Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அடிப்படை வசதிகோரி ஆர்பாட்டம் செய்யும் சட்டக்கல்லூரி மாணவிகள்.. ஆதரவு தெரிவித்துள்ள அண்ணாமலை..
    தமிழ்நாடு

    அடிப்படை வசதிகோரி ஆர்பாட்டம் செய்யும் சட்டக்கல்லூரி மாணவிகள்.. ஆதரவு தெரிவித்துள்ள அண்ணாமலை..

    Editor TN TalksBy Editor TN TalksJune 25, 2025Updated:June 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    law protest annamali support
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகள் கோரி பல காலமாக மாணவியர் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். 152 அறைகள் இருக்கும் இந்த விடுதியில், 40 கழிப்பறைகளே உள்ளன. அறைக்கு மூன்று பேர் என, சுமார் 450க்கும் அதிகமான மாணவியர் இங்கு தங்கிப் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், சேப்பாக்க வளாக மாணவியர் 115 பேரையும், பெருங்குடி வளாகத்திற்கு மாற்றியுள்ளனர். ஏற்கனவே அடிப்படை வசதிகள் முறையாக இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மாணவியர், மேலும் அதிகமாகப் பாதிக்கப்பட்டு, வேறுவழியின்றி, நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநிலத்தின் தலைமைச் சட்டக் கல்லூரி விடுதியில், அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல், மேலும் மேலும் அவர்களை அலைக்கழிப்பது ஏன்? நல்ல குடிநீர், தரமான உணவு என எதுவும் வழங்கப்படுவதில்லை. சட்டம் பயிலும் மாணவியர் நிலையே இப்படி என்றால், இதர மாணவ, மாணவியர் விடுதிகளின் நிலை எத்தனை மோசமாக இருக்கும்?

    அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று திமுக அரசு சார்பில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக அரசு, வழக்கம்போல இந்தப் பிரச்சினையை மடைமாற்றிவிடலாம் என்று எண்ணினால், அது நடக்காது.

    அம்பேத்கர் சட்டக் கல்லூரி விடுதி மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர் விடுதிகளிலும், முறையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தரமான உணவு, நல்ல குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இதற்கு முதல் படியாக, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம் அமைந்திருக்கிறது. தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அனைத்து சட்டக் கல்லூரி மாணவியருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    Annamalai student support Annamalai supports students basic facilities in colleges BJP Annamalai statement education protest TN law college protest Tamil Nadu law students strike students protest for basic amenities Tamil Nadu college issues TN law college girls protest
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய நிர்வாகிகள் நியமனத்தில் கவனம் தேவை.. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு..
    Next Article தமிழக கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள்: சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம்!
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.