Author: Editor web3
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வரும் 8ம் தேதி ஆலந்தூர் நசரத்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் நலத் திட்ட உதவிகளுடன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும், இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுவதுடன், இதற்கு ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனுடன் கூடுதலாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்கப் பரிசும் சேர்த்து மொத்தம் ரூ.6,936 கோடியே…
வெனிசுலாவின் முன்னாள் அதிபர் மதுரோ, பூமியின் நரகம் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் Brooklyn சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்க படைகள் சனிக்கிழமை அதிகாலை பெரும் வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்தத் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தன. அதிபர் மதுரோவும், அவரது மனைவியும் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை அமெரிக்கா வெளியிட வேண்டும் என்று துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் வலியுறுத்திய நிலையில், அமெரிக்க ராணுவத்தின் பிடியில் அதிபர் மதுரோ இருப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது. அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், நியூயார்க்கில் உள்ள ஸ்டீவர்ட் ஏர் நேஷனல் கார்டு தளத்தில் விமானம் தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து, இவர்கள் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிபர் மதுரோவும், அவரது…
2026ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி ஆளுநர் உரையுடன் நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜன. 6ஆம் தேதி) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது குறிப்பாக, ஆளுநர் உரை, பட்ஜெட் கூட்டத்தொடர், ஓய்வூதியம் உள்ளிட்டவைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். அவரது உரையில் இடம் பெற வேண்டியவை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. மேலும், அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிவித்துள்ள நிலையில் அதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. அதேபோல்,…
விஜய்யின் ஜனநாயகன் பட டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் தொடங்கியுள்ளது. அரசியலில் குதித்துள்ள தவெக தலைவர் விஜய்யின் கடைசி படமாக , ஜனநாயகன் வெளியாக இருக்கிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிய மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. வரும் ஜனவரி 9ஆம் தேதி இப்படம் ரிலீஸாக இருக்கும் நிலையில், வெளிநாடுகளில் தொடங்கிய புக்கிங், தமிழகத்தில் எப்போது தொடங்கும் என்பது குறித்த குழப்பங்கள் நிலவின. பிற மாநிலங்களிலும் கூட டிக்கெட் புக்கிங் ஆரம்பித்துவிட்டது. அங்குள்ள ரசிகர்கள் படத்தை பார்ப்பதற்காக ஆர்வமுடன் காத்துக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 4ஆம் தேதி, டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. இந்தநிலையில், பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஜனநாயகன் பட டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் தொடங்கியுள்ளது. சென்சார் சான்றிதழ்…
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.6) பவுனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.1,02,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே, தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அன்றாடம் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில் இன்று (ஜன. 1) தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,02,640 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,760க்கும், ஒரு சவரன் ரூ.1,02,080க்கும் விற்பனை…
பீகாரில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. அங்கு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அங்கே பீகார் வெற்றிபெற காரணம் முறையாக கூட்டணி அமைத்தது. எலியும் பூனையுமாக இருந்த சிராஜ் பாஸ்வான் – நிதிஷ் குடும்பத்தை சேர்க்க காரணமாக இருந்தது பாஜக வியூகம்தான். அதேபோல் நிதிஷ் – பாஜக இடையே இருந்த கருத்து வேறுபாட்டை போக்கவும் காரணமாக இருந்தது பாஜகவின் திட்டம். இதே திட்டத்தை தமிழ்நாட்டில் பாண்டா களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக இடையே சில கருத்து வேறுபாடு உள்ளது. அதேபோல் அதிமுக உள்ளேயே உட்கட்சி மோதல் உள்ளது. செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக திரும்பி விஜய்யின் தவெகவில் இணைந்துவிட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம், டிடிவி…
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சுரேஷ் கல்மாடி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81. புனேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை 3.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. சுரேஷ் கல்மாடி, மத்திய ரயில்வே துறை இணை அமைச்சராகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) முன்னாள் தலைவராகவும் பணியாற்றினார். புனேவின் முக்கிய அரசியல் பிரமுகரான திரு. கல்மாடி, பலமுறை மக்களவையில் அந்த நகரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். தனது அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்த அவர், பல ஆண்டுகளாக தேசிய அளவில் விளையாட்டு நிர்வாகத்துடனும் தொடர்புடையவராக இருந்தார். கட்சி பாகுபாடின்றி அனைத்துத் தலைவர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர் மற்றும் பொது வாழ்வில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு அஞ்சலி செலுத்தினர். அவரது பூதவுடல் புனேவின் எரண்ட்வானே பகுதியில் உள்ள கல்மடி இல்லத்தில் மதியம் 2…
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட யூத் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி யு19 அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் ஒருநாள் போட்டி மழை, தொடர முடியாத நிலைமை ஏற்பட்டது. இறுதியில், டிஎல்எஸ் முறைப்படி போட்டியின் முடிவை நடுவர் அறிவித்தார். அப்போது, இந்திய யு19 அணி, 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், 2வது ஒருநாள் போட்டி பெனோனியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 49.3 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனிடையே மின்னல் தாக்கி இடையூறு ஏற்பட்டதால், இந்தியா 174 ரன்களை 27 ஓவர்களில் துரத்த வேண்டும் என்று இலக்கு மாற்றப்பட்டது. அதன்படி, சூர்யவஷியின் அதிரடி அரை சதத்தால், இந்திய அணி 23.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட…
சென்னை ராயபுரத்தில் 74 படுக்கைகளுடன் 1880 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசு ராஜா சர் ராமசாமி முதலியார் (ஆர்எஸ்ஆர்எம்) மருத்துவமனை வறுமை நிலையிலுள்ள தாய்மார்களுக்கு சேவை செய்வதில் முதன்மையாக உள்ளது. வடசென்னையிலுள்ள பெரும்பாலான மக்களும் மேலும் அருகிலுள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் போன்ற பகுதிகளிலுள்ள மக்களும் சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களும் இந்த மருத்துவமனையின் சேவைகளால் பயனடைகின்றனர். குடும்ப நல மருத்துவ சிகிச்சைகள், குடும்பக் கட்டுப்பாடு, மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் நடைமுறைகள் உள்ளிட்ட முழு அளவிலான சேவைகளை இம்மருத்துவமனை பொதுமக்களுக்கு சிறப்பாக வழங்கி வருகிறது. இதுதவிர இம்மருத்துவமனையில் ஆண்டுதோறும் சுமார் 12,000 மகப்பேறுகள் நடைபெறுவதன் மூலம் அதிக மக்கள் நெருக்கம் கொண்ட வட சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை செய்து வருகிறது. இம்மருத்துவமனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் செயல் திறனை அதிகரிப்பதற்காக, தமிழ்நாடு அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையின் கட்டட சீரமைப்பு, மின்சார கருவிகள் மற்றும்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த குடும்பங்களில் எத்தனை சதவீதம் நலத்திட்டங்கள் மற்றும் அரசு உதவிகளை பெறுகின்றன என்பதை காட்டும் ஒரு புள்ளிவிவர அட்டவணையை பகிர்ந்தார். இந்த தகவல்கள் அவரது சமூக ஊடகத் தளமான Truth Social-இல் வெளியிடப்பட்டன. அந்த பட்டியலில் சுமார் 120 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தாலும், இந்தியாவின் பெயர் எங்கும் இடம்பெறவில்லை. இது குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், பூடான், சீனா மற்றும் நேபாளம் ஆகியவை அந்த அட்டவணையில் தெளிவாக சேர்க்கப்பட்டிருந்ததால், இந்தியா இடம்பெறாதது மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘பிறந்த நாட்டின் அடிப்படையில் குடியேறிகளின் நலத்திட்டப் பயனாளி விகிதங்கள்’ என்ற தலைப்பிடப்பட்ட அந்த விளக்கப்படம், அமெரிக்கா வெனிசுலாவைத் தாக்கி, அதிபர் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. இருப்பினும், எந்த வகையான நலத்திட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது…