Author: Editor web3

சென்னையில் இன்று (டிசம்பர் 22) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.99,840க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச முதலீட்டாளர்களும், உலகின் பல்வேறு நாடுகளும், தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்வதால் அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன் தினம் (டிசம்பர் 20), 20 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 400க்கு விற்பனையானது. சவரனுக்கு, 160  ரூபாய் அதிகரித்து, 99,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 229 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 22) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.99,840க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம்…

Read More

இந்து சாஸ்திரங்களின்படி, திருமணமான பெண்கள் குடும்பத்தின் லட்சுமியாகக் கருதப்படுகிறார்கள். பெண்கள் மேற்கொள்ளும் விரதங்கள் மற்றும் நற்செயல்களின் புண்ணியப் பலன்களைக் குடும்பம் முழுவதும் பெறுகிறது. இருப்பினும், பெண்கள் செய்யும் சிறிய தவறுகள் கூட வாழ்க்கையில் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, திருமணமான பெண்கள் இந்த ஐந்து விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தங்களின் திறமைக்கும் சக்திக்கும் ஏற்ப தர்மம் செய்ய வேண்டும். இருப்பினும், திருமணமான பெண்கள் தானம் செய்யும்போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் எதையாவது தானம் செய்யும்போது, ​​இரு கைகளாலும் கொடுக்க வேண்டும்; இது வீட்டில் சுபீட்சத்தை அதிகரிக்கும். திருமணமான பெண்கள் குளித்த பிறகு ஈரமான கூந்தலில் குங்குமம் இடக்கூடாது. ஈரமான கூந்தலுடன் வகிடு எடுப்பது அசுபமாக கருதப்படுகிறது. மேலும், பெண்கள் தங்கள் கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு பூஜை செய்யக்கூடாது. திருமணமான பெண்கள் கண்ணாடி வளையல்கள், பொட்டு, குங்குமம் போன்ற தங்களின் மங்கலப் பொருட்களை யாருடனும் பகிர்ந்து…

Read More

பலர் வீட்டில் பல்வேறு வகையான செடிகளை வைத்திருக்கிறார்கள். இது வீட்டை பசுமையாகக் காண்பது மட்டுமல்லாமல், வீட்டின் உள்ளே இருக்கும் சூழலையும் சுத்தமாக வைத்திருக்கிறது. பசுமையைப் பார்ப்பது மனநிலையைப் புத்துணர்ச்சியடையச் செய்கிறது. மனம் அமைதி பெறுகிறது. வீட்டில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. செடிகள் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆனால், சில நேரங்களில் சிலர் வாஸ்து படி சரியாக இல்லாத செடிகளை வீட்டில் நடுகிறார்கள். இந்த செடிகள் உங்கள் வாழ்க்கையில் சோகம், ஏமாற்றம், நிதி நெருக்கடி மற்றும் எதிர்மறையை அதிகரிக்க ஒரு காரணியாக மாறும். தாவரங்கள் வீட்டின் அழகை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வாழ்க்கை, மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தையும் குறிக்கின்றன. வாஸ்து சாஸ்திரம் உட்புற தாவரங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. அதன் படி, சில தாவரங்கள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகின்றன, அதே நேரத்தில் சிலவற்றை வீட்டில் வைத்திருப்பது அசுபமாகக் கருதப்படுகிறது மற்றும் எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. வாஸ்து நிபுணர்கள் பெரும்பாலும் சில தாவரங்களை…

Read More

வெனிசுலாவிற்கு எதிராக ஆயுதப் படையைப் பயன்படுத்துவது முழு பிராந்தியத்திற்கும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று  பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார், நேற்று நடைபெற்ற 67-வது மெர்கோசூர் மற்றும் கூட்டணி உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரேசில் அதிபர் லூலா, வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் இராணுவ அழுத்தம் குறித்து பேசினார்.அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள், கடற்படை தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் வெனிசுவேலா என்ற கரீபிய நாடில் உள்ள இராணுவ இருப்பு மிகவும் கவலைக்கிடமானவை என அவர் கூறினார். சின்ஹுவா செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, இதை வெளிப்புற பிராந்திய சக்தியொன்றால் மேற்கொள்ளப்படும் இராணுவ தலையீடு என லூலா விவரித்தார். இந்த நிலைமை முழு லத்தீன் அமெரிக்காவையும் அதிர்ச்சியடையச் செய்து, கவலைக்குள் தள்ளியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தென் அமெரிக்காவிற்கு அமைதியும் செழிப்பும் மட்டுமே உண்மையான பாதை என்று லூலா டா சில்வா திட்டவட்டமாகக் கூறினார். சர்வதேச சட்டத்தின் வரம்புகள் சோதிக்கப்பட்டு…

Read More

இந்த வாரத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட விக்சித் பாரத்—கேரண்டி ஃபார் ரோஸ்கார் அண்ட் ஆஜீவிகா மிஷன் (கிராமீன்) (VB-G RAM G) மசோதா, 2025-க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்  அளித்துள்ளதாக, ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டத்தை கொண்டு வரும் நோக்கில் மத்திய புதிய மசோதா ஒன்றை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்தது. இதற்கு ‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ (VB-G RAM G) என்றும் பெயர்மாற்றம் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது பாஜக தலைமையிலான மத்திய அரசு. இருப்பினும் தொடர்ந்து இந்த முடிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து, இந்த முடிவை அரசு கைவிடவேண்டும் என தெரிவித்தனர். இருப்பினும் இந்த…

Read More

இந்திய பயணத்திற்காக லியோனல் மெஸ்ஸிக்கு ரூ.100 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2022ல் கத்தாரில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கால்பந்து வெகுவாக ஆடப்படும் நாடுகளுக்கு, ‘கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் லியோனல் மெஸ்ஸி, இந்தியாவில் கடந்த 13ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதற்கட்டமாக கொல்கத்தாவில் சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சி, ஏற்பாட்டாளர்களின் குளறுபடிகளால் பெரும் வன்முறையில் முடிந்தது. வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்த அவர், பின், ஐதராபாத் சென்று, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்தார். சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அதன் பின் டெல்லியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மெஸ்ஸி சென்ற இடங்களில் எல்லாம்…

Read More

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சிகளில் இணைய தொடங்கி இருக்கின்றனர். எந்த தேர்தலையும் சந்திக்காத கட்சி நடிகர் விஜய்யின் தவெக. வரும் தேர்தலில் அந்தக் கட்சி தனித்துப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. சமீபத்தில் அந்த கட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார்.அதன் தொடர்ச்சியாக கடந்த 7ம் தேதி பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இந்தநிலையில், செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் வரிசையில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார், கட்சியில் இணைந்த உடனேயே அவருக்கு தேசிய பத்திரிகை செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுமாறு ஃபெலிக்ஸுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

Read More

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை பெரும் பிழையை செய்துள்ளதாகவும், நீதிபதி சிறந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் மறைந்த முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் 78வது பிறந்தநாளையொட்டி அவரின் திருவுருவப்படத்திற்கு‌ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு. நீதிபதி சிறந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார். சட்ட விரோதமான பணம் பரிமாற்றம் தான் குற்றம். காவல்துறை வழக்கு பதிவு செய்து குற்றச்சாட்டு வைக்க வேண்டும் ஆனால் இந்த வழக்கில் காவல்துறை அல்லது புலனாய்வுத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. முதல் தகவல் அறிக்கை இல்லாமல் அமலாக்கத்துறை பதிவு செய்வது சட்ட விரோதம். இது எப்ஐஆர் அல்ல தனிப்பட்ட குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார். 8 ஆண்டுகள் கழித்து 2021ல் அமலாக்கத்துறை…

Read More

நாட்டில் போலி பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக UGC எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் போலிப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தற்போது மேலும் 3 கல்வி நிறுவனங்களைப் போலிப் பட்டியலிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள மொத்த போலிப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ், கர்நாடகாவில் உள்ள சர்வ பாரதிய சிக்ஷா பீடம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நேஷனல் பேக்வார்ட் கிருஷி வித்யாபீடம் ஆகிய கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறாத போலியான நிறுவனங்கள் என்று UGC தெரிவித்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளோமா சான்றிதழ்கள் எதற்கும் அங்கீகாரம் கிடையாது. இந்தச் சான்றிதழ்களைக் கொண்டு மேல் படிப்பிற்கோ அல்லது வேலைவாய்ப்புக்கோ விண்ணப்பிக்க முடியாது. மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு முன்னால், அந்த நிறுவனம் UGC-ஆல் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை…

Read More

இந்தியாவின் அண்டை நாடான சீனா ஒரு பெரிய தங்கச் செல்வத்தை கண்டுபிடித்துள்ளது. முதன்முறையாக, சீனா கடலுக்கடியில் உள்ள தங்க கையிருப்புகளை கண்டறிந்துள்ளது. இந்த மிகப்பெரிய தங்கச் சுரங்கம் ஷான்டோங் மாகாணத்தின் லைஜோ (Laizhou) கடற்கரைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புடன், லைஜோ பகுதியில் உள்ள மொத்த தங்க கையிருப்பு 3,900 டன்னைக் (137.57 மில்லியன் அவுன்ஸ்) கடந்துள்ளது. இது சீனாவின் மொத்த தங்க கையிருப்பின் சுமார் 26 சதவீதமாகும். இதன் மூலம், தங்க கையிருப்பிலும் தங்க உற்பத்தியிலும் சீனா தற்போது உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. யாந்தாய் (Yantai) மாகாண அரசு, தற்போதைய ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பெற்றுள்ள சாதனைகளை எடுத்துரைக்கவும், அடுத்தகட்டத் திட்டங்களை விளக்கவும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. இந்த தங்கக் கையிருப்பு கண்டுபிடிப்பு சீனாவிற்கு மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சீனா மதிப்புமிக்க உலோகங்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், இந்த கண்டுபிடிப்பு அதற்கான…

Read More