிறது. அவர் ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார், ஆனால் இப்போது ஐபிஎல்-லில் அவரது பங்கேற்பு சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. https://x.com/ANI/status/2007321016473924042? ஏஎன்ஐ அறிக்கையின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முஸ்தாபிசுர் குறித்து கேகேஆர் அணியிடம் பேசியுள்ளதுடன், அவருக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. KKR மற்றும் முஸ்தாஃபிஜுர் இருவரும் நாட்டிற்குள் பெரும் எதிர்ப்பினை எதிர்கொண்டுள்ளனர். முன்னாள் உத்திரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர் சங்கீத்சோம் கூட தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தச் சூழ்நிலை கேகேஆர் நிர்வாகத்திற்கு சங்கடமானதாகக் கருதப்படுகிறது. அணி ஐபிஎல் தொடருக்காகத்…