Author: Editor web3
வரும் பொங்கலுக்குள் 831 செவிலியர்களுக்கு பணி நிரந்தரத்திற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பணிநிரந்தரம் கோரி கடந்த வாரம் MRB செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதுதொடர்பாக உடனடியாக தலையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், MRB நர்ஸ்களுகள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்திருந்தார். இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம், பணி மாறுதல் மூலம் 31 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி செவிலியர்களுக்கான பணி மூப்பு பட்டியல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் ஆணைகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் பொது மருத்துவம்…
தமிழக அரசியல் சூழல் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளன. அவரின் தேர்தல் தயாரிப்பில் ஏற்பட்ட சமீபத் தகவல் பலரின் கவனத்தையும் மையப்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு புதிய தேர்தல் சின்னம்: திமுகவுக்கு எதிரான வியூகங்களை தீட்டி வரும் விஜய், தனது கட்சியின் பிரச்சாரத்தை ஏற்கனவே துவங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, கட்சிக்கு தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கப் போகிறது என்பது குறித்து அதிக ஆர்வம் காணப்பட்டது. விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட சின்னங்களைத் தேர்வு செய்யும் முன்மனுவை தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, அக்கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விரைவில் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட உள்ளார் என்றும் கூறப்பட்டது.…
நியூயார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயரில் இந்த வாரம் “Jesus is Palestinian” (இயேசு ஒரு பாலஸ்தீனியர்) என்ற வாசகத்துடன் ஒரு விளம்பர பலகை நிறுவப்பட்டது. இது கிறிஸ்துமஸ் காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பரத்தை அமெரிக்க–அரபு எதிர்ப்பு வேற்றுமை ஒழிப்பு குழு (American-Arab Anti-Discrimination Committee – ADC) நிறுவியது. பலர் இதைத் தூண்டிவிடும் (inflammatory) செய்தியாகக் கூறி விமர்சித்துள்ளனர். குறிப்பாக பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். ஒரு சமூக ஊடக பயனர், “ஒரு அமெரிக்க நகரத்தில் இப்படியான விளம்பரத்தைப் பார்ப்பது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது” என்று எழுதியுள்ளார். மற்றொருவர், “இவ்வளவு பரபரப்பான இடத்தில் இப்படியொரு அழகான செய்தியைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறியுள்ளார். இதற்கிடையில், ADC அமைப்பின் தேசிய நிர்வாக இயக்குநர் அடெப் ஆயூப், தனது அமைப்பு இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து டைம்ஸ் ஸ்கொயரில் விளம்பர இடத்தை வாடகைக்கு எடுத்து வருவதாகவும், அந்த விளம்பரங்களை வாரந்தோறும்…
இந்திய ராணுவம் சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம் தொடர்பாக ஒரு புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. இந்தக் கொள்கையின் கீழ், வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் இன்ஸ்டாகிராமைப் பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தலாம், ஆனால் எந்தவொரு உள்ளடக்கத்தையும் இடுகையிடுவது, கருத்து தெரிவிப்பது அல்லது லைக் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கை குறித்து இராணுவம் தனது அனைத்து கள அமைப்புகள் மற்றும் பிரிவுகளுக்கும் தகவல் அளித்துள்ளதாகவும், அதை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய இராணுவம் சுமார் ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக சமூக ஊடக பயன்பாடு குறித்து ஒரு குறிப்பிட்ட கொள்கையைக் கொண்டுள்ளது. இந்தக் கொள்கையின் கீழ், இந்திய வீரர்களுக்கு ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் குறைந்த அணுகல் மட்டுமே உள்ளது. இப்போது, இன்ஸ்டாகிராமும் இந்தக் கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற முக்கிய சமூக ஊடக தளங்களைப் போலவே, இன்ஸ்டாகிராமையும் தகவல்களைச் சேகரிக்கப் பயன்படுத்தலாம். வீரர்கள் தவறான…
2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலா எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வினியோகத்தை கடந்த டிசம்பர் 15ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இந்தநிலையில், தற்போது அதிமுகவில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தங்களுடைய விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் 15.12.2025…
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளன. கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் என அனைத்து ஆயத்த பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தநிலையில் அதிமுகவிடம், 50க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என்று பாஜக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 170 தொகுதிகளில் போட்டியிடுவதில் அதிமுக உறுதியாக இருந்த போதிலும், பாஜக அதிக சட்டமன்ற இடங்களுக்கு உரிமை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் இந்த நிலைப்பாடு அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 64 இடங்களை மட்டுமே விட்டுச் செல்லும். டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்ற அதிமுகவுடனான சந்திப்பில் பாஜக 50க்கும் மேற்பட்ட இடங்களை கோரியுள்ளது. தி.நகரில் உள்ள பாஜகவின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார், அதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, மூத்த தலைவர்களும்…
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே, 2026 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அப்பாவு, ஜனவரி 20 ஆம் தேதி பேரவையை கூட்ட ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அன்றைய தினம் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டு முதல் கூட்டத் தொடரில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் ஆளுநர் ரவி, தனது உரையை புறக்கணித்தது தொடர்பாக எழுப்பப் பட்ட கேள்விக்கு, தமிழக சட்டமன்றத்தின் மரபு எதுவும் எனவும், அதனை ஆளுநர் ரவி மதித்து நடப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சபாநாயகர்…
FIDE உலக ரேபிட்&பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் இன்று தொடங்குகிறது. மின்னல் வேக காய் நகர்த்தலுக்கு பெயர்போன இப்போட்டியில் 8 முறை பிளிட்ஸ் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியனானன் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் களமிறங்குகின்றனர். ஓபன் பிரிவில் பிளிட்ஸ் மற்றும் ரேபிட் ஆகிய இரண்டு வடிவங்களிலும் முதல் நிலை வீரராக கார்ல்சன் உள்ளார். இந்திய நட்சத்திர வீரர்களும் கோப்பையை வெல்லும் நம்பிக்கையுடன் இந்தப் போட்டிக்குத் தயாராகி வருகின்றனர். நடப்பு உலக சாம்பியனான டி குகேஷ் தனது பழைய ஃபார்மை மீட்டெடுக்க முயற்சிப்பார். அர்ஜுன் எரிகைசி மற்றும் ஆர் பிரக்ஞானந்தா போன்ற மற்ற இந்திய வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலக்கு கொண்டுள்ளனர். ரேபிட் மற்றும் பிளிட்ஸ் (திறந்த பிரிவு) போட்டிகளில் இந்தியா சார்பில் 29 வீரர்களும், மகளிர் பிரிவில் மேலும் 13 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். கோனேரு ஹம்பி(Koneru Humpy…
ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற மெல்பர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை நாளுக்கு அடுத்த நாள் இப்போட்டி தொடங்குவதால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக இது அமைகிறது. எனவே, ஆஷஸ் பாக்ஸிங் டே டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட அரை சதம் அடிக்கவில்லை. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 12 ரன்களிலும், ஜேக் வெதரால்ட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்,…
கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக இந்திய துணைத் தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. ஹைலேண்ட் க்ரீக் டிரெயில் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் ஷிவாங்க் அவஸ்தி கொல்லப்பட்டதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது. மரணம் குறித்து, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், தேவையான உதவிகளை வழங்க உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் துக்கமடைந்த குடும்பத்தினருடன் துணைத் தூதரகம் தொடர்பில் உள்ளது மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, டொராண்டோ சன் அறிக்கையின்படி, துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவரைக் கண்டுபிடித்ததாகவும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். போலீசார் வருவதற்கு…