Author: Editor web3
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே வரும் ஜன. 28 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததில் இருந்தே, தமிழ்நாடு தேர்தலில் பாஜக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர முனைப்பு காட்டி தீவிர பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அதன்படி, டெல்லி பாஜக தலைவர்கள் தமிழகம் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில், ஜன. 28 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜன. 28 ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக , பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில் மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், கூட்டணியை…
உணவு மற்றும் குளிர்பானத் துறையின் மாபெரும் நிறுவனமான Nestle , செவ்வாய்க்கிழமை அன்று தனது முக்கியமான சில குழந்தை ஊட்டச்சத்து தயாரிப்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இந்த தயாரிப்புகளில், குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷப்பொருள் இருக்கக்கூடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. திரும்பப் பெறப்பட்ட தயாரிப்புகளில் SMA, BEBA மற்றும் NAN என்ற பிராண்டுகளின் கீழ் விற்பனை செய்யப்படும் குழந்தை பால் கலவைகள் (infant formula) மற்றும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் பால் கலவைகள் (follow-on formula) அடங்கும். இந்த தயாரிப்புகள் பெரும்பாலும் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், உலகம் முழுவதும் எங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளனவோ அங்கு அனைத்திலும் திரும்பப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நெஸ்லே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நிறுவனம் என்ன கூறியது? ஒரு முக்கிய விநியோகஸ்தரிடமிருந்து பெறப்பட்ட மூலப்பொருளில் தரக் குறைபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம்…
உலகெங்கிலும் உள்ள நாடுகள் வெனிசுலா நிலைமை குறித்து கவலை தெரிவித்து வருகின்றன. சீனா உட்பட பல நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டித்துள்ளன. அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளாலும், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டதாலும் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், வெனிசுலா மக்களின் பாதுகாப்பே இந்தியாவின் முதன்மையான கவலை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். லக்ஸம்பர்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய எஸ். ஜெய்சங்கர், வெனிசுலா மக்களின் நலனுக்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பேசி ஒரு தீர்வை எட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவர் மேலும் கூறியதாவது, “நேற்று நாங்கள் ஒரு அறிக்கை வெளியிட்டோம் என்று நினைக்கிறேன், எனவே நீங்கள் அதைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்த அறிக்கையின் சாராம்சம் என்னவென்றால், சமீபத்திய இந்த நிகழ்வுகள் குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். ஆனால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இப்போது ஒன்றிணைந்து பேசி, வெனிசுலா மக்களின் நல்வாழ்வு மற்றும்…
அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள குறைகள் குறித்து புகார் அளிக்க ஏதுவாக புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை (Pongal) சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3000 ரொக்கப்பணம், பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகளில் நாளை முதல் விநியோகம் செய்யப்படவுள்ளன. இந்தநிலையில், பொங்கல் தொகுப்பில் தரம் குறைபாடு, ரேஷன் பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் 1967 மற்றும் 18004255901 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது மேலும் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் பதிவு செய்யலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த 2 பேர் அடித்துக் கொல்லப்பட்டத்தை அடுத்து, இந்தியாவில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. இந்த எதிர்ப்பலைகள் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்க கூடாது என்றும், மீறினால் போட்டி நடத்தும்போது ஆடுகளத்தை பெயர்த்தெடுப்போம் என்றும் ஆன்மிக தலைவர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் அரசியல் தலைவர்கள் பல்வேறிடமிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்தசூழலில் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூரை ரிலீஸ் செய்யுங்க என கேகேஆர் நிர்வாகத்திற்கு பிசிசிஐ அறிவுறுத்திய நிலையில், கடந்த 4ம் தேதி அதிகாரப்பூர்வமாக முஸ்தஃபிசூர் ரஹ்மானை வெளியேற்றியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்நிலையில் முஸ்தஃபிசூரை வெளியேற்றியதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம், இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க வரமாட்டோம் என தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில், “தற்போதைய சூழ்நிலை மற்றும் இந்தியாவில் வங்கதேச அணியின் பாதுகாப்பு குறித்து வளர்ந்து வரும் கவலைகளைத் தொடர்ந்து, வங்கதேச அரசாங்கத்தின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு,…
புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்குகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளான அவனியாபுரத்தில் வருகிற 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (ஜனவரி 7) மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது.போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட இணையதள பக்கமான madurai.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக இன்று மாலை 5 மணி முதல் 8 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்திட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், இந்த…
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையின் கீழ் பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி திமுகவை ஆட்சியில் இருந்தும் இறக்கவேண்டும் என்ற முனைப்பில், பாஜக, அதிமுக தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை, அன்புமணி நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி பேசியதாவது, எங்களுக்கு இது மகிழ்ச்சியான தருணம், கூட்டணி குறித்து முடிவு செய்துவிட்டோம், தொகுதிகளின் எண்ணிக்கையும் முடிவாகிவிட்டது என்று கூறினார். இந்தநிலையில், அதிமுக தலைமையில் பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, பாமக உடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று…
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில் இன்று (ஜன. 7) தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,02,960 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,830க்கும், ஒரு சவரன் ரூ.1,02,640க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.283-க்கும், கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,83,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிராம் வெள்ளி ரூ. 271க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,71,000க்கும்…
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். ஒருபக்கம் பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையிலான அதிகார மோதல் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இப்படியிருக்கும் நிலையில், பாஜகவும் என்.டி.ஏ. கூட்டணியை வலுப்படும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடிக்கடி தமிழகத்திற்கு வருகை தந்து நிலவரத்தை கேட்டறிந்து செல்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட தமிழகம் வந்த அமித்ஷாவை, அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி உள்ளிட்டோர் தனித்தனியாக சந்தித்தனர். அப்போது பீகாரை மாடலை தமிழகத்திலும் கொண்டுவரும் நோக்கில் காய்களை நகர்த்தி ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தந்தை மகன் மோதல் ஒருபுறம் இருந்தாலும், பாமகவை என் டி ஏ கூட்டணியில் இழுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அதன்…
கொலம்பியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயராக இருப்பதாக மிரட்டல் விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விடுத்துள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெனிசுலாவை தொடர்ந்து அதிபர் டிரம்ப் கொலம்பியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அதாவது, கோகைன் தயாரிப்பதையும், அதை அமெரிக்காவிற்கு விற்பனை செய்வதையும் விரும்பும் ஒரு மோசமான நபரின் மூலம் லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியா நடத்தப்படுகிறது” என டிரம்ப் செய்தியாளர் சந்திப்பின்போது ஓபனாக குற்றம்சாட்டினார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கொலம்பியாவின் தலைமையை, குறிப்பாக அதிபர் குஸ்டாவோ பெட்ரோவை கடுமையாக விமர்சித்தார். “கொலம்பியாவும் மிகவும் பாழ்பட்டிருக்கிறது. கோகைன் தயாரித்து அமெரிக்காவிற்கு விற்பனை செய்ய விரும்பும் ஒரு தீயவரால் அது நடத்தப்படுகிறது. இது நீண்ட காலம் நீடிக்காது” என்றார். கொலம்பியாவுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்குமா…