Close Menu
    What's Hot

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை! நாடாளுமன்றத்தில் இன்று புதிய சட்ட மசோதா தாக்கல்!
    Featured

    ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை! நாடாளுமன்றத்தில் இன்று புதிய சட்ட மசோதா தாக்கல்!

    Editor web1By Editor web1July 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    024 parliment
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்குத் தேசிய கீதத்திற்கு இணையான சட்டப் பாதுகாப்பை வழங்கும் புதிய மசோதா, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று (ஜூலை 20) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘தேசிய அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா 2026’ (Prevention of Insults to National Honour Amendment Bill) என்ற புதிய சட்டத் திருத்த மசோதாவை இன்று அறிமுகப்படுத்துகிறார். தற்போதைய சட்டப்படி தேசியக் கொடி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேசிய கீதம் (ஜன கண மன) ஆகியவற்றை அவமதிப்போருக்கு மட்டுமே தண்டனை வழங்கும் வழிவகை உள்ளது. தற்போது கொண்டு வரப்படும் புதிய திருத்தத்தின் மூலம் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலும் இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்படுகிறது.

    இந்த புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால், ‘வந்தே மாதரம்’ பாடலை யாரேனும் வேண்டுமென்றே அவமதித்தாலோ, அதனைப் பாடுவதைத் தடுத்தாலோ அல்லது அது பாடப்படும் கூட்டங்களில் இடையூறு விளைவித்தாலோ அது குற்றவியல் நடவடிக்கையாகக் கருதப்படும். அவ்வாறு குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

    வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ பாடல் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியப் பங்காற்றியது. இந்தப் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும், தேசியப் பாடலுக்கு உரிய சட்ட அங்கீகாரத்தை வழங்கும் நோக்கிலும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை மற்றும் தனிமனித சுதந்திரத்திற்கு எதிராக இந்த சட்டம் அமையக்கூடும் என்று கூறி எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் இன்று புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏலகிரி கோடை விழா நிறைவு: பார்வையாளர்களைக் கவர்ந்த நாய் கண்காட்சி! பரிசுகள் வழங்கி கௌரவிப்பு!
    Next Article தமிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
    Editor web1
    • Website

    Related Posts

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    July 20, 2026

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    July 20, 2026

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    திருவிழா பேனரில் திரிஷாவுடன் சிஎம் விஜய் படம்.. அகற்றிய போலீஸ்; பாய்ந்தது வழக்கு..!!

    வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்..!! வாயைக் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.