Close Menu
    What's Hot

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழ் வழிக் கல்வி இட ஒதுக்கீடு: தொலைநிலைக் கல்விக்கு எதிர்ப்பு – உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு
    தமிழ்நாடு

    தமிழ் வழிக் கல்வி இட ஒதுக்கீடு: தொலைநிலைக் கல்விக்கு எதிர்ப்பு – உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    madurai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தொலைநிலைக் கல்வி மூலம் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும், நேரடியாகக் கல்லூரிக்குச் சென்று பயின்றவர்களுக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும் கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

     

    தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் தாக்கல் செய்த இந்த வழக்கில், “அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தகுதி முழுவதையும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நேரடியாகக் கல்லூரியில் பயில்பவர்கள் முழுவதுமாகத் தமிழில் பயில்வது உறுதி செய்யப்படுகிறது. ஆனால், தொலைநிலைக் கல்வி வாயிலாகப் பயின்றவர்கள், எந்த வழியில் படித்தாலும், தமிழ் வழியில் பயின்றதாகச் சான்றிதழ்களைப் பெறுகின்றனர். இதனால், உண்மையாகத் தமிழ் மொழியில் பயின்றவர்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பெற முடியாத நிலை உருவாகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

     

    மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) செயலர் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தலைவர் ஆகியோர் இந்த விஷயத்தில் தவறான வழியைப் பின்பற்றுவதாகவும், இது தொடர்பாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

     

    எனவே, “TNPSC மற்றும் TRB ஆகியவை நேரடியாகக் கல்லூரிக்குச் சென்று பயின்றவர்களுக்கு மட்டும் தமிழ் வழியில் பயின்றோருக்கான 20% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும், தொலைநிலைக் கல்வியில் பயின்றோருக்கு இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்” என மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

     

    இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் அமர்வு, “இந்த வழக்கை தொடர்புடைய தனி நீதிபதி முன்பாகப் பட்டியலிட வேண்டும்” என உத்தரவிட்டது.

    Distance Education Govindasamy Judges Madras High Court Madurai Bench Maheswaran Public Interest Litigation Reservation Tamil Medium Education Thanjai TNPSC TRB Verdict இட ஒதுக்கீடு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கோவிந்தசாமி தஞ்சை தமிழ் வழி கல்வி தீர்ப்பு தொலைநிலைக் கல்வி நீதிபதிகள் பொதுநல வழக்கு மகேஸ்வரன்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமது பாட்டிலில் அளவைக் குறிப்பிடக்கோரிய வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
    Next Article “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் ஸ்ரீபெரும்புதூரில்: முதல்வர் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு
    Editor TN Talks

    Related Posts

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    December 25, 2025

    எச்-1பி விசா வழங்க புதிய நடைமுறை அமல்: அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு சிக்கல்

    December 25, 2025

    இயேசுபிரான் காட்டிய அன்பு, சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    December 25, 2025

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    December 25, 2025

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.