Close Menu
    What's Hot

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சிவகங்கை மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுப் பயணம்: நலத்திட்ட உதவிகள் வழங்கி உரை!
    தமிழ்நாடு

    சிவகங்கை மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுப் பயணம்: நலத்திட்ட உதவிகள் வழங்கி உரை!

    Editor TN TalksBy Editor TN TalksJune 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250617 WA0000
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அரசின் திட்டப்பணிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில், இன்று சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார்.

    மாவட்ட கழக செயலாளர் மற்றும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இது குறித்து தெரிவிக்கையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று, மக்களின் குறைகளை கேட்டறிந்து ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் இன்று அவரது சுற்றுப்பயணம் நடைபெறுகிறது.

    மதுரையில் இருந்து கார் மூலம் சிவகங்கை வரும் துணை முதலமைச்சருக்கு, காலை 9:30 மணியளவில் திருப்புவனத்தில் மாவட்ட கழகம் சார்பில், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

    தொடர்ந்து, காலை 10 மணியளவில் காணூரில் 40 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் தடுப்பணை திட்டப்பணியை பார்வையிடுகிறார். பின்னர், 10:30 மணியளவில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடி சொ.லெ.சாத்தையாவை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரிக்கிறார். காலை 11 மணியளவில் சிவகங்கை தாலுகா, சோழபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டப்பணிகளை பார்வையிடுகிறார்.

    பகல் 11:30 மணியளவில், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜீத் தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் திட்டப்பணிகள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். பகல் 12 மணியளவில், சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள திடலில், நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார்.

    தொடர்ந்து, சிவகங்கை அரசு வேலுநாச்சியார் மாளிகையில் மதிய உணவு அருந்துகிறார். மாலை 4 மணியளவில் திருப்பத்தூரில் உள்ள ராஜேஸ்வரி மகாலில் கட்சியின் அனைத்து நிர்வாகிகள், துணை அமைப்பாளர்களை சந்திக்கிறார். பின்னர், ஆர்.கே.மகாலில் மாவட்ட இளைஞரணி, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை சந்திக்கிறார்.

    மாலை 6:45 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டு செல்லும் துணை முதலமைச்சர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    deputy cm tamilnadu udhayanidhi udhayanithi stalin உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சர்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகள் அருந்தினால் என்ன ஆகும் தெரியுமா? தமிழ்நாட்டிற்கும் கள்ளுக்குமான பின்னணிக் கதை!
    Next Article ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு: உலகத் தலைவர்களுடன் சந்திப்பு!
    Editor TN Talks

    Related Posts

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    February 17, 2026

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    Trending Posts

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    February 17, 2026

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.