Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம்: ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்யக் குழு அமைப்பு!
    தமிழ்நாடு

    டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம்: ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்யக் குழு அமைப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksJune 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250625 WA0003
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மதுபாட்டில் மீதும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு, காலி பாட்டில்களை வாடிக்கையாளர்கள் திரும்பக் கொண்டு வரும்போது அந்த 10 ரூபாய் திருப்பி அளிக்கப்படுகிறது.

     

    இந்த புதிய பணிகளுக்கு தற்போதுள்ள டாஸ்மாக் ஊழியர்களை நியமிக்காமல், தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும், காலி பாட்டில்களை சேகரிக்க தனி இடம் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.

    தற்போது 12 மணி நேரம் வரை பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு, காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் பணி கூடுதல் சுமையாக அமையும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் சங்கம் இந்தக் குழுவை அணுகலாம்” எனத் தெரிவித்தார்.

    இதனையடுத்து, இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Buyback Scheme Chennai Committee Director Empty Bottles Madras High Court Staff Grievances Tamil Nadu government Tasmac இயக்குநர் ஊழியர் குறைகள் காலி பாட்டில்கள் குழு சென்னை சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் தமிழக அரசு திரும்பப் பெறும் திட்டம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து… தோல்விக்கான காரணம் என்ன… சுப்மன் கில் விளக்கம்…
    Next Article பெட்ரோல் பங்கில் காவலர் மீது தாக்குதல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.