Author: Editor web3

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு விஷயமாக குறுகிய வடிவ காணொளிகள், அதாவது ரீல்ஸ் மாறிவிட்டன. பொழுதுபோக்கிற்காகவும், தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் இவை பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், இதன் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ரீல்ஸ் (Reels) காண்பது அன்றாட செயல்களில் ஒன்றாகிவிட்டது. வேலைப்பளு, அவசர வாழ்க்கை ஆகியவற்றில் இருந்து ப்ரேக் எடுக்க ரீல்ஸ் காண்பது, அதிக நேரம் ஸ்க்ரால் செய்வது ஆகிய பழக்கம் பலருக்கும் இருக்கலாம். ஆனால், அதிக நேரம் ரீஸ்ல் பார்ப்பது, ஒரு நாள் கூட ரீல்ஸ் காணாமல் இருக்க முடியாது என்பவர்களுக்கு சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க. அதாவது, புகை மற்றும் மதுபழக்கத்தை விட மூளைக்கு 5 மடங்கு பாதிப்பை அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பது  உண்டாக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வேகமான காட்சிகள் மூளைக்கு உடனடி மனநிறைவை கொடுத்து, இன்னும்…

Read More

சவரன் ஒரு லட்ச ரூபாயை தொட்ட ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த சில நாள்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், இன்றைய (டிசம்பர் 24) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் குறித்து தற்போது அறியலாம். கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து 96,560 ரூபாயாக விற்பனையானது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 6,080 ரூபாய் அதிகரித்துள்ளது. அண்மை நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக போக்கு காட்டி வந்தது. இதில் பெரும்பாலான நாட்கள் ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. அதன்படி கடந்த டிசம்பர் 15ஆம் தேதியன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,160 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லை தங்கத்தின் விலை முதல் முறையாக கடந்தது. இதனால் நகை பிரியர்கள், இல்லத்தரசிகள் என பல்வேறு தரப்பினரும் கவலையடைந்தனர். நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து…

Read More

கேரளாவில் வேகமாக பரவி வரும்  பறவை காய்ச்சல் எதிரொலியாக, 2 மாவட்டங்களில் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. குட்டநாட்டின் ஏழு பஞ்சாயத்துகளில் பறவைக் காய்ச்சல் காரணமாக இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் அரசுக்கு தகவல் அளித்துள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள தகழி, கார்த்திகப்பள்ளி, கருவட்டா, புன்னப்ரா தெற்கு, புறக்காடு, செருதானா, நெடுமுடி மற்றும் அம்பலப்புழா தெற்கு ஆகிய பஞ்சாயத்துகளில்  பறவைக்காய்ச்சல் (H5N1) உறுதி செய்யப்பட்டது .   நோய் பாதிப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள வீட்டுப் பறவைகளை கொன்று அழிக்க கால்நடை பராமரிப்புத் துறை விரைவான நடவடிக்கைக் குழுக்களையும் தொடர்புடைய தயாரிப்புகளையும் தயார் செய்துள்ளது. கேரளாவில் பறவைக் காய்ச்சல் இன்னும் மனிதர்களைப் பாதிக்கவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கைகள் தேவை என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். கள அளவில்…

Read More

குளிர்காலத்தில், சளி, இருமல், பலவீனம் மற்றும் சோர்வு ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க நமது உடலுக்கு அதிக சக்தி, அரவணைப்பு மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி தேவை. இந்த பருவத்தில் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியம். இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் உணவில் உலர்ந்த பழங்களைச் சேர்ப்பது மிகவும் நன்மை பயக்கும். உலர்ந்த பழங்கள் ஒரு ஊட்டச்சத்து சக்தியாகும். அவற்றில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை உடலை உள்ளிருந்து சூடாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், சோர்வு, பலவீனம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பிரச்சினைகளிலிருந்தும் பாதுகாக்கின்றன. இந்த குளிர்காலத்தில் உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், வலுவாகவும் வைத்திருக்க விரும்பினால், உங்கள் தினசரி உணவில் உலர்ந்த பழங்களைச் சேர்ப்பது அவசியம். பாதாம் – பாதாம் வைட்டமின் ஈ, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த மூலமாகும். அவை மனதை கூர்மையாக்கி சருமத்தை…

Read More

சென்னையின் குன்றத்தூர் பகுதியில் புதிதாக திருமணமான மென்பொருள் பொறியாளர் தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்ட தளபதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் 25 வயதான விஜய் வாடகைக்கு வசித்து வந்தார். சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் விஜய் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்தார். அவர் தனது சக ஊழியரான 24 வயது மென்பொருள் பொறியாளர் யுவஸ்ரீயை காதலித்து வந்தார். கடந்த 13 ஆம் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டு குன்றத்தூர் பகுதியில் வாடகைக்கு வசிக்கத் தொடங்கினர். நேற்று இரவு இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால், பெண்ணின் சகோதரி வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும், குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து பார்த்தனர். உள்ளே, யுவஸ்ரீ படுக்கையில் இறந்து கிடந்ததையும், விஜய் தூக்குப்போட்டு தற்கொலை…

Read More

கடந்த வாரம் வங்கதேசத்தின் மைமென்சிங் பகுதியில் திபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் இஸ்லாமிய கும்பலால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டதை கண்டித்து, புதுடெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு இன்று பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் அவர்களின் மத இடங்கள் சேதப்படுத்தப்படுவதைக் கண்டித்து விஸ்வ இந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றன. ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்புத் தடுப்புகளைத் தள்ளிக்கொண்டு சென்றதால் பதற்றம் அதிகரித்தது. வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸின் உருவ பொம்மைகளையும் போராட்டக்காரர்கள் எரித்தனர். இந்துக்கள் கொலையை நிறுத்து”, “யுனுஸ் அரசு விழித்துக்கொள்” போன்ற கோஷங்களை எழுப்பிய அவர்கள், வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யுனுஸின் உருவ பொம்மையை எரித்தனர். வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் அவர்களது வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.…

Read More

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, திங்கட்கிழமை (டிசம்பர் 22, 2025) ஜெர்மனியின் பெர்லினுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஹெர்டி பள்ளியில் உரையாற்றிய அவர், இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்றும் இந்தியாவில் நிறுவனங்கள் செயல்படாத சூழலை பாஜக உருவாக்கியுள்ளது. காங்கிரஸ் அவற்றை தவறாகப் பயன்படுத்தவில்லை, ஆனால் பாஜக தனது அரசியல் அதிகாரத்தை அதிகரிக்க அவற்றைப் பயன்படுத்துகிறது என்று அவர் கூறினார். இந்தநிலையில், ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா, “நாட்டை அவமதிக்கும் கலையில் ராகுல் காந்தி கைதேர்ந்தவர்” என்று விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி தன்னை எதிர்க்கட்சித் தலைவர் என்பதை விட, பொய் பிரசாரங்களின் தலைவராகவும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் முகவராகவும் காட்டிக்கொள்வதாக அவர் சாடினார். வெளிநாட்டு மண்ணில் நின்று கொண்டு இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்திய மக்கள் குறித்து ராகுல் அவதூறு பரப்புவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்…

Read More

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. போட்டி முழுவதும் தோல்வியடையாமல் இருந்த இந்திய அணி, இறுதிப் போட்டியில் சரிவைச் சந்தித்தது, பிசிசிஐ-க்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, இறுதிப்போட்டியில் எந்தவிதப் போராட்டமும் இன்றி 156 ரன்களில் சுருண்டது ஏன்? என நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்து BCCI இப்போது, தலைமை பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனித்கர் மற்றும் கேப்டன் ஆயுஷ் மத்ரே ஆகியோரிடம் நேரடியாகப் பேசி இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்திறன் குறித்து விளக்கம் பெற முடிவு செய்துள்ளது. அதாவது, வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த முக்கியத் தொடருக்கு முன்னதாக,…

Read More

வரலாற்றில் பல சர்வாதிகாரிகள் இருந்திருக்கிறார்கள், ஆனால் சில பெயர்கள் உண்மையிலேயே மனதை உறைய வைக்கின்றன. ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் ஆட்சியாளரான இடி அமீன் அப்படிப்பட்ட ஒரு நபர். அவர் ஆப்பிரிக்காவின் பைத்தியக்காரன் என்று அழைக்கப்பட்டார். அதிகாரத்தில் இருந்தபோது, ​​அவர் தனது சொந்த மக்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்தது மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் அனைத்து வரம்புகளையும் மீறினார். இடி அமீன் 1971-ல் ஒரு இராணுவப் புரட்சியின் மூலம் உகாண்டாவில் ஆட்சிக்கு வந்தார். ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு வருடத்திற்குப் பிறகு, அவர் திடீரென்று ஒரு விசித்திரமான ஆணையைப் பிறப்பித்தார். ஆகஸ்ட் 1972-ல், உகாண்டாவில் உள்ள ஆசிய வம்சாவளியினர் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கனவில் தனக்கு ஒரு தெய்வீகக் கட்டளை கிடைத்ததாக அவர் கூறினார். இந்திய வம்சாவளியினருக்கு அவர் 90 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுத்தார். நாட்டை விட்டு வெளியேற மறுத்தவர்கள் சிறைத்தண்டனை அல்லது மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஏறக்குறைய 90,000 இந்தியர்கள்…

Read More

இந்திய வீராங்கனைகளுக்கான ஊதியத்தை 150% வரை உயர்த்தி பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய பெண்கள் அணி இப்போது உலக சாம்பியன். ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி. லீக் சுற்றின் ஒருகட்டத்தில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றிருந்தது இந்திய அணி. அவர்களால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், மிகச் சிறப்பாக கம்பேக் கொடுத்து, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றிய இந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியனும் ஆகிவிட்டது. அதாவது, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு நிகராக மகளிர் அணியும் அனைத்துவிதமானப் போட்டிகளிலும் சாதனை படைத்து வருகிறது.  இந்தநிலையில், திருத்தப்பட்ட ஊதிய அமைப்பின்படி, கிரிக்கெட் வீராங்கனைகளை ஊக்கமளிக்கும் விதமாக உள்நாட்டு போட்டிகளில் சீனியர் வீராங்கனைகள் இனி தினசரி ஊதியமாக ரூ.50,000, ரிசர்வ் வீராங்கனைகள் முறையே ரூ.25,000 மற்றும் ரூ.12,500…

Read More