Author: Editor web3

VB-G RAM G மசோதாவை ஒரு “கருப்பு சட்டம்” என்றும் MNREGA-வை பலவீனப்படுத்துவது ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் மீதான தாக்குதல் என்றும் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, வீடியோ வெளியிட்டுள்ள சோனியா காந்தி, இந்தச் சட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MNREGA) அடிப்படைக் நோக்கத்தையே பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய VB-G RAM G மசோதையின் கீழ், யாருக்கு எவ்வளவு வேலை வழங்கப்பட வேண்டும், அது எங்கு வழங்கப்பட வேண்டும் என்பதனை முழுமையாக மத்திய அரசே தீர்மானிக்கும். இது தரைமட்ட யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளாத, அவற்றுடன் தொடர்பற்ற அணுகுமுறையாகும் என அவர் விமர்சித்தார். கடந்த 20 ஆண்டுகளாக (MNREGA) திட்டம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உறுதி செய்து வந்த நிலையில், இந்த நடவடிக்கை ஏழைகள் மற்றும் விவசாயிகளின் சட்டபூர்வ உரிமைகள்மீதான தாக்குதலாகும் என்று சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மசோதாவில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதற்கு…

Read More

தோஷாகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மற்றொரு வழக்கில்  2023-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் முன்னதாக, சிறையில் அவர் துன்புறுத்தப்படுவதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டிய நிலையில், அவருக்கு உயர்தர வசதிகள் வழங்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. இவரை தனிமை சிறையில் இருந்து விடுவிக்க ஐநா சபை ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நீண்டகால சிறை தண்டனை இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அரசியல் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Read More

SIR மூலமாக நீக்கப்பட்ட சுமார் ஒரு கோடி வாக்காளர்களில் 50 லட்சம் பேர் இஸ்லாமியர்கள் என்று சீமான் சாடியுள்ளார். இதுதொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், SIR மூலமாக ஒரு கோடி வாக்காளர்களை நீக்கியுள்ளது. இது எப்படி திருத்தம் என்று சொல்ல முடியும். குறுகிய காலத்தில் விடுபட்ட வாக்காளர்களை அடையாளம் கண்டறிந்து எப்படி மீண்டும் பட்டியலில் சேர்க்க முடியும். எப்படியும் பிப்ரவரியில் தேர்தல் அறிவித்துவிடுவார்கள். ஏற்கனவே டிசம்பர் மாதமும் முடிந்துவிட்டது, மக்களின் அடிப்படை உரிமையே வாக்கு மட்டும்தான். அதுவே கேள்விக்குறியாகி இருக்கிறது. பீகார் 81 லட்சம் வாக்குகள் எடுக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகளவில் நீக்கப்பட்டது. தற்போது பாஜகவுக்கு எதிரான 40 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள், இரட்டை வாக்குகளை மட்டுமே நீக்க வேண்டும். இன்னும் 2 மாதத்தில் எப்படி இவ்வளவு வாக்குகளை சேர்க்க முடியும். வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் போய், ஆட்சியாளர்கள் வாக்காளர்களை தேர்வு செய்யும் காலம் வந்துவிட்டது என்று விமர்சித்துள்ளார்.

Read More

 தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து நேற்று (டிசம்பர் 19) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இந்த பட்டியல் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாத நிலவரப்படி, 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், இந்த பட்டியலில் 5 கோடியே 45 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்கள் தான் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, சுமார் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில், உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என…

Read More

திமுக எப்போதும் மக்கள் செல்வாக்குடன் ஜெயித்தது இல்லை என்றும் கடந்த சட்டமன்ற தேர்தலில் சிறு கணக்கு பிழையால்தான் திமுக ஆட்சிக்கு வந்தததாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இப்போது எங்கள் அண்ணன் செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருக்கிறார். அவர் ஏதோ அம்மா உடன் இருப்பது போல் நினைத்து ஏதோ செய்துக்கொண்டிருக்கிறார். செங்கோட்டையன் அண்ணன் பாவம். அவருக்கு வேறு வழியில்லை. திமுக எப்போதுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது கிடையாது. 1967-க்குப் பிறகு எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை அவர் தான் முதலமைச்சராக இருந்தார். அதன்பிறகு, கட்சி உடைந்ததனால் திமுக ஆட்சிக்கு வந்தது. கடந்த முறைகூட ஏதோ கணக்கு தவறினால் திமுக ஆட்சிக்கு வந்தது. அதனால் இன்று 50 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று தமிழகம் வரவுள்ளார்.…

Read More

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக – பாஜக கடந்த ஏப்ரல் மாதமே கூட்டணியை அறிவித்துவிட்டன. இதனால் அதிமுகவில் பல முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அதிமுகவில் நிலவிவரும் குழப்பங்களுக்கு மத்தியில் சமீபத்தில் செங்கோட்டையன், விஜய்யின் தவெகவில் இணைந்தார். கட்சியில் இணைந்து ஒரு மாதம் கூட நிறைவடையாத சூழலில் செங்கோட்டையனுக்கு மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது, இருப்பினும் தேர்தல் வியூகங்களை வகுத்தும் வரும் அரசியல் கட்சிகள், ஒவ்வொரு கட்சிகளில் இருந்து மற்ற கட்சிகளில் இணைந்தும் வருகின்றனர். இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்கலுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி  மண்டபம் பேரூர் செயலாளர் சீமான் மரைக்காயர், மீனவர் பிரிவு இணைச் செயலாளர் சீனி காதர்மொய்தீன் நீக்கம். ராமநாதபுரம் மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர் பக்கர் அதிமுகவில்…

Read More

டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஷுப்மான் கில் உட்பட ஐந்து முக்கிய நட்சத்திரங்கள் இந்த அணியில் இல்லை. 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தநிலையில் இதில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இருப்பினும் சமீப காலமாக சொதப்பி வரும் நிலையில், இந்த பட்டியலில் கில் இடம்பெறவில்லை. கில் ஆகஸ்ட் 2025 இல் டி20 அணிக்குத் திரும்பியதிலிருந்து துணைத் தலைவராக இருந்து வருகிறார். துரதிர்ஷ்டவசமாக, அவரது டி20 ஃபார்ம் சமீபத்திய போட்டிகளில் மோசமாக உள்ளது,  இந்தநிலையில் 2026ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பையில் அவர் இடம்பெறவில்லை. அவருடன் சேர்த்து உலகக் கோப்பை அணியில் பல முக்கிய நட்சத்திரங்கள் இடம்பெறவில்லை. உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படாத வீரர்களின் பட்டியல் இதோ: மற்றொரு பெரிய வீரர் ரிஷப் பந்த், அவர்…

Read More

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். இவரின் மேடைப் பேச்சிற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்றே கூறலாம். நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்து இருக்கும் முக்கியமான நபர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டவர் காளியம்மாள். அக்கட்சியின் சார்பில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர்களில் இவரும் ஒருவராக இருந்தவர். குறிப்பாக கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். ஆனால், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காளியம்மாளுக்கு இடையே பனிப்போர் நடந்து வந்தது. மேடையிலேயே காளியம்மாளை விமர்சிப்பது, அவர் பேச்சுக்கு பதிலடி கொடுப்பது என நாளடைவில் அவர்களின் பனிப்போர் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கிய நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகினார். அதன் பின்னர் அவர் பல்வேறு கட்சிகளில்…

Read More

குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் துயரத்தை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துவதில்லை. ஏதோ சரியில்லை என்பதை உணர்த்த அவர்கள் தங்கள் நடத்தை, பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். பெற்றோர்கள் பெரும்பாலும் இந்த மாற்றங்களை புறக்கணிக்கிறார்கள், அவர்களின் பரபரப்பான அட்டவணை காரணமாகவோ அல்லது குழந்தைகள் அப்படித்தான் என்று நினைப்பதாலோ. இருப்பினும், அறிகுறிகளை சீக்கிரமே கண்டறிந்து அன்பு மற்றும் புரிதலை வழங்குவது குழந்தையின் மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம் என்று குழந்தை உளவியலாளர்கள் நம்புகிறார்கள். உங்கள் குழந்தை திடீரென்று தனியாக இருப்பதை விரும்பத் தொடங்கினால் அல்லது முன்பு போல் நேசமானவராக இல்லாவிட்டால், அது ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். ஒரு குழந்தை அதிக மகிழ்ச்சியாகத் தெரிந்தால், பின்னர் வெளிப்படையான காரணமின்றி கோபமாகவோ அல்லது எரிச்சலாகவோ இருந்தால், அது உள் மன அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். குழந்தைகள் தங்கள் உணர்வுகளை தெளிவாக வெளிப்படுத்த முடியாது, எனவே அவர்களின் நடத்தை அவற்றை பிரதிபலிக்கிறது. ஒரு குழந்தை…

Read More

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடர் சூடான விவாதங்கள், வெளிநடப்புக்கள் மற்றும் போராட்டங்களால் நிறைந்திருந்தது. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூட்டத்தொடரின் போது தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி இல்லாத நேரத்தில் பிரியங்கா காந்தி எதிர்க்கட்சியை வழிநடத்தினார். அப்போது, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அருகில் பிரியங்கா காந்தி அமர்ந்திருந்தார்.  20 நிமிடங்கள் நீடித்த இந்த தேநீர் விருந்தில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையே பல மகிழ்ச்சியான தருணங்கள் காணப்பட்டன. ஒவ்வாமைகளைத் தவிர்க்க தனது வயநாட்டுப் பகுதியிலிருந்து ஒரு மூலிகையை உட்கொள்வதாக பிரியங்கா எம்.பி.க்களிடம் கூறினார். இதைப் பார்த்து பிரதமர் மோடியும் ராஜ்நாத் சிங்கும் சிரித்துக் கொண்டிருந்தனர். பிரதமர் மோடியின் சமீபத்திய எத்தியோப்பியா, ஜோர்டான் மற்றும் ஓமன் பயணம் குறித்தும் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். பயணம் நன்றாக இருந்தது…

Read More