Author: Editor web3

தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள்(SIR) நேற்றுடன் நிறைவடைந்திருக்கின்றன. இந்நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அங்கு எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த பணிகள் காரணமாக சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் விடுபட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. எனவே தேர்தலுக்கு முன்னர் இந்த பணிகளை மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் என 12 மாநிலங்களுக்கு எஸ்ஐஆர் பணிகள் கடந்த நவ.4ம் தேதி தொடங்கின . இந்த பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் தற்போது மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப்…

Read More

செக் மோசடி வழக்கில் திரைப்பட இயக்குனர் லிங்குசாமிக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து சென்னை அல்லிகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லிங்குசாமிக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் ஃபிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பேஸ்மேன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம், கடந்த 2016-ஆம் ஆண்டு 35 லட்ச ரூபாய் கடனாக பெற்றிருந்தது. நீண்ட நாட்களாக இந்த கடன் தொகையை லிங்குசாமி செலுத்தாததால், கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 48 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் தற்போது உள்ளது. இதற்காக அளிக்கப்பட்ட காசோலை, பணம் இல்லாமல் திரும்ப வந்ததாக கூறி பேஸ்மேன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் குமார் கடந்த 2018 ம் ஆண்டு சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் லிங்குசாமி, திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமி,…

Read More

அண்ணா எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களை யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம் ஆனால் மக்கள் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போடுவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையில் நான்கு தொகுதிகள் போட்டியிடுவதற்கான விருப்பம் மனுவை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இன்று இருக்கும் ஆட்சி யாருக்கும் பாதுகாப்பு இல்லை, ஊடகங்களுக்கு பாதுகாப்பு இல்லை நீதி அரசர்களுக்கு பாதுகாப்பு இல்லை, மக்களுக்கும் பாதுகாப்பில்லை என்று குற்றம்சாட்டினார். எம்ஜிஆர் ஜெயலலிதாவை நாங்கள பின்பற்றுகிறோம் என்று சொல்கிறார் விஜய் ? யார் வேண்டுமானாலும் சொல்லலாம், எம்ஜிஆரை புகழ் பாடாமல், அரசியலில் செல்வாக்கு பெற முடியாது. அது விஜயாக மட்டுமல்ல யாராக இருந்தாலும், முதலமைச்சரே இன்று எம்ஜிஆர் தன் பெரியப்பா என்று சொல்கிறார். எம்ஜிஆரை எதிர்க்கட்சிகளும் சரி புதிதாக கட்சி தொடங்கும் கட்சிகளும் சரி தங்கள் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றால்,…

Read More

திமுக ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு முடியப் போகும் நேரத்திலும், செவிலியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பணி நிரந்தரம் கோரி, சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்திய 1,500 க்கும் மேற்பட்ட செவிலியர்களை, மாலையில் கைது செய்து, நள்ளிரவில் கிளாம்பாக்கம் பஸ்ஸ்டாண்டில் கொண்டு போய் விட்டிருக்கிறது திமுக அரசு. இதனால், அதிகாலை நான்கு மணி வரை, கிளாம்பாக்கம் பஸ்ஸ்டாண்டில், செவிலியர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். திமுக தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதி எண் 356 ல், தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களும், செவிலியர்களும், பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று கூறியிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு முடியப் போகும் நேரத்திலும், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொரோனா பெருந்தொற்று…

Read More

UPI மூலம் பணம் செலுத்தும்போது, ​​கிரெடிட் வசதியையும் பயன்படுத்திக்கொள்ள முடிந்தால், அந்த அனுபவம் எவ்வளவு எளிதாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த தொலைநோக்குப் பார்வையை நிஜமாக்கும் வகையில், கூகுள் பே நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து ஒரு கோ-பிராண்டட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனரின் யுபிஐ கணக்குடன் நேரடியாக இணைக்கப்படும். தனி அட்டை அல்லது கட்டண முறை எதுவும் தேவையில்லை—ஒரு க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, உங்கள் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கேஷ்பேக் அல்லது வெகுமதிகள் கிடைக்கும், அவற்றை உங்கள் அடுத்த கட்டணத்திற்காக உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். யுபிஐ-யின் எளிமையையும் கிரெடிட் கார்டின் செலவு வரம்புகளையும் இணைக்கும் NPCI-யின் ரூபே யுபிஐ மாதிரி மூலம் இந்த புதுமை சாத்தியமாகியுள்ளது. கூகுள் பேயின் இந்த கிரெடிட் கார்டின் முக்கிய அம்சம் என்னவென்றால் இதில் உடனடி கேஷ்பேக் மற்றும் வெகுமதி புள்ளிகள் கிடைக்கும். பொதுவாக,…

Read More

18வது மக்களவையின் ஆறாவது அமர்வில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை (MGNREGA) மாற்றுவதற்கான ஜி ராம்ஜி மசோதா உட்பட எட்டு அரசு மசோதாக்களுக்கு அவை ஒப்புதல் அளித்தது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. .19-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.  டிசம்பர் 1 முதல் 19 வரை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இறுதியாக  இன்றுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி, மக்களவை வெள்ளிக்கிழமை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், பல முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன, விவாதங்கள் நடத்தப்பட்டன, மேலும் கூச்சல் குழப்பங்கள் எழுந்தன. ஆனால் நாட்டின் கவனத்தை ஈர்த்த ஒரு கேள்வி எஞ்சியிருந்தது: டெல்லி-என்.சி.ஆரில் ஏற்படும் கொடிய காற்று மாசுபாடு குறித்து நாடாளுமன்றத்தில் ஏன் முழுமையான விவாதம் நடத்தப்படவில்லை?  என்ற கேள்வி எழும்பியுள்ளது. இருப்பினும், இந்த அமர்வின் போது அவையின் உற்பத்தித்திறன் 111 சதவீதமாக இருந்தது, மேலும் எட்டு அரசு மசோதாக்கள்…

Read More

தமிழகத்தின் பாரம்பரிய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உணவான இட்லி இந்தியாவில் 2025ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இட்லி என்பது தென்னிந்தியாவின் பிரதான உணவாக இருந்து வருகிறது. அனைவருமே விரும்பி சாப்பிடும் இந்த காலை உணவு, குழந்தைகளிலிருந்து முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகும். என்னதான் இன்று நமது ஊர்களில் வித விதமாக புதிய உணவு வந்துவிட்டாலும், இட்லிக்கு இருக்கும் மவுசு என்றும் குறைவதில்லை. ஏனெனில் இட்லி செய்வது ரொம்ப எளிது, அதே நேரம் இதில் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் எந்தப் பொருட்களும் கலக்கப்படுவதில்லை. முழுவதும் ஆவியில் வேகவைத்து சமைக்கப்படும் உணவு என்பதால், அனைவரின் தேர்வாகவும் இது இருக்கிறது. இந்தநிலையில், இந்தியாவில் 2025ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் பாரம்பரிய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உணவான இட்லி தான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது…

Read More

பிரதமர் மோடி சமீபத்தில் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு விஜயம் செய்தார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விஜயத்தின் போது, ​​மூன்று நாடுகளின் உயர்மட்ட தலைவர்களுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார், அதில் பல முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் அடங்கும். பிரதமர் மோடி இந்த நாடுகளின் வணிக மன்றங்களிலும் உரையாற்றினார். உலகளவில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கில் இந்த கௌரவங்கள் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கின்றன, பல நாடுகள் ஏற்கனவே மதிப்புமிக்க தேசிய விருதுகள் மூலம் மோடியின் தலைமையை அங்கீகரித்துள்ளன. இந்தநிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 29 உலகளாவிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் தனது இரண்டாவது மிக உயர்ந்த தேசிய விருதான ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஓமானை வழங்கி கௌரவித்துள்ளது. மே 2014 இல் பிரதமரானதிலிருந்து, அவர் 29 நாடுகளால் பல்வேறு விருதுகளால்…

Read More

ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 26 இந்தியர்கள் இறந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தில் சட்டவிரோதமாக பணியாற்றிய 202 இந்தியர்கள் இருந்தனர். இந்த ஏழு பேர் காணாமல் போயுள்ளதாகவும், 119 பேர் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 50 பேரை மீண்டும் அழைத்து வர முயற்சிகள் நடந்து வருகின்றன. கேரளாவை சேர்ந்தவர்கள் ரஷ்ய ராணுவத்தில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்திருந்த புடின், இந்தியாவுடன் பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பிறகு நாடு திரும்பினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இந்திய வருகையை மத்திய அரசு மிகப்பெரிய வெற்றியாக வர்ணித்துள்ளது. இது எப்போதும் நினைவில் இருக்கும் ஒரு…

Read More

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ–க்கள் தொடர்பான இறுதி வழிகாட்டு விதிமுறைகளை ஜனவரி 5 ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில், செப்டம்பர் 27 ம் தேதி, த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரி, த.வெ.க, அதிமுக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சிகளும், மதுரையைச் சேர்ந்த திருக்குமரன், பிரகாஷ் உள்ளிட்ட தனிநபர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 23 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், 40க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கருத்துக்களைப் பெற்று,…

Read More