Author: Editor web3
இன்ஜின் இல்லாத ரயில் என அதிமுகவை கலாய்த்து பேசிய உதயநிதி ஸ்டாலின் இன்னும் அப்டேட் ஆகவில்லை என்றும், அதிமுக புல்லட் ரயில் போல வேகமாக இயங்கி கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு விருப்பமனு இன்றுமுதல் விநியோகிக்கப்படுகிறது. இதனை ஒட்டி தமிழக முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இதையடுத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வரைவோலை (டிடி) கொடுக்கப்பட்டு விருப்பு மனு நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி ஜெயக்குமார், கோகுல இந்திரா, கேபி முனுசாமி, வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவதற்கும், முன்னாள் அமைச்சர்கள் அவரவர் போட்டியிடுவதற்கான விருப்பு மனுவை பெற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை…
இந்தியாவில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மிக முக்கியமான திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் விரைவில் முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய சட்டம் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கும் திட்டத்திற்கு பதிலாக, ‘விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) உத்தரவாதம்’ (VB-G RAM G) என்ற பெயரில் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த புதிய மசோதாவின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், கிராமப்புறக் குடும்பங்களுக்குச் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்படும் வேலைவாய்ப்பு நாட்களின் எண்ணிக்கை 100-இல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கிராமப்புறப் பொருளாதாரத்திற்கு சாதகமான அம்சமாக பார்க்கப்பட்டாலும், இந்த புதிய சட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் செலவினங்கள் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய…
இந்தியாவில் இளம் வயதினரிடையே (18-45 வயது) ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்த அச்சம் நிலவும் நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஓர் ஆண்டுக் கால ஆய்வு, இந்த மரணங்களுக்கான முக்கிய காரணிகளை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. கரோனரி தமனி நோய் (Coronary Artery Disease) தொடர்ந்து முக்கிய காரணியாக இருந்தாலும், இந்தத் திடீர் மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் இடையில் அறிவியல் ரீதியான எந்த தொடர்பும் இல்லை என்பதை இந்த ஆய்வு உறுதியாக நிரூபித்துள்ளது. இளம் வயதில் ஏற்படும் திடீர் மரணங்களுக்கான காரணம் குறித்துப் பொதுமக்களிடம் நிலவும் குழப்பம் மற்றும் வதந்திகளுக்கு மத்தியில், எய்ம்ஸ் மருத்துவர் டாக்டர் சுதீர் அரவா, ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சிகள் மூலம் பொதுமக்களின் புரிதலுக்கு வழிகாட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இளம் வயதினரிடையே திடீர் மரணங்கள் ஏற்படுவது, ஏற்கனவே இருக்கும் இதயம் சார்ந்த அல்லது பிற மருத்துவக் காரணங்களால் தான் ஏற்படுகின்றன என்பதை இந்த ஆய்வு தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.…
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் . ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 மதிப்புள்ள மாதாந்திர பயணச் சீட்டுகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர பேருந்துகளில் பயணிக்க, ஆயிரம், இரண்டாயிரம் ரூபாயில் மாதாந்திர பாஸ் விநியோகம் செய்யப்படுகிறது. அதிலும், இந்த ரூ. 2000 பாஸ் எடுத்துக் கொண்டால் சென்னையில் AC பேருந்துகளிலும், பொதுத்துறை பேருந்துகளிலும், எக்ஸ்பிரஸ் பேருந்துகளிலும், டீலக்ஸ் பேருந்துகளிலும், மினி பஸ்களிலும் மற்றும் இரவு பேருந்துகளிலும் பயணம் செய்ய அனுமதி வழங்குகிறது. இந்த பாஸ் மூலம், பயணிகள் ஒரே மாதத்திற்கு எவ்வளவு முறை வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியும். இந்தநிலையில், ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 மதிப்புள்ள மாதாந்திர பயணச் சீட்டுகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஒருங்கினைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மாநகர பேருந்துகளில் நாள்தோறும் பயணம் செய்யும் சுமார் 70,000 மாதாந்திர பயண அட்டைதாரர்களுக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,…
பயிர்களுக்கு எப்போது இழப்பீடு வழங்குவீர்கள்?. திட்டமிட்டு ஏமாற்றாதீர்கள்!. அன்புமணி ராமதாஸ் கேள்வி!.
பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க இன்னும் எத்தனை நாள் ஆகும் என்று கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், இனியும் தாமதிக்காமல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. லட்சக்கணக்கான உழவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு திட்டமிட்டு தாமதம் செய்வதும், ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது. வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவைப் பயிர்களும், நடவு செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களும் சேதமடைந்தன. அதன்பின் நவம்பர் இறுதியில் டிட்வா புயல் காரணமாக…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுவரும் ஞானசேகரன் மீதான் குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், கடந்தாண்டு டிசம்பர் 23ம் தேதி இரவு, அதே பல்கலையில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவியை பாலியல் வன்முறை செய்தார். பல்கலை வளாகத்திலேயே நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக, கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன், என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, ஞானசேகரரின் தாயார் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதி ராமன்…
அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக தமிழக பாஜவுக்கு தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலை சந்திக்க அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த அமித்ஷா இன்று தமிழகம் வருகை தர இருந்தார், ஆனால், பல்வேறு குழப்பங்களால் அவரது வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தேர்தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜவும் ஏற்பாடு செய்து வருகிறது. பல இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தவும், அதற்கு மேலிட தலைவர்களை அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் தற்போது சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தலைமை அலுவலக பொறுப்பாளருமான அருண் சிங்…
NDA கூட்டணியில் அமமுக இணைய வேண்டும் என்பது நயினார் நாகேந்திரனின் விருப்பம் மட்டுமே, அது குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் கூட்டணிகளை அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில், பாஜக அதிமுகவினருக்கு ஓரணியில் இணைய விருப்பம் காட்டுவது குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த சூழலில் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். இப்படியிருக்கையில் ஒருபுறம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. மறுபுறம் தினகரனை கட்சிக்குள் இழுக்கவேண்டும் என்று பாஜகவும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கூட்டணிக் கலந்துரையாடல்களுக்கு தன்னைச் சுற்றி எழும் ஊகங்களுக்கு தெளிவான பதில்களை டிடிவி தினகரன் வழங்கியுள்ளார். தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், NDA கூட்டணியில் அமமுக…
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், வரும் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேச இருக்கிறார். கோவில் நிலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி தவெக. சார்பில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதாவிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த டிசம்பர் 12ஆம் தேதி, கோவிலின் செயல் அலுவலர் தனலட்சுமி, கோவில் நிலத்தில் தவெக உட்பட எந்த அரசியல் கட்சிகளுக்கும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் மாவட்ட காவல் துறைக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். இதனால், குறிப்பிட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதில் சில நாட்கள் இழுபறி நீடித்தது. இந்த இழுபறி நிலைக்கு மத்தியில், விஜயபுரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலத்தில் தவெக பொதுக்கூட்டம்…
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் இன்று தமிழகம் வர இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக பாமக உள்ளிட்ட கட்சிகளை கொண்டு வருவது குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காக கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் இன்று தமிழகம் வருகை தருவார் என்றும் தேமுதிக மற்றும் பாமக, அமமுக கட்சிகளின் தலைவர்களை சந்திப்பார் என தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் ஜனவரி மாத நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தான் எங்களுடைய நிலைப்பாட்டை அறிவிப்போம் என தேமுதிக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது, அதேபோல பாமகவும் தமிழக வெற்றிக்கழகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் பாஜக மற்றும் அதிமுக…