Close Menu
    What's Hot

    டெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து!. 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

    ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!

    7 வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை? – நெய்வேலியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அன்புமணி பொதுக்குழு – தடை கோரி ராமதாஸ் ஆதரவாளர் வழக்கு
    அரசியல்

    அன்புமணி பொதுக்குழு – தடை கோரி ராமதாஸ் ஆதரவாளர் வழக்கு

    Editor TN TalksBy Editor TN TalksAugust 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pmk11 1754122197
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    தந்தை ராமதாஸ் – மகன் அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரு தரப்பிலும் பாமக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ராமதாசால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கடந்த 2022-ம் ஆண்டு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாகவும்,

    புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 30ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்தால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு உள்ளிட்டவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது என கடந்த ஜூலை ஏழாம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ள நிலையில், செயல் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், குழப்பம் விளைவிக்கும் வகையிலும் செயல்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தன்னைத்தானே தலைவர் என கூறிக்கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும், கட்சி தலைவரும், நிறுவனருமான ராமதாசின் அனுமதியில்லாமல் அன்புமணி 100 நாள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுக்குழு கூட்டம் வரும் ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என உள்நோக்கத்துடன் அன்புமணி அறிவித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ள முரளிசங்கர் தரப்பினர், அன்புமணியின் இந்த அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    எனவே, அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Anbumani Ramadoss Anbumani Ramadoss latest news PMK Ramadoss Anbumani conflict
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசி.வி. சண்முகத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்- உச்சநீதிமன்றம்
    Next Article திருப்பூர் S.S.I சண்முகவேல் கொலை… குற்றவாளிகள் தந்தை – மகன் சரண்…
    Editor TN Talks

    Related Posts

    7 வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை? – நெய்வேலியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

    June 3, 2026

    போதை பொருட்களுக்கு ஃபுல் ஸ்டாப்..!! மாஸ் காட்டும் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்..!!

    June 3, 2026

    சொத்து விவரத்தை மறைத்தாரா எடப்பாடி பழனிசாமி? வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து!. 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!.

    ஐ.நா. பொதுச்சபைத் தலைவரானார் வங்கதேசத்தின் டாக்டர் கலீலூர் ரகுமான்..!!

    7 வயது மகனைக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை? – நெய்வேலியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

    நோ பெட்ரோல்… நோ பொல்யூஷன்… இன்று உலக சைக்கிள் தின ஸ்பெஷல்!

    போதை பொருட்களுக்கு ஃபுல் ஸ்டாப்..!! மாஸ் காட்டும் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.