Author: Editor web3

முன்னெப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கையாக, வங்கதேச அரசு உடனடியாக நாடு முழுவதும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஒளிபரப்பைத் தடை செய்துள்ளது. இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்க்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில்,  வங்கதேச அரசாங்கம் ஒரு கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. முகமது யூனுஸின் இடைக்கால அரசாங்கம், நாட்டில் அனைத்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளின் ஒளிபரப்பிற்கும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை விதித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் (பிசிசிஐ) பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கும் இடையிலான ஒரு சர்ச்சையைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், இந்தியா-பங்களாதேஷ் கிரிக்கெட் உறவுகளின் எதிர்காலம் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது. வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்டதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன், முஸ்தாஃபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு பிசிசிஐ உத்தரவிட்டது. அவர் கேகேஆர் அணிக்கு ஒரு…

Read More

சொத்து முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீசை எதிர்த்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் காலக்கட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை, அமைச்சர் பெரியசாமி, அவரது மகனும், பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார், மகள் இந்திரா உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அமைச்சர், எம்.எல்.ஏ. அலுவலகங்களில் கடந்த 2025 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சொத்து ஆவணங்கள், முதலீடு விவரங்கள், செல்போன், நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவற்றை அமலாக்கத் துறையினர் கைப்பற்றினர்.…

Read More

இந்தியப் பெண்ணான நிகிதா கோடிஷாலா அமெரிக்காவில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒரு முக்கியப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காதலனை இன்டர்போல் கைது செய்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவி நிகிதா ராவ் கோடிஷா, மேரிலாந்தில் கத்திக்குத்து காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், நிகிதாவின் உடல், அவரது முன்னாள் காதலரான அர்ஜுன் சர்மாவின் குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. நிகிதாவின் முன்னாள் காதலன் அர்ஜுனை, இன்டர்போல் காவல்துறையினர் திங்கட்கிழமை (ஜனவரி 5) தமிழ்நாட்டில் கைது செய்தனர். கொலைக்குப் பிறகு அர்ஜுன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக அமெரிக்கக் காவல்துறை தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டன. இந்தியா டுடேவில் வெளியான ஒரு அறிக்கையின்படி,  26 வயதான அர்ஜுன், அமெரிக்க மாநிலமான மேரிலாந்து நகரத்தில் உள்ள உள்ளூர் காவல்துறையிடம் ஒரு புகாரை அளித்தார்,  அதில், தனது…

Read More

காரைக்குடி, வேளச்சேரி, சிவகாசி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட 12 தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது அதிருப்தி நிலவுவதாகவும், அந்த தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் நாளுக்கு நாள் அனல் பறக்கின்றன. இப்படியிருக்கையில் திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி குறித்த வதந்திகள் பூகம்பத்தையே ஏற்படுத்தி வருகின்றன. விஜய்யுடன் கூட்டணி வைப்பதில் தமிழக காங்கிரஸில் ஒரு தரப்பு ஆர்வம் காட்டினாலும், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். ஒருவேளை அகில இந்திய காங்கிரஸ் தலைமை விஜய்யுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தால், ப. சிதம்பரம் தனது பழைய ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ போல் ஒரு புதிய கட்சியைத் தொடங்குவார் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரங்களில் பலமாக அடிபடுகின்றன. காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது நிலவும் உட்கட்சி மோதல்கள் மற்றும்…

Read More

வெனிசுலாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையின்போது 32  கியூப இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கியூப அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4, 2026)  அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெனிசுலாவில் அமெரிக்கத் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து கியூபாவால் வெளியிடப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும். கொல்லப்பட்ட அனைத்து கியூப இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகளும் வெனிசுலா அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் அங்கு பணியமர்த்தப்பட்டு, ஒரு சிறப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று கியூப அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது. இருப்பினும், அந்த அதிகாரிகள் வெனிசுலாவில் என்ன பணிகளைச் செய்து கொண்டிருந்தார்கள் என்பதை கியூப அரசாங்கம் குறிப்பிடவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்த நடவடிக்கை குறித்துக் குறிப்பிட்டார். ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜனவரி 4) புளோரிடாவிலிருந்து வாஷிங்டனுக்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “உங்களுக்குத் தெரியும், நேற்று நிறைய கியூபர்கள் இறந்தனர். எதிர்த் தரப்பில் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டன.…

Read More

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. வரும் 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேமுதிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கூட்டணி குறித்த முக்கிய முடிவை அறிவிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்ற தேர்தலில் என்ன முடிவு எடுக்க போகிறோம் என்பதை மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசித்துளோம். ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் வரக்கூடிய தேர்தலில் நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என கருத்துக்களை தெரிவிக்கலாம். தேமுதிக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டணி குறித்து உங்களுடைய கருத்தை இங்குள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கலாம்.…

Read More

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கனிமொழி, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்தநிலையில், கனிமொழிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். https://x.com/mkstalin/status/2008049956175970627?s=46 அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி – என் பாசத்திற்குரிய தங்கை, கழகத் துணைப் பொதுச்செயலாளர்,  நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! என பதிவிட்டு புகழாரம் சூட்டியுள்ளார். இதேபோல், தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2 நாட்கள் பயணமாக திருச்சிக்கு வந்துள்ள அமித்ஷா கனிமொழியிடம் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

Read More

இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல. நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன் பேர் உள்ளமல்ல’ என எம்.ஜி.ஆர் பாடிய பாடல் அப்படியே எடப்பாடி பழனிசாமிக்கு பொருந்தும்! சேலத்து மேடையில் அரசியல் நடிப்பை அரங்கேற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ’’திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி’’ எனச் சொல்லும் பழனிசாமியின் அதிமுக, அடிமை கம்பெனியாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. 2016-ஆம் ஆண்டிலிருந்து 2024-ஆம் வரை தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற பழனிசாமி ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது’ என்று சொல்வதைக் கேட்டு சின்னக் குழந்தையும் கெக்க பெக்க என சிரிக்கும். ’’2021-ல் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 இடங்களில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இது அதிமுகவின் கோட்டை’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில்…

Read More

தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்களையும் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவை திரட்ட வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு அமித் ஷா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள அமித்ஷா நேற்று நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பின்பு, மாநில நிர்வாகிகளுடன் மையக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், முரளிதர் மோகல், அர்ஜுன் ராம் மெகவால், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்களையும் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவை திரட்ட வேண்டும். பல சமுதாயங்களுக்கு பாஜக செய்துள்ள திட்டங்கள் கவுரவங்கள் தொடர்பாக எடுத்துரைத்து அவர்களை கூட்டணிக்கு ஆதரவு தர…

Read More

20 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 20 லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது என்றும் முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில்  இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்தமாணவர்களுக்கும் மணிக்கணினி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல், ஏசர், எச்பி ஆகிய நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. intel i3, 8 BG RAM 256 GB SSD…

Read More