தை அமாவாசையை ஒட்டி திருப்பதியில் உள்ள காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தை அமாவாசையை ஒட்டி நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை தமிழக மக்கள் வழிபட்டனர். அதன் தொடர்ச்சியாக திருப்பதியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களன ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு சிறப்பு அலங்காயம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் காளஹஸ்தியில் உள்ள  பரத்வாஜேஸ்வரர் கோயில் வளாகத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆதாரனைகளும் நடத்தப்பட்டு, கலசங்களுக்கு வேத பண்டிதர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.

இதில் காளஹஸ்தி கோயில் அறங்காவலர் குழு தலைவர் கொட்டே. சாய் பிரசாத், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  இறுதியாக உற்சவர் மூர்த்திகளின் நான்கு மாட வீதி உலாவும் நடைபெற்றது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version