Author: Editor web3
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு விழாவில் பங்கேற்க, புதுக்கோட்டைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வருகிறார். இதனை தொடர்ந்து, கூட்டணி, தேர்தல் வியூகம் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், புதுக்கோட்டை வருகை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர். ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, பல லட்சக்கணக்கான மக்களை இப்பேரணி இணைக்கிறது. இன்று அதன் நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துடிப்பான நிர்வாகிகளுடன் உரையாற்ற உள்ளதாக கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 3000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, ஆகியவற்றை ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது. அதாவது, கடந்த 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவும், அடுத்தடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பச்சரி மற்றும் கரும்பு உள்ளிட்ட தொகுப்புடன், ரூ.1000 ரொக்கமும் வழங்கினர். ஆனால், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகுப்பில் ரொக்கம் இடம்பெறாதது ஏமாற்றமாக அமைந்தது. . இந்நிலையில் தான் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த முறை நிச்சயம் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கமும் இடம்பெறும் என்றும்…
நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறவில்லை, அதன் பிறகு அவரது சர்வதேச வாழ்க்கையின் முடிவு குறித்த விவாதம் தீவிரமடைந்து வருகிறது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை (ஜனவரி 3) அன்று, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது. 2026 ஆம் ஆண்டின் முதல் தொடரில் ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் அது நடக்கவில்லை. உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஷமி புறக்கணிக்கப்பட்டிருப்பது, இந்திய கிரிக்கெட் வாரியம் அவரைத் தவிர்த்துவிட்டது என்பதையும், இது ஷமியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவாக இருக்கலாம் என்பதையும் உணர்த்துகிறது. ஷமி அணியில் சேர்க்கப்படாதது குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டனர். இந்திய…
ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் பாறைகளின் பெரும் பகுதி சரிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது அதிகாரிகள் கூற்றுப்படி, சனிக்கிழமை (ஜனவரி 3, 2026) மாலை, மாவட்டத்தில் உள்ள மோட்டங்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோபால்பூர் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள குவாரியில் இருந்து சில தொழிலாளர்கள் கற்களை துளையிட்டு ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்தனர். பாறைகளுக்கு அடியில் எத்தனை தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர், மேலும் சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், உள்ளூர் தீயணைப்பு சேவை குழுக்கள், ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கை படை (ODRAF) குழுக்கள், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மீட்புப் பணிகளை மேற்பார்வையிட தேன்கனல் கலெக்டர் ஆஷிஷ் ஈஸ்வர் பாட்டீல் மற்றும் எஸ்பி அபினவ் சோங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக், X இல் ஒரு பதிவில், “தென்கனலில் ஒரு கல்…
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் விஜய்யின் தவெக கூட்டணியின் இடம்பெறுவார்கள் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், களத்தில்தான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் உண்மையான நிலை தெரியும். மக்கள் அளிக்கும் வரவேற்பை பார்க்கும்போது தவெக முதலிடம் பிடிக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக கூறினார். அதிமுக, திமுகவை தவிர்த்து ஒரு புதிய கட்சி தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு வந்துவிட்டதாக கூறிய அவர், ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்புகள் தேர்தல் நேரத்தில் வெளியிடப்படுவதாகவும், அது மக்கள் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாக இருக்கிறது என்று விமர்சித்தார். மேலும், உலகளவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் குறித்த ஆய்வுகளில் விஜய் முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிட்ட செங்கோட்டையன், அடுத்த முதல்வர் விஜய்தான் என்று மக்கள் கருதுவதாக தெரிவித்தார். பொங்கல் வரை பொறுத்திருந்து பாருங்கள், தவெகவில் எத்தனை பேர் இணைவார்கள் என்பதை நீங்கள் நேரில் பார்ப்பீர்கள், நல்லவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே…
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் ஜனவரி 9ம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. அந்தவகையில், திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலும், விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, இந்தநிலையில் அதிமுக ஜன.9ம் தேதி வேட்பாளர் நேர்காணலை தொடங்கவுள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் 13ம் தேதி வரை நேர்காணல் நடக்க உள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப…
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர். அவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18-ந்தேதி கடைசி நாள். இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்து இருந்தார். அதன்படி, இந்த சிறப்பு முகாம் முதற்கட்டமாக கடந்த டிச.27,28 தேதிகளில் சனி, மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வரைவு வாக்காளர்…
அதிபர் மதுரோ அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டதை அடுத்து, வெனிசுலாவின் இடைக்கால அதிபராக துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை நியமித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெனிசுலா மீதான தாக்குதலையடுத்து, அதிபர் மதுரோ அமெரிக்க படைகளால் நேற்று சிறைபிடிக்கப்பட்டு நியூயார்க் நகருக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து, முறையான ஆட்சி மாற்றம் வரும்வரை வெனிசுலாவை அமெரிக்காவே தற்காலிகமாக நிர்வகிக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், வெனிசுலாவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை, இடைக்கால அதிபராக நியமித்து, அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாட்டின் நிர்வாகத்தை தொடரவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. டெல்சி ரோட்ரிக்ஸ் யார்? மே 18, 1969 அன்று கராகஸில் பிறந்த டெல்சி ரோட்ரிக்ஸ் , 56 வயதான இவர், தீவிர அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் 1970களில் லிகா சோசலிஸ்டா கட்சியை நிறுவிய இடதுசாரி கெரில்லா தலைவரான ஜார்ஜ் அன்டோனியோ ரோட்ரிக்ஸின் மகள். அவரது சகோதரர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் தற்போது…
பொங்கல் பரிசுத் தொகை தொடர்பான அறிவிப்பை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, ஆகியவற்றை ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது. அதாவது, கடந்த 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவும், அடுத்தடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பச்சரி மற்றும் கரும்பு உள்ளிட்ட தொகுப்புடன், ரூ.1000 ரொக்கமும் வழங்கினர். ஆனால், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகுப்பில் ரொக்கம் இடம்பெறாதது ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் தான் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த முறை நிச்சயம் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கமும் இடம்பெறும் என்றும், ரூ.5000 வரை வழங்கப்படலாம் என்றும் எதிர்க்கட்சிகள் யூகிக்க, பொதுமக்களும் எதிர்பார்த்தனர்.…
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. அமெரிக்காவுக்குள் ஃபெண்டானில் என்னும் போதைப் பொருள் ஊடுருவ நிகோலஸ் மதுரோவே காரணம் என டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார். மேலும் வெனிசுலாவுக்கு பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளார். அதே நேரம் டிரம்பின் குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்த சூழலில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இதன்பின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் இத்தகவலை வெளியிட்டார். அதில், “மதுரோ மற்றும் அவரது மனைவி பிடிபட்டனர். அவர்கள்…