Author: Editor web3

கரூரில் நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக வரும் 12ம் தேதி விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு தமிழ் நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்வை தொடங்கினார். அப்போது கரூரில் மாவட்டத்தில் நடைபெற்ற விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தவெக மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக் கோரி வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமானது கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியது. நான்கு மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையில் பொதுமக்கள், காவல் அதிகாரிகள் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். தவெக தரப்பில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் சி.பி.ஐ முன்பு விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர். இந்த நிலையில் தற்போது தவெக தலைவர்…

Read More

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல ஏதுவாக மொத்தம் 22,797 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் வெளியூர் மக்கள் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் நலன் கருதி பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல ஏதுவாக மொத்தம் 22,797 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 9 தேதி முதல் 14 ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 10,245 சிறப்பு பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து…

Read More

அடுத்த 30 நாட்களுக்குள் வெனிசுலாவில் புதிய தேர்தல்களை நடத்த சாத்தியமில்லை என்று என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்கா நிக்கோலஸ் மதுரோவை ஆபரேஷன் அப்சலூட் ரிசால்வ்வின் ஒரு பகுதியாக கைது செய்தது. அவர் அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டு நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மதுரோ மீது கடுமையான போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், NBC செய்திக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், வெனிசுலாவின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை என்று அதிபர் டிரம்ப் கூறினார். “முதலில் நாம் நாட்டை சரிசெய்ய வேண்டும். மக்கள் இப்போது வாக்களிக்கக் கூட முடியாது” என்று அவர் கூறினார். வெனிசுலாவின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அமெரிக்கா செயல்பட்டு வருவதாக டிரம்ப் கூறினார் . குறிப்பாக, நாட்டின் எண்ணெய் துறையை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் உதவி தேவைப்படலாம், மேலும் அரசாங்கம்…

Read More

ஐனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்,நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி உள்ளது. பொங்கல் பண்டிகையை யொட்டி வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ஜனநாயகன் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களை செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தணிக்கைச்சான்று கிடைக்க பெறாததால் பட தயாரிப்பு நிறுவனமான…

Read More

எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கல் பரிசாக ரூ.5,000 கொடுக்க சொன்ன ஸ்டாலின், தற்போது ரூ. 3,000 மட்டும் கொடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, தற்போது அறிவித்திற்கும் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில், ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து திமுக அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புகார் அளித்தார். அப்போது, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, முனுசாமி, CV சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் . சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை சந்தித்து 2021 முதல் திமுக அரசு முறைகேடுகள் ஊழல் குறித்து புகார் அளித்தோம் , திமுக அரசு செய்த ஊழல்கள் அனைத்திற்கும் ஆதாரங்களோடு சமர்ப்பித்திலும் , ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் , 56…

Read More

ஐபிஎல்லை போன்றே கிரிக்கெட் ரசிகர்களின் பெருமித்த வரவேற்பை பெண்கள் ஐபிஎல் என கூறப்படும் மகளிர் பிரீமியர் லீக்கும் பெற்றுள்ளது. பெண்கள் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக WPL தொடரானது 2023 முதல் தொடங்கி நடத்தப்பட்டுவருகிறது. இதிலும், தற்போது, உலகக்கோப்பையை வென்ற பின், பெண்கள் கிரிக்கெட் மீது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தை காட்டி வருகின்றனர். 3 சீசன்களை கடந்துள்ளநிலையில், 4வது மற்றும் 2026ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடர் நவி மும்பை, வதோதராவில் நடத்தப்படவுள்ளன. இந்த சீசனில் ஆறு அணிகள் பங்குபெறும் நிலையில், ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் லாரா வால்வார்ட் போன்ற நட்சத்திர வீராங்கனைகள் இதில் கலந்து கொள்வார்கள். WPL 2026 போட்டியில் UP வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய…

Read More

காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். PTI செய்தியின்படி, நேற்று (ஜனவரி 5) மாலை சோனியா காந்திக்கு திடீரென தீவிர இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் மார்பு நோய் நிபுணர்களின் (Chest Physician) நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து காங்கிரஸ் கட்சியோ அல்லது மருத்துவமனையோ இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. சோனியா காந்தி கடந்த பல ஆண்டுகளாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். வழக்கமான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக அவர் அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று வருகிறார். தற்போது அவர் மருத்துவமனையில் மருத்துவர்களின் பராமரிப்பில் உள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னரே கூடுதல் தகவல்கள் கிடைக்கும்.

Read More

அமெரிக்காவுடனான தற்போதைய வரிக் கட்டணப் பிரச்சினைக்கு மத்தியில், மூத்த பாஜக தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வர்த்தகம் மற்றும் வரிக் கட்டணங்கள் தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதட்டங்கள் நிலவுவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில்,  ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை மேலும் அதிகரிப் போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மிரட்டல் விடுத்தார். அப்போது பேசிய டிரம்ப், “பிரதமர் மோடி மிகவும் நல்லவர். என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புகிறார். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும், இந்தியா என்னை மகிழ்ச்சியடைய செய்வது முக்கியம்” என தெரிவித்தார். இந்தநிலையில், டிரம்பின் ஆதரவாளரான பிரதமர் மோடி ஓய்வு பெறவேண்டும் என்று…

Read More

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன் ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது என்று கூறிய நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும். த்திய தொல்லியல் துறையின் அனுமதியுடன் மலை உச்சியில் உள்ள தூணில் கோவில் நிர்வாகமே விளக்கு ஏற்ற வேண்டும். ஒவ்வொரு கார்த்திகையின்போதும் தீபம் ஏற்ற வேண்டும். தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும். தீபமேற்றும்போது யாரை அனுமதிக்கலாம் என காவல் துறை, தொல்லியல் துறை, தேவஸ்தானம் முடிவு செய்யலாம். மலை…

Read More

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு அதனை பராமரிக்க மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, அதன்படி, எனக்கு ரூ. 48,000 கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். திருச்சி மன்னார்புரத்தில் பாஜக சார்பில் நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நிகழ்ச்சி பேசிய அவர், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு அதனை பராமரிக்க மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இது அரசியல் மேடை இல்லை. இருந்தும் நான் சொல்கிறேன். ஒரு காளை வளர்ப்பவர்களுக்கு தான், அந்த காளையை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். திமுக தமது தேர்தல் வாக்குறுதியில் 2021ல் சொல்லி இருந்தார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று சொல்லி இருந்தார்கள். நியாயப்படி, திமுக இன்றைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால், மாதம் ரூ. ஆயிரம் என கணக்கு போட்டால், எனக்கே 48 ஆயிரம் ரூபாய் கொடுக்க…

Read More