Close Menu
    What's Hot

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»மாவட்டம்»ஏலகிரி கோடை விழா நிறைவு: பார்வையாளர்களைக் கவர்ந்த நாய் கண்காட்சி! பரிசுகள் வழங்கி கௌரவிப்பு!
    மாவட்டம்

    ஏலகிரி கோடை விழா நிறைவு: பார்வையாளர்களைக் கவர்ந்த நாய் கண்காட்சி! பரிசுகள் வழங்கி கௌரவிப்பு!

    Editor web1By Editor web1July 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 20 07h56m57s820
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஏலகிரி மலையில், 2 நாட்களாக நடைபெற்ற கோடை விழா இன்றுடன் இனிதே நிறைவடைந்தது.

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஏலகிரியில் கோடை விழா நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற விழாவின் நிறைவு நாளான நேற்று (ஜூன் 19) பொதுமக்களின் வருகை வழக்கத்தை விட மிக அதிகமாகக் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்து கோடை விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.

    சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவின் முக்கிய ஈர்ப்பாக நாய் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றன. இதில் திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து உரிமையாளர்கள் தங்களது வளர்ப்பு நாய்களைக் அழைத்து வந்திருந்தனர். 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான நாய்கள் இப்போட்டியில் பங்கேற்றன.

    நாய்களின் உடல் அமைப்பு மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் அவை சிறியது, நடுத்தரம் மற்றும் பெரியது என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்குக் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

    கோடை விழாவையொட்டி அரசுத் துறைகளின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் சிறப்புக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் சிறப்பாக அரங்கம் அமைத்திருந்த பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஆகிய துறைகளின் அரங்குகளுக்குச் சிறந்த அரங்குக்கான நினைவுப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘எலும்பு இருக்காது, உடைத்து அனுப்புவோம்’- முதல்வர் விஜய் பற்றி சர்ச்சை பேச்சு: விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது!
    Next Article ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை! நாடாளுமன்றத்தில் இன்று புதிய சட்ட மசோதா தாக்கல்!
    Editor web1
    • Website

    Related Posts

    மதுரை; அரசு வேலை வாங்கித் தர்றதா லஞ்சம் கேப்பாங்க… ஏமாந்துறாதீங்க…. அல்வா கொடுத்து நூதன விழிப்புணர்வு பிரசாரம்

    July 20, 2026

    வாணியம்பாடி ; 4 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய்… பதறவைக்கும் பகீர் சிசிடிவி காட்சி!

    July 20, 2026

    பாலக்கோடு: ’நண்பன் இறந்ததால் வாழ விரும்பவில்லை’ – கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்த +2 மாணவி

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    திருவிழா பேனரில் திரிஷாவுடன் சிஎம் விஜய் படம்.. அகற்றிய போலீஸ்; பாய்ந்தது வழக்கு..!!

    வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்..!! வாயைக் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.