Author: Editor web3
கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக பாமகவில் இருந்து ஜி.கே. மணி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, பா.ம.க. தலைமை நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஜி.கே.மணி அவர்கள் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30&இன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் கடந்த 18.12.2025&ஆம் நாள் அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே.மணி அவர்களிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது. கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி அவர்கள்…
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.26) பவுனுக்கு ரூ.660 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.1,03,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே, தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அன்றாடம் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.26) தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,03,120 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,890-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.254-க்கும்,…
இன்றைய வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மனிதர்களின் வாழ்க்கையில் புற்றுநோய் தீவிரமாகியுள்ளன. புற்றுநோய் என்று ஒற்றை வார்த்தையில் இந்த நோயை சொல்லிவிட முடியாது. 100க்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் உள்ளன. உடலில் தொடங்கும் இடம் மற்றும் திசுக்களின் வகையை பொறுத்து இவை வகைப்படுத்தப்படுகிறது. எனினும் பொதுவான புற்றுநோய்களாக மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், இரத்த புற்றுநோய், கருப்பை தொடர்பான புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் என பலவகையான புற்றுநோய்கள் உள்ளன. புற்று நோய் பாதிப்பு, அதன் தீவிரம், சிகிச்சை பொறுத்து உயிர்வாழும் காலம் மாறுபடலாம் என்பதால் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதும் சிகிச்சையும் அவசியம். தற்போது புற்றுநோய்க்கு கீமோதெரபி, அறுவை சிகிச்சை, ரேடியேஷன், ஹார்மோன் சிகிச்சைக்கு போன்ற முக்கிய சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. இருப்பினும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கேன்சர் தடுப்பூசி தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இருப்பினும் இந்த கேன்சருக்கான ஊசி எப்போது பயன்பாட்டுக்கு வரபோகிறது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தநிலையில் தினமும் இந்த…
தேர்தல் நெருங்கும்போது ICE (IT, CBI, ED) அமைப்புகளை களமிறக்குவதை பாஜக வழக்கமான தேர்தல் வியூகமாக வைத்துள்ளதாக கனிமொழி விமர்சித்துள்ளார். TOI-க்கு அவர் அளித்த பேட்டியில், 2026ல் திமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அரசாங்கம் அனைவரையும் உள்ளடக்கியது மற்றும் அனைவருக்கும் சேவை செய்கிறது, அதே நேரத்தில் பாஜக தமிழ் பேசுபவர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டிய அவர், வருமான வரி, சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகத்தை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது என்று கூறியுள்ளார். 2026 தேர்தலில் திராவிட சித்தாந்தம் மற்றும் இந்துத்துவா இடையே போட்டி இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, தமிழ்நாட்டில் , பெரும்பான்மையானவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள், இருப்பினும் வழிபாட்டு முறைகள் வேறுபடுகின்றன. ஒரு தெளிவான கருத்தும் உள்ளது . மதம் அரசியலுடன் கலக்கக்கூடாது, தனிப்பட்ட முறையில், பகைமைக்கு ஒரு காரணம் அல்ல. இது மக்களை வாழ அனுமதித்துள்ளது என்று கூறினார். தமிழ்நாட்டில் தேர்தல்கள் இந்துத்துவா மற்றும் திராவிட…
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி கடந்த 14-ந்தேதி வரை நடந்தது. இதனை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் விடுபட்டதாக கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது, வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி, அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27-ந்தேதி (நாளை), 28-ந்தேதி (நாளைமறுநாள்) மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாமில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க…
லிபிய மூத்த அதிகாரிகளை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விமானம் துருக்கி தலைநகர் அங்காரா அருகே விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த எட்டு பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமான விபத்தில் பலியானவர்களில் லிபியாவின் உயர் இராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல்-ஹதாத்தும் ஒருவர் , இவருடன் சேர்த்து நான்கு மூத்த லிபிய இராணுவ அதிகாரிகள், மூன்று குழு உறுப்பினர்கள் என 8 பேர் பலியாகினர். இந்த சம்பவம் விமானப் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, லிபியாவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலப்பரப்புக்கும் ஒரு குறிப்பிடத்தக்க அடியாக அமைந்தது. மேலும் அங்காராவின் எசன்போகா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது , பல விமானங்கள் மாற்று இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. துருக்கிய மற்றும் லிபிய அதிகாரிகள், இந்த விமான விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை மாலை , உள்ளூர் நேரப்படி இரவு 8:30 மணியளவில் அங்காராவின் எசன்போகா விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட சிறிது…
பொங்கல் பரிசு அறிவிப்பை அரசு தற்போது வெளியிடாமல் இருப்பதால் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஏனென்றால் இந்தாண்டு பொங்கலுக்கு ரொக்க பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே, பொங்கலுக்கு ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வருகிறார். இந்தநிலையில் இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று கூறியுள்ளார். மேலும்,அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. விடுமுறை என்பது மாணவர்களின் புத்துணர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தி விடக்கூடாது என கூறினார். மேலும், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் ஜனவரி 6-ம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பெரியாரின் சிலைக்கு மற்றும் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியாருக்கு பனையூர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக ,எக்ஸ் தளத்தில் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், சமூக நீதியின் முன்னோடி, சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன். தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.
விஜய் ஹசாரே டிராபியின் தொடக்க ஆட்டத்தில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி, ஏபி டிவில்லியர்ஸின் 10 ஆண்டுகால பேட்டிங் சாதனையை முறியடித்தார். விஜய் ஹசாரே டிராபி 2025-26 இன்று (டிசம்பர் 24) தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டி பீகார் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் இடையே ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச கிரிக்கெட் மைதான வளாகத்தில் நடைபெறுகிறது, இதில் பீகாரின் துணை கேப்டன் வைபவ் சூரியவன்ஷி தனது லிஸ்ட் ஏ வாழ்க்கையில் அதிக ஸ்கோரைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம், ஏபி டி வில்லியர்ஸின் 10 ஆண்டுகால சாதனையை 10 பந்துகள் வித்தியாசத்தில் முறியடித்துள்ளார். மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் பீகார் அணிக்காக அதிக தனிநபர் ஸ்கோர் அடித்த சாதனையையும் படைத்துள்ளார். ராஞ்சியில் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக பேட்டிங் செய்து 84 பந்துகளில் 190 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில்,…
100 நாள் வேலை திட்டம் மாற்றப்பட்டதை கண்டித்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்தும் VB-G Ram G திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் 400 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. செனையில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், மத்திய அரசு, அதிமுகவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல்,அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்கி 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் ஒன்றிய செயலாளர் விவேகாநந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் திமுக தலைமை நிர்வாககுழு உறுப்பினர் மீ.ஆ.வைதியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யுனிஸ்ட் கட்சிகள் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெண்கள்…