Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»சூடு பிடிக்கும் தமிழக அரசியல்… திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு
    அரசியல்

    சூடு பிடிக்கும் தமிழக அரசியல்… திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 8, 2025Updated:September 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை கூடுகிறது.

    தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. ஆளுங்கட்சி சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், வெளிநாட்டு முதலீடுகள் என பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பில், மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    புதிதாக கட்சி தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், வருகின்ற 17ஆம் தேதி முதல் மக்களை நேரடியாக சந்திக்க சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளார். தனித்து களம் கண்டு வரும் சீமான், மாடுகள் – மரங்களிடையே கூட பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்.

    இதற்கிடையில் கடந்த 5ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ‘அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அல்லது நீக்கி வைக்கப்பட்டுள்ள அனைவரையும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருந்தார். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்களுக்கு கெடு விதித்து இருந்தார்.

    இது அதிமுகவில் புயலை கிளப்பிய நிலையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து செங்கோட்டையன் உட்பட அவரது ஆதரவாளர்கள் விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு அதிமுக கட்சி வட்டாரத்தில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகின்றன.

    இதற்கிடையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, மு.க.ஸ்டாலின் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

    இந்நிலையில், நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் வருகின்ற, 2026ஆம் சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இது குறித்து திமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்” 09-09-2025 செவ்வாய் கிழமை நண்பகல் 12.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அப்போது திமுக முப்பெரும் விழா, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது. ஆகையால், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

    AIADMK District Secretaries Meeting DMK M.k. stalin Sengottaiyan அதிமுக செங்கோட்டையன் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மு. க. ஸ்டாலின்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெறலாம் – எச்சரிக்கும் பா. சிதம்பரம்
    Next Article புஸ்ஸி ஆனந்த் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு
    Editor TN Talks

    Related Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    June 9, 2026

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    June 9, 2026

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.