Close Menu
    What's Hot

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»‘எலும்பு இருக்காது, உடைத்து அனுப்புவோம்’- முதல்வர் விஜய் பற்றி சர்ச்சை பேச்சு: விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது!
    Featured

    ‘எலும்பு இருக்காது, உடைத்து அனுப்புவோம்’- முதல்வர் விஜய் பற்றி சர்ச்சை பேச்சு: விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது!

    Editor web1By Editor web1July 20, 2026Updated:July 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 07 20 at 8.05.37 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது அரசு குறித்து அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய வழக்கில், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் விஜய் மற்றும் தமிழக அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார்.

    vlcsnap 2026 07 20 07h45m50s296

    சட்டமன்றத்தை கூட்டிப் பார், அப்போது உனக்கு உடலில் எலும்பு இருக்காது என்றும் அதை உடைத்து விட்டுத்தான் அனுப்பி வைப்போம் என்றும் முதலமைச்சர் விஜய்யை குறிப்பிட்டு பேசியதாக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. கைது செய்துவிடுவார்கள் என்று பயந்து கரூரிலிருந்து இரவோடு இரவாக கேராவனில் யாரை வைத்துக்கொண்டு ஓட்டம் எடுத்ததாகவும் அவர் பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    vlcsnap 2026 07 20 07h45m17s266

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய்விட்டதாகவும், 3 வயது குழந்தை முதல் 95 வயது பாட்டி வரை தவெக ஆட்சியில் யாரும் சுதந்திரமாக நடக்க முடியவில்லை என்று திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றம்சாட்டி பேசினார்.  ஊழலின் மொத்த உருவமாகத் முதலமைச்சர் விஜய் திகழ்வாகவும் அவர் பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் விதமாகவும் இருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசிய சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவின. இதனைத் தொடர்ந்து, அமைதியைக் குலைக்கும் வகையில் பேசியது, பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை கைது செய்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவறட்சி, உரம் தட்டுப்பாட்டால் சாகுபடியைக் கைவிடும் காஞ்சிபுரம் விவசாயிகள்!
    Next Article ஏலகிரி கோடை விழா நிறைவு: பார்வையாளர்களைக் கவர்ந்த நாய் கண்காட்சி! பரிசுகள் வழங்கி கௌரவிப்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    July 21, 2026

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    July 21, 2026

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    பெரம்பூரில் இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை: தவெக விளக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.