Author: Editor web3
சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்களும், பிற நாடுகளும், அதிக அளவில் முதலீடு செய்வதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை, தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. (ஜன.4) தங்கம் விலை ரூ.1,00,800க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.12,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,01,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து ரூ. 12,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ.265க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.8000 உயர்ந்து ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் நேற்று, ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு ரூ.257க்கும், கிலோ வெள்ளி ரூ. 2,57,000 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய சீமான், எந்த பெருமையும் தமிழர்களுக்கு இருக்கக்கூடாது என பாஜக நினைப்பதாக விமர்சித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவின் மோடி பொங்கல் என்று கூறினால், ஓடிப்போங்கள் என்று பதிலுக்கு கூற வேண்டியதுதான் என்று கிண்டலடித்துள்ளார். மேலும், தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய சீமான், எந்த பெருமையும் தமிழர்களுக்கு இருக்கக்கூடாது என பாஜக நினைப்பதாக விமர்சித்துள்ளார். திமுக அரசுக்கு நிதி மேலாண்மை இல்லை; ஏற்கெனவே ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்யவே அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேலும் கடன் சுமையை அதிகரிக்கும். ஜாக்டோ-ஜியோவிடம் பல லட்சம் வாக்குகள் இருப்பதால் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.…
சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் No Commodity Card (NC) அட்டதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை கிடைக்காது என்றும் மற்ற அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசாக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் என்ற மகிழ்ச்சிச் செய்தியை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ. 3000 ரொக்கமும் சேர்த்து அளிக்கப்படும் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். மேலும் அதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் கிடையாது: இந்தாண்டு பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 மற்றும் பொருள்களின் தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தான் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சர்க்கரை ரேஷன் அட்டை (Sugar Cards) வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொருட்கள் கிடைக்காது. மேலும் கௌரவ ரேஷன் அட்டைதாரர்கள் எனப்படும்…
தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பள்ளிகள் திறந்தாலும் சம வேலைக்கு சம ஊதியத்திற்கான போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2006 ஜூன் மாதத்திற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8,370 ரூபாய் அடிப்படை ஊதியமும், அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூ.5,200 என்ற அடிப்படை ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வேறுபாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், 311 வது தேர்தல் வாக்குறுதியாக, ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியல்,…
ஸொமேட்டோவின் தாய் நிறுவனமான எடர்னலின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான தீபிந்தர் கோயல், அந்நிறுவனத்தின் உணவு விநியோகப் பிரிவில் (ஸொமேட்டோ) ஒவ்வொரு மாதமும் சுமார் 5,000 தற்காலிகப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். யூடியூபர் ராஜ் ஷமானி உடனான ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். ஆட்குறைப்புகளைத் தவிர, ஒவ்வொரு மாதமும் சுமார் 150,000 முதல் 200,000 தற்காலிகப் பணியாளர்கள் தாங்களாகவே வேலையை விட்டு விலகுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அந்த நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் 150,000 முதல் 200,000 புதிய நபர்களைப் பணியமர்த்துகிறது. கடந்த காலாண்டு வரை, உணவு விநியோகம் தான் எடர்னல் நிறுவனத்தின் மிகப்பெரிய வணிகமாக இருந்தது, ஆனால் பின்னர் அதன் விரைவு வர்த்தகப் பிரிவான பிளிங்கிட் அதை விஞ்சியது. இருப்பினும், குருகிராமில் உள்ள ஸொமேட்டோவே நிறுவனத்தின் மிகப்பெரிய லாபம் ஈட்டும் பிரிவாகத் தொடர்கிறது. ஸொமேட்டோ மற்றும் பிளிங்கிட் தவிர, எடர்னல்…
அசாமில் உள்ள மோரிகானில் இன்று (திங்கள் கிழமை) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் வடகிழக்கு இந்தியா முழுவதும் உணரப்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின்படி, நிலநடுக்கத்தின் மையம் அசாமின் மோரிகான் மாவட்டத்தில் இருந்தது, மேலும் அதன் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக அளவிடப்பட்டது. அசாம் உட்பட பல வடகிழக்கு மாநிலங்களில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது, இதனால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அதிகாலை 4:17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அப்போது பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அசாம் தவிர, மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பிற பகுதிகளையும் நிலநடுக்கம் பாதித்தது. பூமிக்கு அடியில் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததால், நிலநடுக்கம் வெகு தொலைவில் உணரப்பட்டது. சில பகுதிகளில் லேசான நிலநடுக்கமும், மற்ற பகுதிகளில் கடுமையான நிலநடுக்கமும் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்த நிலநடுக்கத்தால் இதுவரை…
2026 டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது அணியை அறிவித்துள்ளது. லிட்டன் தாஸ் கேப்டனாகவும், முகமது சைஃப் ஹசன் துணை கேப்டனாகவும் உள்ளனர். வங்கதேச அணி உலகக் கோப்பையின் ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த அணியின் நான்கு குழு நிலை போட்டிகளில் மூன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்திலும், ஒன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்திலும் நடைபெறவுள்ளன. தன்சித் ஹசன், முகமது பர்வேஸ் ஹொசைன் மற்றும் தவ்ஹித் ஹ்ரிதாய் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். லிட்டன் தாஸ் அணிக்குத் தலைமை தாங்குவது இது முதல் முறையல்ல; அவர் இதற்கு முந்தைய போட்டியிலும் கேப்டனாக இருந்துள்ளார். லிட்டன் தாஸ் வங்கதேச அணிக்காக 29 டி20 சர்வதேசப் போட்டிகளில் கேப்டனாகப் பணியாற்றியுள்ளார். அவற்றில் 15 போட்டிகளில் வெற்றியும், 13 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளார். ஒரு போட்டி சமனில் முடிந்தது. இருப்பினும், சமீபகாலமாக வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராகப் பல அட்டூழியங்கள் நடந்ததாகப் பல…
வெனிசுலா மீதான டிரம்பின் நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பானதல்ல என முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கமலா ஹாரீஸ் தனது எக்ஸ் தளத்தில், வெனிசுலா அதிபர் மதுரோ ஒரு மிருகத்தனமான, சட்டவிரோத சர்வாதிகாரி என்பது இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் விவேகமற்றது என்ற உண்மையை மாற்றாது. இந்த படத்தை நாங்கள் முன்பே பார்த்திருக்கிறோம். எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதற்கான போரில் பாதிக்கப்போவது என்னவோ அமெரிக்க மக்கள் தான். எண்ணெய் மற்றும் தனிப்பட்ட அதிகாரத்திற்காக டிரம்ப் அரசு இந்த நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளது. https://x.com/KamalaHarris/status/2007619471893045662 அமெரிக்க மக்கள் இதை விரும்பவில்லை, அவர்கள் பொய்களை கேட்டு அவர்கள் சோர்வடைந்துள்ளனர். இது போதைப்பொருள் அல்லது ஜனநாயகம் பற்றியது அல்ல. இது எண்ணெய் மற்றும் ஒரு பிராந்திய பலசாலியாகக் காட்டிக்கொள்ளும் டொனால்ட் டிரம்பின் விருப்பத்தை கொண்டது. அவருக்கு இதில் அக்கறை இருந்திருந்தால், தண்டனை பெற்ற போதைப்பொருள் கடத்தல்காரரை அவர் மன்னித்திருக்க மாட்டார் அல்லது மதுரோவின் கூட்டாளிகளுடன் ஒப்பந்தங்களைத்…
விளையாட்டில் புகுத்தப்படும் இந்த அர்த்தமற்ற அரசியல் நம்மை எங்கே கொண்டு செல்கிறது? ஒரு தனிப்பட்ட விளையாட்டு வீரரை அவரது நாட்டின் அரசியல் சூழ்நிலைக்குப் பொறுப்பாக்குவது முறையல்ல” என்று முஷ்தபிசூர் ரகுமான் நீக்கத்திற்கு சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வங்கதேச வீரர் முஷ்தபிசுர் ரகுமானை விடுவிக்குமாறும் பிசிசிஐ உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 9.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட முஷ்தபிசுர் ரகுமானை கேகேஆர் அணி விடுவிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு திருவனநாதபுர காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “பிசிசிஐ, முஷ்தபிசுர் ரகுமானை மிகவும் பரிதாபகரமான முறையில் அணியிலிருந்து நீக்கியுள்ளது. ஒருவேளை வங்கதேசத்தின் இந்து வீரர்கள், லிட்டன் தாஸ் அல்லது சௌம்யா சர்க்கார் போன்றவர்கள் அணியில் இருந்திருந்தால் பிசிசிஐ என்ன செய்திருக்கும்?…
விமானப் பயணத்தின் போது பயணிகள் பவர் பேங்குகளைப் பயன்படுத்த தடை விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விமானத்தில் பவர் பேங்க் கொண்டு செல்லலாம், ஆனால் விமானத்திற்குள் அதைப் பயன்படுத்தவோ அல்லது சார்ஜ் செய்யவோ அனுமதி இல்லை. லித்தியம் பேட்டரிகள் கொண்ட பவர் பேங்குகள் விமானத்தின் உள்ளே தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பவர் பேங்குகளை செக்-இன் லக்கேஜ்களில் வைக்க அனுமதி கிடையாது. அவற்றை பயணிகள் தங்கள் கையோடு வைத்திருக்கும் கேபின் பேக்குகளில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். விமானம் பறக்கும் போது அவற்றை எலக்ட்ரானிக் சாதனங்களுடன் இணைப்பதோ அல்லது பயன்படுத்துவதோ முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால், விமானப் பாதுகாப்பு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.