Author: Editor web3

2026ம் ஆண்டிற்கான தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 19ஆம் தேதி கூடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு முன் நடைபெற உள்ள கூட்டத்தொடர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், வழக்கமான முழு நிதிநிலை அறிக்கைக்குப் பதிலாக, அதற்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் (Interim Budget) மட்டுமே தாக்கல் செய்ய முடியும். மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழக சட்டசபையில் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறும் கட்சி, புதிய நிதிநிலை அறிக்கையை (முழுமையான பட்ஜெட்) ஜூன் மாதம் முழுமையாக தாக்கல் செய்யும் என்று எதிர்பாக்கப்படுகிறது. ஆனால் தற்போது புதிய தகவலாக, 2026ம் ஆண்டிற்கான தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 19ஆம் தேதி கூடலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  ஒவ்வொரு ஆண்டும்…

Read More

பொங்கல் பண்டிகைக்கு பிறகு விருப்ப மனு விநியோகத்தை திமுக தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் நடக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் அதிமுக தரப்பில் சில மாதங்களுக்கு முன்பாகவே பிரச்சாரம் தொடங்கப்பட்டுவிட்ட சூழலில், தற்போது விருப்ப மனுக்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கிய இந்த விருப்ப மனு விநியோகம், டிசம்பர் 23ஆம் தேதி இன்று வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில், ஆளும் கட்சியான திமுகவின் விருப்ப மனு விநியோகம் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு விருப்ப மனு விநியோகத்தை திமுக தொடங்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், ஒருபுறம் ஜனவரி 10 ம்…

Read More

தமிழ்நாடு தேர்தலுக்கான திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே மந்தமடையத் தொடங்கியுள்ளன. இதற்குக் காரணம், கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸின் அடையாளத்தை அரித்து வருவதால், ‘இந்தியா’ கூட்டணியின் யோசனை இறுதியில் முடிவுக்கு வர வேண்டும் என்று கருதும் ராகுல் காந்தியைப் போலவே, அந்தக் கட்சியின் பலரும் சிந்திக்கத் தொடங்கியிருப்பதுதான். உண்மையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, ராகுல் காந்தி தவெக தலைவரான விஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதுதான், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மற்ற கூட்டாளிகளைத் தேடுகிறது என்பதற்கான முதல் அறிகுறி வெளிப்பட்டது. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் விஜய்யை அமைதியாகத் தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சிக்கும் நிலையில், தங்களின் எதிரி திமுக என்பதில் மிகவும் தெளிவாக உள்ளார் விஜய். விஜய்யை கடுமையாகத் தாக்க விரும்பவில்லை என்றாலும், விஜய் ஈர்க்கும் வாக்கு வங்கி, அதாவது பெண்களும் இளைஞர்களும்தான் தாங்கள் குறிவைக்கும் வாக்கு வங்கி என்பதை திமுக…

Read More

பிராட்வே பேருந்து நிலைய புனரமைப்பு பணி காரணமாக, அப்பேருந்து நிலையம் தற்காலிகமாக ராயபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னையில் பழமையானது பிராட்வே பேருந்து நிலையம். நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இப்பேருந்து நிலையத்தை ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.823 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. இந்த புனரமைப்பு பணிகளுக்காக பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட உள்ளன. பின்னர் அங்கு 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதேபோன்று பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு மாற்று கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மாலையுடன் கடைகள் முழுவதுமாக அகற்றப்பட வேண்டும் என கடை வைத்திருப்பவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் படிப்படியாக…

Read More

இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. இது வசதியாகவும், எளிதில் கிடைக்க கூடியதாகவும் இருப்பதால் பலர் தினமும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி குடிக்கின்றனர். ஆனால், இந்த வசதிக்காக நாம் ஒரு பெரிய விலையை கொடுக்கிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பல தீங்கு விளைவிக்கும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்தநிலையில், டிசம்பர் 17, 2025 தேதியிட்ட உத்தரவில், பாட்டில்களில் குடிநீரை விற்கும் நிறுவனங்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் புதிய விதிமுறைகளை இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் FSSAI அறிவித்துள்ளது. அதன்படி, பாட்டில் மற்றும் மினரல் குடிநீர் நிறுவனங்கள், பி.ஐ.எஸ்., சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்பது நீக்கப்பட்டு உள்ளது. அதற்குப் பதிலாக, குடிநீர் நிறுவனங்கள், புதிய தரப்பரிசோதனை முறைகளை பின்பற்றுவது, வரும் ஜன.,1 முதல் கட்டாயமாகிறது. இந்திய சந்தையில், பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும்…

Read More

19 வயதுக்குட்பட்ட ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன் இந்தப் பிரச்சினையை எழுப்பப் போவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ​​இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களைத் தொடர்ந்து தூண்டிவிட்டதாக மொஹ்சின் நக்வி கூறினார். பாகிஸ்தான் இந்த சம்பவத்தை ஐ.சி.சி.யிடம் அதிகாரப்பூர்வமாகப் புகாரளிக்கும். அரசியலும் விளையாட்டும் எப்போதும் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும் என்று கூறினார், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வழிகாட்டியாக இருந்த சர்பராஸ் அகமது கூறுகையில், “போட்டியின் போது இந்தியாவின் நடத்தை சரியில்லை, அது கிரிக்கெட்டின் உணர்வுக்கு எதிரானது. இருப்பினும், நாங்கள் எங்கள் வெற்றியை விளையாட்டு உணர்வுடன் கொண்டாடினோம். கிரிக்கெட் எப்போதும் விளையாட்டு உணர்வுடன் விளையாடப்பட வேண்டும்,” என்றார். இந்திய…

Read More

சென்னையில் இன்று (டிச.,23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,02,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில், முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பல நாடுகளும் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்வதால், அதன் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நம் நாட்டில் தங்கம் விலை, தினமும் உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், கடந்த (டிச.,15) ஆபரண தங்கம் கிராம், 12,515 ரூபாய்க்கும்; சவரன், ஒரு லட்சத்து 120 ரூபாய்க்கும் விற்பனையானது. அந்தவகையில் நேற்று (டிச.,22) திடீரென தங்கம் விலை சவரனுக்கு, 1,360 ரூபாய் உயர்ந்து, 1,00,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது.  இந்நிலையில் இன்று (டிச.,23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ1,02,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,770க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை…

Read More

கேரளா, தமிழ்நாடு, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளதால், 2026 ஆம் ஆண்டு   75 மாநிலங்களவை இடங்களுக்கும் தேர்தல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பெரிய அளவிலான தேர்தல்கள் நடைபெற உள்ளன. கேரளா, தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்காளம் போன்ற முக்கிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. அதே நேரத்தில், 75 ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தல்களும் திட்டமிடப்பட்டுள்ளன. மேல்சபையில் உள்ள சில இடங்கள் 2026 ஏப்ரல், ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் காலியாகும் நிலையில், இது என்டிஏ (NDA) மற்றும் இந்தியா கூட்டணி (India Bloc) இடையிலான அரசியல் அதிகார சமநிலையை மாற்றக்கூடியதாக இருக்கலாம். வரவிருக்கும் தேர்தல்களில் பீகாரில் இருந்து 5 ராஜ்ய சபா இடங்களும், உத்தரப் பிரதேசத்தில் இருந்து 10 இடங்களும் காலியாக உள்ளன. மேலும், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும்…

Read More

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சியின் அமைப்பு ரீதியான தயார்நிலை மற்றும் தேர்தல் உத்தி, கூட்டணி பங்கீடு தொடர்பாக குறித்து விவாதிக்க தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் இன்று தமிழகம் வரவுள்ளார். சமீபத்தில் தமிழகத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், செவ்வாய்க்கிழமையான இன்று சென்னைக்கு வருகை தரவுள்ளார். இந்த பயணத்தின்போது, ​​அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முறைப்படி தொடங்க உள்ளார். இது, 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக பாஜகவின் தொகுதிப் பங்கீட்டுப் பணிகளின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பாஜக வட்டாரங்களின்படி, இந்த பயணத்தின்போது, கோயல், தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மூத்த பாஜக தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை நடத்தவுள்ளார். இந்தக் கலந்தாலோசனைகளின்போது, ​​கட்சியின் அமைப்பு ரீதியான தயார்நிலை மற்றும் தேர்தல் வியூகம் குறித்து கேட்டறிவார்.…

Read More

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஆன்லைன் விசா விண்ணப்பங்களை எளிதாக்குவதற்காக டெல்லியில் உள்ள சீன தூதரகம் ‘ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை’ அறிமுகப்படுத்தியுள்ளது. சீன ஆன்லைன் விசா விண்ணப்ப முறையானது இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தில் டிசம்பர் 22, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும். விண்ணப்பதாரர்கள் https://visaforchina.cn/DEL3_EN/qianzhengyewu என்ற இணையதள முகவரியில் படிவத்தை நிரப்பி ஆன்லைனில் பதிவேற்றலாம் என்று கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஆன்லைன் விசா விண்ணப்பங்களை எளிதாக்குவதற்காக டெல்லியில் உள்ள சீன தூதரகம் ‘ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை’ நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. Shenzhen நகரைத் தலைமையிடமாகக் கொண்ட சீன ஆன்லைன் தளம் Greater Bay Area (GBA) தெரிவித்ததாவது, இதற்கு முந்தைய முறையில் விண்ணப்பதாரர்கள் பல காகித ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. புதிய ஆன்லைன் நடைமுறை அதைவிட எளிமையானதாக உள்ளது. சீனத் தொழில் வல்லுநர்களுக்கான வணிக விசா: Greater Bay Area…

Read More