Author: Editor web3
பிரபல பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கைச் சுற்றியுள்ள விவாதம் அமெரிக்காவில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. செவ்வாயன்று, அமெரிக்க நீதித்துறை, எப்ஸ்டீன் தொடர்பான பல புதிய கோப்புகளை வெளியிட்டது. இவற்றில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான குற்றஞ்சாட்டும் கருத்துக்களைக் கொண்டதாகக் கூறப்படும் ஒரு கடிதமும் இருந்தது. இருப்பினும், அந்தக் கடிதம் போலியானது என்றும் அதில் கூறப்பட்ட கூற்றுக்கள் உண்மையல்ல என்றும் நீதித்துறை தெளிவுபடுத்தியது. நீதித்துறை விளக்கம்: நீதித்துறை ஒரு அறிக்கையில், இந்த குறிப்பிட்ட கடிதத்தின் உள்ளடக்கங்கள் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்று கூறியது. இந்த ஆவணத்தை எந்த வகையிலும் உண்மையானதாகக் கருதக்கூடாது என்று தெளிவுபடுத்தியது. கடிதம் வெளியானதைத் தொடர்ந்து, இதுபோன்ற சரிபார்க்கப்படாத ஆவணங்களை வெளியிடுவது தவறான தகவல்களுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகள் எழுந்தன. இதன் விளைவாக, எந்தவொரு ஆவணத்தையும் உண்மையானதாக ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அதைச் சரிபார்ப்பது அவசியம் என்று நீதித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தக் கடிதம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் இருந்தபோது ஆகஸ்ட்…
கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைனுடனான போர் நிறுத்தம் செய்ய புதின் மறுப்பு தெரிவித்தது தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக போப் லியோ தெரிவித்துள்ளார். உக்ரைன் , ரஷ்யா இடையே இன்றுடன் சுமார் 1 ஆயிரத்து 400வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சம்பந்தப்பட்ட இராஜதந்திர முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. ரஷ்யாவின் தொடர் வான்வழித் தாக்குதல்கள் அரங்கேறும் நிலையில், போப் 14வது லியோ, கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகளாவிய போர்நிறுத்தத்திற்கான தனது அழைப்பை விடுத்துள்ளார். மேலும், ரஷ்யா இந்த…
அதிமுக – பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், திமுக கூட்டணியை வீழ்த்த பலமான கூட்டணியை உருவாக்குவதற்காக பகீரதப்பிரயத்தனம் செய்து வருகிறது பாஜக. அதன் ஒரு பகுதியாக, அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர பாஜக மட்டுமல்லாது பலரும் முயற்சி எடுத்தனர்; இன்னும் எடுத்து வருகின்றனர். இருந்த போதும் இவர்களை கட்சிக் குள்ளும் கூட்டணிக்குள்ளும் சேர்க்க முடியாது என்பதில் பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார். இந்தநிலையில், நேற்று பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தார். பின்னர், தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்தப் பேச்சுவார்த்தை ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இதில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டது. அதில், ஓ.பன்னீர் செல்வத்துக்கு…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உள்நாடு, வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு சேவைக்கான புளூபேர்ட்- 6 செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட் போன்களுக்கே அதிவேக இணைய சேவையை வழங்குவதுதான் இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கமாகும். இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை பெற முடியும். புளூபேர்ட்- 6 செயற்கைக்கோள் 6,100 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கைக்கோள் பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 மூலம் விண்ணில் ஏவப்பட்டது. மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து காலை 8.55 மணிக்கு பாகுபலி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம்…
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் நேற்று தமிழகம் வருகை தந்தார். சென்னை தனியார் விடுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார். இந்த ஆலோசனையில் அதிமுக 170 தொகுதிகளில் களம் காணும் என்றும், பாஜகவுக்கு 25 தொகுதிகளும் பாமகவுக்கு 21 தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு 6 தொகுதி மற்றும் 1 ராஜ்யசபை, அமமுகவுக்கு 6 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 3 தொகுதிகளும் புதிய தமிழகம், ஜான்பாண்டியன், புதிய நீதி கட்சி ஏ.சி. சண்முகத்துக்கு தலா 1 தொகுதி என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பட்டியலை பியூஸ் கோயிலிடம் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியதாக கூறப்படுகிறது. பட்டியலை பார்த்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இது தொடர்பாக மூத்த நிர்வாகிகள் மற்றும் அகில இந்திய தலைமையுடன் பேசிவிட்டு கூறுவதாக தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாஜகவின் மைய குழு கூட்டத்தில் விஜய் குறித்து விவாதித்ததாக தகவல் பரவியது.…
காலையில் உங்கள் ஜன்னலுக்கு வெளியே ஹாரன் சத்தம் கேட்காமல், அதற்கு பதிலாக அலைகளின் மென்மையான சலசலப்பைக் கேட்கும் ஒரு இடத்தை கற்பனை செய்து பாருங்கள். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மிதிவண்டிகளுக்கு பதிலாக, படகுகளில் செல்கிறார்கள், மேலும் அங்கு சாலைகளே இல்லை, நீர் நிறைந்த கால்வாய்தான் உள்ளது. போக்குவரத்து நெரிசல்கள் இல்லை, மாசுபாடு இல்லை, அவசரம் இல்லை. இது ஒரு கனவு அல்ல, ஆனால் நவீன உலகில் முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தை வழங்கும் ஒரு தனித்துவமான கிராமம். உலகம் நகரமயமாக்கலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது, இதனால் சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் சர்வசாதாரணமாகிவிட்டன, ஆனால் இந்த நவீன உலகில், வளர்ச்சி என்பது சாலைகளின் வலையமைப்பைக் குறிக்காது, மாறாக இயற்கையுடன் சமநிலையைக் குறிக்கும் ஒரு கிராமம் உள்ளது. இன்றும் கூட, நெதர்லாந்தில் உள்ள கீத்தூர்ன் என்ற கிராமம் சாலைகள் இல்லாமல் முற்றிலும் உயிருடன், ஒழுங்கமைக்கப்பட்டு, செழிப்பாக உள்ளது. கீத்தூர்ன் “நெதர்லாந்தின் வெனிஸ்”…
தற்போதைய கொள்கைகள் உற்பத்தித் துறையை ஊக்கமிழக்கச் செய்துவிட்டதாகவும், பொருளாதார அதிகாரத்தை ஒரு சில பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்குவதாகவும் மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நேற்று, காங்கிரஸ் கட்சி, ஜெர்மனியில் உள்ள ஒரு BMW தொழிற்சாலைக்கு தலைவர் ராகுல் காந்தி சென்றிருந்ததைக் காட்டும் காணொளியை பகிர்ந்தது. அந்தப் பயணத்தின் போது, உலகளாவிய போக்குவரத்து (mobility) மாற்றங்கள், இந்தியாவின் உற்பத்தித் திறன், மேலும் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகளை மையமாகக் கொண்ட புதிய வளர்ச்சி மாதிரி தேவையெனும் விஷயங்கள் குறித்து அவர் பேசியிருந்தார். X தளத்தில் வெளியிடப்பட்ட அந்த காணொளியில், உள் எரிபொருள் இயந்திரங்களிலிருந்து (internal combustion engines) மின்சார போக்குவரத்துக்கு (electric mobility) மாற்றம் நடைபெற்று வருவதை அந்த கார் தயாரிப்பு நிறுவனம் எவ்வாறு சமாளித்து வருகிறது என்பதை காந்தி குறிப்பிட்டார். இந்த மாற்றம் உலகம் முழுவதும் தொழில்துறைகளை மாற்றி அமைத்து வருவதாகவும் அவர் கூறினார். மின்சார வாகனத் துறையில் சீனா…
தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் மலர் மரியாதை செலுத்தினர். பின்னர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்! தமிழர்கள் தலைகுனியாமல் – ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் – பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி! பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே! என்று பதிவிட்டுள்ளார்.
சட்டவிரோத குடியேறிகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிரம்ப் நிர்வாகம் சிறப்பு ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. அவர்கள் தாமாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு $3,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.70 லட்சம் )மற்றும் கட்டண விமானப் பயணச் சலுகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை (Department of Homeland Security) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் CBP Home செயலியில் பதிவு செய்வதன் மூலம் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தது. மேலும், நாட்டை விட்டு வெளியேறத் தவறியதற்காக விதிக்கப்படும் அபராதங்கள் மற்றும் தண்டனைகளிலிருந்தும் அவர்கள் விலக்கு பெறுவார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “இந்த விடுமுறைக்காலத்தில், அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கு உதவுவோம் என்ற தனது வாக்குறுதியை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது,” என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை…
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் கடந்த டிச.14ம் தேதி அந்நாட்டில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ‘சானுக்கா’ விழா கொண்டாடப்பட்டது. இதனால் கடற்கரை பகுதியில் எப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த இருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர். துப்பாக்கி சத்தத்தை கேட்டதும், அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதனிடையே, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டனர். அதில் 50 வயதான சஜித் அக்ரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மற்றொருவரான சஜித்தின் மகன் நவீத் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சஜித் அக்ரம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் என்பது தெரியவந்தது. இந்தநிலையில், துப்பாக்கிச்சூட்டு சம்பவம் எதிரொலியாக ஆஸ்திரேலியாவின் மக்கள்…