Close Menu
    What's Hot

    விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்பு?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பெண்களின் அந்தரங்க வீடியோக்களை நீக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு உறுதி!
    இந்தியா

    பெண்களின் அந்தரங்க வீடியோக்களை நீக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு உறுதி!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    15
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இணையதளங்களில் பகிரப்படும் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை அகற்றுவது தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    தனது அந்தரங்க வீடியோக்களை இணையதளங்களில் இருந்து அகற்றக் கோரி ஒரு பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க வீடியோக்களும் புகைப்படங்களும் ஆறு இணையதளங்களில் இருப்பதாகவும், அவற்றை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

    காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பாலியல் வன்கொடுமை, போக்சோ வழக்குகள் மட்டுமல்லாமல், அனைத்து பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை மறைத்து, வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிக்கும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் முதல் தகவல் அறிக்கை (FIR) உள்ளிட்ட வழக்கு ஆவணங்களில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

    மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, இணையவழித் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்கள், தங்கள் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எளிதாக நீக்குவதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    மத்திய அரசின் இந்தத் தகவலைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தாக்கல் செய்ய ஏதுவாக, வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Central Government Chennai High Court Court Cyber Attack Guidelines Internet Private Videos Women அந்தரங்க வீடியோ இணையதளம் சென்னை உயர் நீதிமன்றம் சைபர் தாக்குதல் நீதிமன்றம் பெண்கள் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸின் “தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்..!
    Next Article கரூரில் இரு புதிய மணல் குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பம்…
    Editor TN Talks

    Related Posts

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்பு?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.