Close Menu
    What's Hot

    நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்… மாநில அரசும் பருத்தி கொள்முதல் செய்ய கோரிக்கை!

    2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு… தொழில் துறை அமைச்சர் மதன் தகவல்

    வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது…. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல!”: கர்நாடக முதல்வரின் மனதை மாற்றிய கனமழை
    Featured

    “இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல!”: கர்நாடக முதல்வரின் மனதை மாற்றிய கனமழை

    Editor web2By Editor web2August 1, 2026Updated:August 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Cauvery water
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், அளவுக்கு அதிகமாக நீரைத் தேக்கினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆபத்து உருவாகும் என்பதால்,   “இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல” என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்  கருத்து பதிவிட்டுள்ளார்.

    கடந்த சில நாட்களாகக் காவிரி நீர் பங்கீடு தொடர்பாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்திற்குத் தினமும் 3,500 கனஅடி நீர் வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனப் புதுடெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், தங்கள் மாநிலக் குடிநீர் தேவையைச் சுட்டிக்காட்டி கர்நாடகா நீர் திறக்கத் தயக்கம் காட்டியது.

    இதனிடையே, மேகதாது அணை கட்டும் விவகாரம் மற்றும் காவிரிப் பிரச்சினை தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே சுமூகத் தீர்வு காணத் தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல இருந்த சூழலில், எல்லைப் பகுதிகளில் கன்னட அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் மற்றும் முற்றுகை அறிவிப்புகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கின. இதனால் அவரை கர்நாடகா வர வேண்டாம் என முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.

    DK Sivakumar scaled

    இந்த நிலையில், காவிரியில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அத்துடன் கடை அடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளன.

    இந்த நிலையில், கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணை உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டிய கட்டாயம் கர்நாடகாவுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடகாவின் கபினி அணைக்கு வினாடிக்கு 15,675 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருப்பதால், கபினி அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து,  ”இயற்கையாருக்கும் சொந்தமானது அல்ல. கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த நேரத்தில் அதிக நீரை தேக்கினால்வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவோம். தமிழ்நாட்டிற்கு எதிரான கடையடைப்பு அறிவிப்பை திரும்ப பெறுக…” என கர்நாடக  முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கருத்து பதிவிட்டுள்ளார்.

    CauveryWaterDispute DKShivakumar KarnatakaNews MekedatuIssue
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇடுக்கியில் கொட்டித் தீர்க்கும் கனமழை; நெடுஞ்சாலைகளில் மண்சரிவு – மலைப்பாதைப் பயணங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை!
    Next Article காமன்வெல்த்: டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவுக்கு 2 விருதுகள்… தமிழக வீரர்கள் தட்டித் தூக்கினர்!
    Editor web2
    • Website

    Related Posts

    நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்… மாநில அரசும் பருத்தி கொள்முதல் செய்ய கோரிக்கை!

    August 1, 2026

    2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு… தொழில் துறை அமைச்சர் மதன் தகவல்

    August 1, 2026

    வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது…. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்… மாநில அரசும் பருத்தி கொள்முதல் செய்ய கோரிக்கை!

    2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு… தொழில் துறை அமைச்சர் மதன் தகவல்

    வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது…. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

    “தேவையென்றால் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்!” – கவிஞர் வைரமுத்து பேச்சு

    ரசிகர் மன்ற நிர்வாகி குழந்தைகளின் முழு கல்விச் செலவு – நடிகர் தனுஷ் ஏற்றார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.