Author: Editor web3

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், தீப்தி சர்மா தனது 4 ஓவர்களில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளார், ஆண்கள் கிரிக்கெட்டில் கூட எந்த இந்தியரும் சாதிக்காத ஒன்று. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை மகளிர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. டாஸ் வென்ற ஹர்மன்ப்ரீத் கவுர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார், இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த முடிவு சரியானது என்பதை நிரூபித்தது. ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம், தீப்தி சர்மா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டினார், டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் ஆனார். எந்த இந்திய ஆண் கிரிக்கெட் வீரரும் இந்த மைல்கல்லை எட்டவில்லை குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் முதல் விக்கெட்டை தீப்தி சர்மா வீழ்த்தி, எதிரணி…

Read More

பா.ம.க.வில் அந்த கட்சியின் நிறுவன தலைவரான டாக்டர் ராமதசுக்கும், அவரது மகனான அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நீடித்து வருகிறது.இருவரும் தனித்தனியாக பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகிறார்கள். டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்தபடியும், அன்புமணி சென்னையில் இருந்தபடியும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இப்படி இரு பிரிவாக பா.ம.க. செயல்பட்டு வரும் நிலையில், தற்போது உள்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. டாக்டர் ராமதாசின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் ஜி.கே.மணி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். எனது மீது அன்புமணி கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனவும், ஜி.கே.மணி கூறி இருந்தார். இந்த நிலையில் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி ஜி.கே.மணியை பா.ம.க.வில் இருந்து நீக்குவதாக அன்புமணி நேற்று அதிரடி…

Read More

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தெற்கு ரோட்டரி அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் . அப்போது பேசிய அவர், வெற்றி நாயகன் தளபதியை யாராலும் வெல்ல முடியாது. தமிழகத்தை ஆளப்போகும் தலைவனை, வெற்றிக் கழகத்தை வெல்ல எவராலும் வீழ்த்த முடியாது. 234 தொகுதியில் தவெக வெற்றி பெறும்‌ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தேவையற்ற விமர்சனம் செய்கிறார்கள் அவர்களைப் பற்றி நாங்கள் பேசினால் நீங்களும் கேட்பீர்கள் எங்கள் லட்சியம் வேறு. வெற்றி இலக்கை நோக்கி செல்கிறோமே தவிர டெபாசிட்டை இழக்க அல்ல. தேர்தல் பயம் காரணமாக பொங்கல் பரிசு அறிவிப்புகள் குறித்து தகவல் வருகிறது. தலைவர் விஜய் நல்லதுக்கு தான் வாய் திறப்பார். கவலைப்பட தேவையில்லை . இனி தலைவரின்…

Read More

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்து வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் விடுபட்டதாக கோரிக்கை எழுந்த நிலையில், வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாமில்,வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எவரும் முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ, ஏற்கனவே உள்ள பெயரை நீக்கவோ படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம். முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள…

Read More

 நீங்கள் இன்னும் உங்கள் பான் கார்டை உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால், இதுவே உங்களுக்கான கடைசி வாய்ப்பு. அனைத்து பான் கார்டுதாரர்களும் தங்கள் பான் கார்டை உடனடியாக ஆதாருடன் இணைக்குமாறு வருமான வரித் துறை வலியுறுத்தியுள்ளது. நீங்கள் அவ்வாறு செய்ய டிசம்பர் 31, 2025 வரை மட்டுமே அவகாசம் உள்ளது. இந்த தேதிக்குள் உங்கள் பான் கார்டு உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றால், அது ஜனவரி 1, 2026 முதல் செயலற்றதாகிவிடும். இந்த செயல்முறையை இன்னும் முடிக்காத வரி செலுத்துவோர் தங்கள் பான் மற்றும் ஆதார் அட்டைகளை இணைப்பதற்கு ₹1,000 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும், அக்டோபர் 1, 2024 க்குப் பிறகு தங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி பான் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ₹1,000 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த நபர்கள் டிசம்பர் 31, 2025 வரை தங்கள் பான் கார்டுடன் ஆதாரை இலவசமாக இணைக்கலாம்.…

Read More

உக்ரைனின் தலைநகரான கீவில் இன்று சனிக்கிழமை (டிசம்பர் 27, 2025) அதிகாலையில் தொடர்ச்சியான பலத்த வெடிச்சத்தங்களால் அதிர்ந்தது. தூக்கத்தில் இருந்த நகரம் திடீரென சைரன்கள் மற்றும் வெடிச்சத்தங்களால் விழித்துக் கொண்டது. உக்ரைன் அதிகாரிகள் உடனடியாக ஒரு எச்சரிக்கையை வெளியிட்டனர், தலைநகரம் ஏவுகணைத் தாக்குதலின் கடுமையான அச்சுறுத்தலில் இருப்பதாகவும், பாதுகாப்பு நிறுவனங்கள் முழு விழிப்புடன் இருப்பதாகவும் கூறினர். கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ டெலிகிராம் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். நகரில் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாகவும், வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அனைத்து குடிமக்களும் பாதுகாப்பான இடங்களிலும் நிலத்தடி தங்குமிடங்களிலும் இருக்குமாறு மேயர் வலியுறுத்தினார். நகரம் முழுவதும் அவசரகால சைரன்கள் ஒலித்தன, உக்ரைன் விமானப்படை தலைநகர் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் வான்வழி எச்சரிக்கையை அறிவித்தது. அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, பல பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணை நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன. கீவ் மீது வானத்தில் ஒரு பிரகாசமான மின்னல்…

Read More

சென்னையில் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை  ஒரு கிராம் ரூ.110 உயர்ந்து ரூ.13,000ஐ தொட்டது, சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.12,890-க்கும், 1 சவரன் தங்கம் ரூ.1,03,120க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 1 கிராம் தங்கம் விலை ரூ.110 உயர்ந்து, ரூ.13,000க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 1 சவரன் தங்கம் விலை ரூ.880 அதிகரித்து ரூ.1,04,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் வெள்ளி நேற்று ரூ.254-க்கு விற்கப்பட்டது. 1 கிலோ வெள்ளி ரூ.2.54 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 1 கிராம் வெள்ளி இன்று ரூ.20 அதிகரித்து ரூ.274-க்கும், 1 கிலோ விலை ரூ.20,000 உயர்ந்து ரூ.2.74 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More

திமுக அரசு நிகழ்த்திய சாதனைகளில் 5% ஆவது அதிமுக ஆட்சியில் நடந்தது என சொல்லமுடியுமா என்று ஓபன் சேலஞ்சாக கேட்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சிலரை போல் வாயில் வடை சுடும் அரசு அல்ல, ஆட்டோமொபைல் உற்பத்தி, போக்குவரத்து, வேலைவாய்ப்பு விளையாட்டு என அனைத்து துறைகளிலும் திமுக முதலிடத்தில் உள்ளது. இனி எப்போதும் ஏறுமுகம்தான் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நேரடியாக பயன்படக்கூடிய திட்டங்களை கொடுத்து, மக்களை நேரடியாக சந்திக்கும் அரசு இது. தீயணைப்பு, மீட்பு நிலையம், உயர்மட்டப் பாலம், சாலைகள்  போன்ற பல திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா. இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பேர் தொழிற்சாலைகளில் பணிபுரிவது தமிழ்நாட்டில்தான். எல்லாவற்றிலும் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.  பொதுப்போக்குவரத்தில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 4 ஆண்டுகளில் 4 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பட்டியலிட்டால்…

Read More

2025 ஆம் ஆண்டு ஒருவழியாக முடிந்து 2026 ஆம் ஆண்டை எதிர்நோக்கிக் காத்து இருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் சில நோய்த்தொற்றுக்கள் உருவாகி உலகையே உலுக்கி வந்திருக்கிறது. அப்படி 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் பேரை பாதித்த 5 நோய்கள் என்னென்ன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். கொரோனா காலத்திற்கு பிறகு உலகளாவிய அளவில் ஆரோக்கியத்திற்கு எதிராக மிகவும் சவால்களை சந்தித்து வருகிறோம். கொடிய நோய்களின் பாதிப்பு தொடர்ச்சியாக மாறி மாறி வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தநிலையில், 2025ம் ஆண்டில்  பருவ காலங்கள் மாற, மாற வெவ்வேறு விதமான பருவ கால காய்ச்சல்கள் வந்து கொண்டே இருந்தன.  குழந்தைகளும் அடிக்கடி பாதிப்பை ஏதிர்கொண்டனர். கடந்த 2025 ஆம் ஆண்டு அம்மை நோய் பிரச்சினையாலும் கணிசமான இந்தியா முழுவதிலும் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக கடந்த ஆண்டு சின்னம்மையோடு சேர்த்து தட்டம்மையாலும் நிறைய பேர் பாதிக்கப்பட்டனர்.…

Read More

பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக்கிடம் பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், கடந்த வாரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், சவுக்கு சங்கருக்கு சிகிச்சை வழங்க அனுமதி கோரி அவரது தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இதய நோய், நீரழிவு நோயில் சவுக்கு சங்கர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளார். அதேபோல சவுக்கு சங்கரை தனிமை சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்தும் அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் பி. தனபால் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு இன்று முதல் 2026 மார்ச் 25ஆம் தேதி வரை இடைக்கால…

Read More