Close Menu
    What's Hot

    பழனி கோவில் நில விவகாரம்… யாரைக் காப்பாற்றுகிறார்கள் அமைச்சர்கள்? – திமுக கேள்வி  

    பெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!. மாநில அளவில் புதிய வேலைவாய்ப்பு திட்டம்!. தமிழக அரசு அதிரடி!

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னை : காதல் தகராறில் மாணவர் கார் ஏற்றி கொலை… மேலும் ஒருவர் கைது…
    தமிழ்நாடு

    சென்னை : காதல் தகராறில் மாணவர் கார் ஏற்றி கொலை… மேலும் ஒருவர் கைது…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2025Updated:July 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 22
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் காதல் தகராறில் நண்பருக்கு உதவிய கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவை சேர்ந்தவர் நிதின்சாய். 21வயதான இவர் சென்னையில் உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்துள்ளார். கடந்த 28-ம் தேதி இரவு திருமங்கலத்தில் தனது நண்பர் மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

    தொடர்ந்து தனது கல்லூரி நண்பர் அபிஷேக்குடன் இருசக்கர வாகனத்தில் நிதின்சாய் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திருமங்கலம் பள்ளி சாலை அருகே வந்த போது, இருசக்கர வாகனத்தின் மீது அதி வேகத்தில் வந்த சொகுசு கார் பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நிதின்சாய், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அபிஷேக் படுகாயமடைந்தார்.

    தகவலறிந்து வந்த போலீசார் நிதின்சாய் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த அபிஷேக் சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் இது திட்டமிடப்பட்ட கொலை என்பது தெரியவந்தது.
    கொலையான நிதின்சாயின் நெருங்கிய நண்பரான வெங்கடேஷ், பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். மாணவி வெங்கடேஷின் காதலை மறுத்ததோடு, தனது நண்பர், பிரணவ் இது குறித்து கூறியிருக்கிறார். பிரணவ் வெங்கடேஷை மிரட்ட, அதனை அவர் பெரிதாக பொருட்படுத்தாமல் மீண்டும் மாணவியை காதலிக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

    சம்பவத்தன்று மோகன் என்பவரது பிறந்தநாளில் வெங்கடேஷ், நிதின்சாய், அபிஷேக் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு வந்த பிரணவ், வெங்கடேஷின் காலில் காரை ஏற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷின் நண்பர் நிதின்சாய், அபிஷேக் ஆகியோர் பிரண்வின் சொகுசு காரை சேதப்படுத்தியுள்ளனர். இதற்கு பழிவாங்க, பிரணவ், நிதின்சாய் சென்ற இருசக்கர வாகனத்தை மோதி அவரை கொலை செய்துள்ளார்.

    விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பதிவு செய்த போலீசார், அதனடிப்படையில் பிரணவ், சுதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அத்தோடு, தலைமறைவாக இருந்த திமுக பிரமுகரின் பேரனான சந்துருவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை இந்த கொலை வழக்கில் மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரஷ்யா, ஜப்பான் கடலோர பகுதிகளில் சுனாமி… இந்தியர்களுக்கு எச்சரிக்கை…
    Next Article திமுக ஆட்சியில் 20 ஆணவப்படுகொலைகள்… எடப்பாடி பழனிசாமி சாடல்…
    Editor TN Talks

    Related Posts

    பழனி கோவில் நில விவகாரம்… யாரைக் காப்பாற்றுகிறார்கள் அமைச்சர்கள்? – திமுக கேள்வி  

    July 17, 2026

    பெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!. மாநில அளவில் புதிய வேலைவாய்ப்பு திட்டம்!. தமிழக அரசு அதிரடி!

    July 17, 2026

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழனி கோவில் நில விவகாரம்… யாரைக் காப்பாற்றுகிறார்கள் அமைச்சர்கள்? – திமுக கேள்வி  

    பெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!. மாநில அளவில் புதிய வேலைவாய்ப்பு திட்டம்!. தமிழக அரசு அதிரடி!

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!

    ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அத்தியாயம் முடிவு; சர்வதேச அரங்கிலிருந்தும் விடை?

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் – எப்படி நிரப்பப்படுகிறது ஹைட்ரஜன்?…. சுவாரஸ்யத் தகவல்…

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.