Close Menu
    What's Hot

    திரைப்பாடல்களில் தனி முத்திரை பதித்த கலைஞர் கருணாநிதி

    முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாள்!- ஒரு நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் இதயம்!

    இத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழ்நாட்டில் இயல்பை விட அதிக மழை பெய்யும்… வானிலை மையம் எச்சரிக்கை…
    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் இயல்பை விட அதிக மழை பெய்யும்… வானிலை மையம் எச்சரிக்கை…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 18
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் அடுத்த மாதம் இயல்பை விட அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஜூன் 1-ம் தேதி முதல் நேற்று வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும், இயல்பை விட 6% குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் தமிழ்நாட்டில் பெரும்பாலான நாட்களின் வெப்பமான சூழ்நிலையே அதிகம் நிலவியதால், மழைப் பதிவு குறைந்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் முதல் தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகமாக மழை பதிவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அந்த வகையில், அடுத்த மாதம் முதல் 2 வாரங்கள் வெப்பசலன மழை தீவிரமாக இருக்கும் என்றும், 3ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் வடகடலோரம், வடக்கு உள்மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பதிவாகக் கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

    இதேப் போல், 18-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட பகுதிகள், கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் எனவும், ஒட்டு மொத்தத்தில் அடுத்த மாதம் இயல்பை விட அதிக மழையும், இயல்பான வெப்பமும் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

    methodology Rain rainfallupdate tamilnadu Weather அதிகமழை கனமழை காலநிலை தமிழ்நாடு புதுச்சேரி மழை வானிலை ஆய்வு மையம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடிகர் சுஷாந்த் சிங் மரணம் முதல்… என்னையும் கொலை செய்ய திட்டம்… நடிகை பரபரப்பு புகார்…
    Next Article மகளிர் உரிமைத் தொகை பெறுவதில் முறைகேடு… 14,000 ஆண்கள் பணம் பெற்றது அம்பலம்…
    Editor TN Talks

    Related Posts

    திரைப்பாடல்களில் தனி முத்திரை பதித்த கலைஞர் கருணாநிதி

    June 3, 2026

    முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாள்!- ஒரு நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் இதயம்!

    June 3, 2026

    இத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரைப்பாடல்களில் தனி முத்திரை பதித்த கலைஞர் கருணாநிதி

    முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாள்!- ஒரு நூற்றாண்டு கண்ட தமிழினத்தின் இதயம்!

    இத்தனை திட்டங்களா? – மலைக்க வைக்கும் கலைஞர் கருணாநிதி!

    கலைஞர் வழங்கிய இசைஞானிப் பட்டம்

    தமிழினக் காவலர் கலைஞர்;  நூற்றாண்டைக் கடந்தும் நிலைக்கும் புகழ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.