Close Menu
    What's Hot

    STAGE கிடையாது.. மீண்டும் அதே ஸ்டைலில்.. திருச்சியில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!!

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின்… காதலி வெளியிட்ட வீடியோ…
    தமிழ்நாடு

    ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின்… காதலி வெளியிட்ட வீடியோ…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 31, 2025Updated:July 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 21
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உண்மை தெரியாமல் யாரும் எதுவும் பேச வேண்டாம் என நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் காதலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    நெல்லையில் ஐ.டி ஊழியர் கவின் செல்வகணேஷ் என்பவர் காதலியின் சகோதரரால் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டு சிறையில அடைக்கப்பட்டுள்ளார். அவர்களது போலீஸ் பெற்றோர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    கவினின் கொலை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் கவினின் காதலி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,

    “கவினின் கொலையில் என் பெற்றோருக்கு தண்டனை கொடுப்பது தவறு. என் அப்பா, அம்மாவுக்கு எதுவும் தெரியாது. கவினுக்கும் எனக்குமான உறவு எங்களுக்கு மட்டுமே தெரியும். என் அப்பா, அம்மாவை விட்டுவிடுங்கள். உண்மை தெரியாமல் பேச வேண்டாம். என் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

    சுர்ஜித்தின் சகோதரி மேலும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நானும் கவினும் உண்மையாகக் காதலித்தோம். கொஞ்சம் செட்டில் ஆக நேரம் தேவைப்பட்டது. மே 30 ஆம் தேதி சுர்ஜித்தும் கவினும் பேசியிருக்கிறார்கள். அந்த நேரமே அப்பாவிடம் சொல்லிவிட்டான். அப்பா என்னிடம், ‘நீ லவ் பண்ணுறியா?’ என்று கேட்டார். அப்போது நான் ‘இல்லை’ என்று சொன்னேன். ஏனென்றால், கவின் என்னிடம் டைம் கேட்டிருந்தான்.

    “நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் உண்மை தெரியாம எதும் சொல்லாதீங்க”கவினுடன் பழகிய இளம்பெண் சுபாஷினி வெளியிட்ட பரபரப்பு வீடியோ #Tirunelveli #Nellai #NellaiCase #NellaiKavinCase #Nellaikavin #Kavincase #Subhashini #kavin pic.twitter.com/CTEpayuHsu

    — TNTalks (@tntalksofficial) July 31, 2025

    அதனால், அப்பாவிடம் அப்போது சொல்லவில்லை. அதற்குள் இப்படி ஆகிவிட்டது. இரண்டு பேருக்கும் இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், கவினுக்கு போன் செய்த சுர்ஜித், ‘பொண்ணு கேக்க வாங்க’ என்று சொல்லியிருக்கிறான். ‘எனக்கு திருமணம் முடிந்தால்தான் என்னுடைய தொழிலைப் பார்க்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறான். அது எனக்குத் தெரியும்.

    அன்று என்ன நடந்தது என்றால், கவினின் தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்க கவின், அவனுடைய அம்மா, மாமா வந்திருந்தார்கள். நான் சிகிச்சை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது கவினின் அம்மா, மாமாவிடம் பேசிவிட்டு கவின் வெளியே சென்றுவிட்டான். அதன்பிறகே கவினைத் தேடினோம். போன் செய்தபோது அவன் எடுக்கவில்லை. அதன்பிறகுதான் இப்படி நடந்துவிட்டது. தேவையில்லாமல் யாரும் இஷ்டத்திற்கு வதந்தியை கிளப்ப வேண்டாம். உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள். என் அப்பா, அம்மாவுக்கு இதில் எந்த சம்மந்தமும் கிடையாது,. இதை இத்துடன் விட்டுவிடுங்கள். விட்ருங்க அவ்வளவு தான்” என்று கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை தரிசன வழக்கு
    Next Article 5. டெஸ்ட் கிரிக்கெட் : வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சுப்மன் கில்…
    Editor TN Talks

    Related Posts

    STAGE கிடையாது.. மீண்டும் அதே ஸ்டைலில்.. திருச்சியில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!!

    June 1, 2026

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    STAGE கிடையாது.. மீண்டும் அதே ஸ்டைலில்.. திருச்சியில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!!

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    பயிர்க்கடன் தள்ளுபடியில் தவெக பச்சை துரோகம்!. திட்டமிட்டு ஏமாற்றும் வேலையா? தங்கம் தென்னரசு ட்வீட்!

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    Trending Posts

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    June 1, 2026

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    June 1, 2026

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    June 1, 2026

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.