Close Menu
    What's Hot

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அதிமுக காணாமல் போகும்… விஜய் களத்தில் இருக்கிறார்…  புகழேந்தி எச்சரிக்கை
    அரசியல்

    அதிமுக காணாமல் போகும்… விஜய் களத்தில் இருக்கிறார்…  புகழேந்தி எச்சரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 15, 2025Updated:September 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EPS and Vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுகவுக்கு தவெகவுக்கும் தான் போட்டி என்பது போல திருச்சி உள்ளது என்றும் அவர்கள் ஒன்றிணையவில்லை என்றால் அதிமுக காணாமல் போகும் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

    அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அல்லது நீக்கி வைக்கப்பட்டுள்ள அனைவரையும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 5ஆம் தேதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருந்தார். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்களுக்கு கெடு விதித்து இருந்தார்.

    இது அதிமுகவில் புயலை கிளப்பிய நிலையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து செங்கோட்டையன் உட்பட அவரது ஆதரவாளர்கள் விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டார். இந்த சூழலில் ஹரித்துவார் செல்வதாக கூறி திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன், அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.

    இதற்கிடையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ‘அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தொண்டர்களின், பொது மக்களின் கருத்துகளை மனதில் வைத்துக்கொண்டு வலிமை பெறுவதற்கு, 2026-ல் வெற்றி பெறுவதற்கும் அதிமுக ஒன்றுபட வேண்டும்” என கூறினார்.

    இந்நிலையில் முன்னாள் நிர்வாகி புகழேந்தி பேசுகையில், “செங்கோட்டையனை சந்தித்து பேசினேன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை அனைவரும் ஒன்றிணைந்து மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர்கள் கோரிக்கையை ஏற்கவில்லை.

    இவர்கள் இன்னமும் ஒன்றிணையவில்லை என்றால் அதிமுக காணாமல் போகும். விஜய் களத்தில் இருக்கிறார். திமுகவுக்கு தவெகாவுக்கும் தான் போட்டி என்பது போல திருச்சி உள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இன்னொரு முறை கூட்டத்திற்குள் வந்தால் அடித்து உதைத்து விடுவேன் என்று மிரட்டிய ஒரே தலைவர் எடப்பாடி பழனிச்சாமியாக தான் இருப்பார்.

    ஆனால் அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது. எம்ஜிஆர், பேரறிஞர் அண்ணா போன்றவரின் புகைப்படத்தை விஜய் பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை” என்று தெரிவித்தார்.

    ADMK AIADMK DMK Pugazhendi pugazhendii Sengottaiyan Thaveka Vijay அதிமுக செங்கோட்டையன் தவெக திமுக புகழேந்தி விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்க்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது; கூட்டம் ஓட்டாக மாறாது.. ஐ.பெரியசாமி விமர்சனம்
    Next Article தமிழகத்தில் இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழப்பு…
    Editor TN Talks

    Related Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.