Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»மாவட்டம்»விழுப்புரம் : ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு… இளைஞர் கைது…
    மாவட்டம்

    விழுப்புரம் : ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு… இளைஞர் கைது…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2025Updated:August 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விழுப்புரத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை, பணம் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனையை சேர்ந்தவர் சீதை. 60 வயதான அவர், அதே ஊரைச் சேர்ந்த 63 வயதான லட்சுமி என்பவரும் கடந்த 30-ம் தேதி இரவு கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தாம்பரத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். அதே ரயிலில் ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் அருகே ஆனந்தபுரத்தை சேர்ந்த மோகித் என்ற 20 வயது இளைஞரும் பயணம் செய்தார்.

    சீதை தனது பர்சில், 5 சவரன் நகை மற்றும் ரூ.13,000 பணமும் வைத்திருந்ததை, நோட்டமிட்ட மோகித் அதை திருட திட்டமிட்டுள்ளார். நள்ளிரவு 1.20மணியளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ரயில் மெதுவாக சென்ற போது, மோகித் திடீரென சீதை வைத்திருந்த பர்சை பறித்துக் கொண்டு ஓடு ரயிலில் இருந்து குதித்துள்ளார்.

    இதை எதிர்பாராத சீதை கூச்சலிட்டதோடு, ரயிலில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். தொடர்ந்து சக பயணிகளுடன் இணைந்து மோகித்தை தேட, ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த மோகித்தின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ஓட முடியாமல் நின்று கொண்டிருந்தார். அவரை கையும், களவுமாக பயணிகள் பிடித்து, சீதையின் பர்சை அவரிடமே ஒப்படைத்தனர்.

    தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த மோகித்தை கைது செய்து சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Chain snaching tamilnadu thief arrest vilupuram செயின் பறிப்பு தமிழ்நாடு திருடன் கைது ரயில் பயணம் விழுப்புரம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆணவக் கொலை செய்யப்பட்ட கவின்… உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்…
    Next Article மானாமதுரை – ராமேஸ்வரம் இடையேயான ரயில் சேவை… பகுதியளவு ரத்து…
    Editor TN Talks

    Related Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    June 1, 2026

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

    June 1, 2026

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.