Close Menu
    What's Hot

    நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் மெகா திட்டம்!. லிஸ்டில் சென்னையும் இருக்கு!.

    கனவில் கத்தும்போது உங்களுக்கு சத்தம் கேட்பதில்லையா?. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?.

    “ஜென் இசட், ஆல்பா தலைமுறை நாட்டை வழிநடத்தும்” – பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வெளிநாடு செல்ல அனுமதி கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்.. அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
    தமிழ்நாடு

    வெளிநாடு செல்ல அனுமதி கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்.. அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    high court 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     

    இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முன்னதாக முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அசோக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

     

    இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், பதினைந்து நாட்களுக்கு மட்டும் அனுமதி அளித்தால் போதுமெனவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

     

    இதற்கு குறுக்கிட்ட நீதிபதிகள், “நீங்களே நினைத்தாலும் நீண்ட நாட்கள் இருக்க முடியாது. ட்ரம்ப் உங்களை வெளியேற்றிவிடுவார்” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டனர்.

     

    இதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஜ்னீஷ் பத்தியால், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனக் கோரினார்.

     

    ஒருவேளை அமெரிக்கா செல்ல அனுமதியளிக்கப்பட்டால், பாஸ்போர்ட்டை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தாக்கல் செய்ய நேரிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, பயணத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய அசோக்குமார் தரப்புக்கும், மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    Appeal Ashok Kumar Chennai High Court ED Enforcement Directorate Heart Surgery Indian Embassy John Sathyan Medical Treatment MS Ramesh passport Principal Sessions Court Rajneesh Bathiyal Senthil Balaji USA Travel V Lakshminarayanan அசோக் குமார் அமலாக்கத்துறை அமெரிக்க பயணம் இதய அறுவை சிகிச்சை இந்திய தூதரகம் எம்.எஸ்.ரமேஷ் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றம் பாஸ்போர்ட் மருத்துவ சிகிச்சை முதன்மை அமர்வு நீதிமன்றம் மேல்முறையீடு ரஜ்னீஷ் பத்தியால் வி.லட்சுமி நாராயணன் ஜான் சத்யன்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகொள்ளிடம் ஆற்று நீர் தொழிலகப் பயன்பாட்டிற்கு வழங்கப்படாது – எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு !
    Next Article “உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு ‘பொய்களுடன் ஸ்டாலின்’ என்பதே பொருந்தும்” – டி. ஜெயக்குமார் விமர்சனம்!
    Editor TN Talks

    Related Posts

    “என்னை நீக்க அன்புமணிக்கு அதிகாரமில்லை”!. ஜி.கே.மணி அட்டாக்!.

    December 27, 2025

    பேராசை பெரு நஷ்டம்: பாடுபட்டு சம்பாதித்த ரூ.3.40 கோடியை ஆன்லைன் மோசடியில் இழந்த நபர்

    December 27, 2025

    விஜய்தான் உண்மையான தளபதி; மற்றவர்களெல்லாம் வெட்டி தளபதி!. KAS விமர்சனம்!

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் மெகா திட்டம்!. லிஸ்டில் சென்னையும் இருக்கு!.

    கனவில் கத்தும்போது உங்களுக்கு சத்தம் கேட்பதில்லையா?. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?.

    “ஜென் இசட், ஆல்பா தலைமுறை நாட்டை வழிநடத்தும்” – பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

    “சமூக நீதி குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை” – மதுரையில் அன்புமணி பேட்டி

    ஆண்கள் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனை!. முதல் இந்திய வீராங்கனை!. வரலாறு படைத்த தீப்தி சர்மா!. 

    Trending Posts

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    திமுக அரசின் சாதனைகளில் 5%- ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?. முதல்வர் ஸ்டாலின் சேலஞ்ச்!

    December 26, 2025

    நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் மெகா திட்டம்!. லிஸ்டில் சென்னையும் இருக்கு!.

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.